வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு !
கடந்த 2 வருடங்களாக நிறையத் தடவை வைரமுத்து கூறி
விட்டார் – தொலைகாட்சி நேர்காணல்களிலும், வார இதழ்களில்
கட்டுரைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கூட – தான் உலகில்
எந்த மூலையில் இருந்தாலும், நாள்தோறும் அதிகாலை
5 மணிக்கு கலைஞருடன் தொலைபேசியில் உரையாடுவது
தவறாது என்று.
கடந்த சில வருடங்களாகவே இது தொடருகிறது
என்றும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். நான் கூட
நினைத்ததுண்டு வயது வித்தியாசம் இருந்தாலும், அதிகாரத்
தொலைவு இருந்தாலும், தமிழ் இவர்களை எவ்வளவு
நெருக்கமாக்கி விட்டது என்று.
மூன்று வாரங்களுக்கு முன்னர் வள்ளுவர் கோட்டத்தில்
கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தினர் கலைஞருக்கு
“தமிழ்த் தலைமகன்” என்று பட்டம் அளித்த விழா நிகழ்ச்சியில்
பேசும்போது கலைஞரே தமது உரையில், கொல்கத்தா
தமிழ்ச் சங்கத்தினர் வைரமுத்துவை கலந்து ஆலோசித்த பின்னரே
இந்த பட்டத்தைத் தீர்மானித்தனர் என்று குறிப்பிட்டார்.
(கலைஞரின் தந்தையின் பெயர் “தமிழ்த்தலை” என்றிருந்தால்
ஒழிய இந்தப் பட்டம் வேறு எந்த விதத்திலும் பொருந்தாது
என்று சோ கூறியதை – வசதியாக மறந்து விடலாம் !)
தனக்கு என்ன கொடுத்துள்ளனர் -என்ன கொடுக்கலாம்
என்பதைச் சரியாகச் சொல்வார் வைரமுத்து என்றும்
சிலேடயாகச் சொன்னார் கலைஞர் !
ஆக கலைஞருக்கு பட்டங்களோ அல்லது வேறு
எதாவதோ தர விரும்புவோர் வைரமுத்துவைத் தொடர்பு
கொள்ளலாம் என்று அவரும் பொது மேடையிலேயே
அங்கீகாரம் கொடுத்து விட்டார் !
தற்போது திமுக ஆதரவு வார இருமுறை இதழான
நக்கீரன் பத்திரிக்கையிலேயே வெளிவந்திருக்கும்
செய்தி ஒன்று கீழே –
இப்போது தான் புரிகிறது – கலைஞருக்கும்,வைரமுத்துவுக்கும்
உள்ள தொடர்பு எத்தகையது என்று.
இவர்களது அதிகாலைத் தொலைபேசி அழைப்புகள் எல்லாம்
தமிழ் பற்றியது என்றும் கவிதை பற்றியது என்றும் அவர்களது
நட்பைப் பற்றியது என்றும் இவ்வளவு நாட்களாக அறியாமை
காரணமாக நினைத்திருந்தேன்.
ஆனால் இப்போது நக்கீரன் படித்த பிறகு தான் சில விஷயங்கள்
தெரிய வருகின்றன –
பேராசிரியர் அன்பழகனின் மகன் கிரானைட் கம்பெனி நடத்துவதும்,
அவருக்கு(நிதி அமைச்சரின் மகன் !) தமிழ்நாடு அரசாங்கத்திடம்
இருந்து கிரானைட் ஏலம் கிடைத்திருப்பதும்,
வைரமுத்துவின் நண்பர்/உறவினர் கோடீஸ்வரர் பி.ஆர்.
பழனிச்சாமி அவர்களுக்கும் கிரானைட் ஏலம் கிடைத்திருப்பதும்,
இது சம்பந்தமாக வைரமுத்து அன்பழகனிடமே பிரச்சினை
பண்ணி இருப்பதும்,
பின்னர் வைரமுத்து இது விஷயத்தில் நேரடியாகவே கலைஞரிடம்
பேசி இருப்பதும்,
டாமின் சேரிமனையே தான் விரும்புவது போல் சொல்ல
வைத்திருப்பதும் –
அடேயப்பா -அவர்களுக்குத்தான் எவ்வளவு பொறுப்புகள் !
எவ்வளவு கவலைகள் !
86 வயதானாலும் ஓய்வில்லாமல் உழைப்பது எல்லாம் எதற்காக
என்று யாருக்குத் தெரிகிறது ?
தமிழ் நாட்டின் கனிம வளங்களை எல்லாம் யார் யாருக்குக்
கொடுப்பது – யார் யார் மூலம் எவ்வளவு எடுப்பது என்பது
பற்றித் தான் எவ்வளவு கவலைகள் !
இவற்றைப் பற்றி எல்லாம் அதிகாலையில் பேசாமல்,
அதிகாரிகளை வைத்துக்கொண்டா பேச முடியும் ?
அப்பப்பா ! எடுக்கவும் கொடுக்கவும் தான்
எவ்வளவு துறைகள் அரசாங்கத்திடம் !
அதிகாரமும் நட்பும் எது எதற்கெல்லாம்
பயன்படுகிறது !!




நிஜமான சாமியாரா இல்லை ….