படித்ததில் பிடித்த சில வரிகள்
(நன்றி – திரு மொஹம்மது சலீம் )

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை;
தீமையையும் விரட்டுகிறது.
– வால்டேர்
Ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள்.
குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள்.
முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள்
ஒரு புதையல்
-நெப்போலியன்
Ø பெண்ணாக ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க
இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்.
– ஆஸ்கார் ஒயில்ட்
Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே
நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது.
– ஹாபர்ட்.
Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத
பெண்ணும் மதிப்பு இல்லாதவை!
– பாலஸ்தீனப் பழமொழி
Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக்
காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக்
காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
-ப்ரெட்ரிக் நீட்சே
Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு
தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
கடல் பயணத்திற்குச் செல்லும்போது
இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்
(ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்).
– வின்ஸ்டர் லூயிஸ்
-இந்த கருத்தை நான் இப்படியே ஏற்கவில்லை.
இப்படி மாற்றினால் பொருத்தமாக இருக்கும்
என்று நினைக்கிறேன்.
-திருமணம் செய்ய துணையைத் தேர்ந்தெடுக்கும்போது
மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
(ஏனென்றால் – பாதிப்பு இரு தரப்பிலிருந்தும்
ஏற்படுகிறது !)
Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும்
மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்
Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும்
அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்
Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில்
ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்
Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளியே செல்கிறது.
Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.
Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற
வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.
Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு
திறக்கிறது. ஆனால், நாம்
மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு
திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.



[…] […]