பெயரில் என்ன இருக்கிறது ?!!!
பெயரை வைத்தே ஒரு கட்டுரை எழுதி விட முடியும்
என்று நான் நினைத்ததே இல்லை !
என் அனுபவத்தில், என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில்,
தமிழ்நாட்டு வழக்கத்தின்படி,
சாதாரணமாக ஒருவர் தன் பெயருடன், தந்தையின்
பெயரைச் சேர்த்துக் கொள்வார்கள்.
முன்பெல்லாம் தந்தையின் பெயரை தன் பெயருக்கு முன்னால்
போடுவார்கள்.இப்போது அது பின்னால் போய் விட்டது.
முன் பின் ஆகி விட்டது – சரி -போனால் போகிறது!
சிலர் – பொதுவாக கலைஞர்கள் – தங்கள் ஊர்ப் பெயரையும்
முன்னால் சேர்த்துக்கொள்வது உண்டு ( உம் – குன்னக்குடி,
திருவாடுதுறை, அரியக்குடி, செம்பை, மஹாராஜபுரம் ).
ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் தாயின் பெயரையும்
சேர்த்துக்கொள்ளலாம் என்று அரசு ஆணயே வெளியிடப்பட்டது.
(ஆனால் இன்று வரை யாரும் சேர்த்துக்கொள்ளக்காணோம் )
கீழே சில பெயர்களைத் தருகிறேன்.
என்ன காரணத்திற்காக அவர்கள் பெயர் இப்படியாகி விட்டது
என்று யாராவது சரியாகச் சொன்னால் –
இனி நான் – ஒரு மாத காலத்திற்கு –
வலையைப் பின்னி உங்களை எல்லாம் வதை செய்வதையே
விட்டு விடுகிறேன் !
பெயருடன் எதை எதை எல்லாம் சேர்த்துக்கொள்ளலாம்,
அதிக பட்சம் எவ்வளவு இனிஷியல்கள் வரை
சேர்த்துக்கொள்ளலாம் என்று சட்டம் எதையாவது,
யாராவது காட்டினால் – என் சொத்தில் பாதியை எழுதித்தந்து
விடுகிறேன் !
பெயருடன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா,
மாமனார், மாமியார் பெயர்களை எல்லாம் சேர்த்துக் கொள்ள
வழியுண்டு என்று யாராவது காட்டினால் –
அவர்கள் என்ன சொன்னாலும் செய்யத்தயாராக இருக்கிறேன்.
E.V.K.S. இளங்கோவன் (தந்தை பெயர் – சம்பத் )
( E.V.K. ஏன் வந்ததோ ?)
கார்த்தி P.சிதம்பரம் (தந்தை பெயர் – சிதம்பரம் )
(P எதற்கு வந்ததோ ?)
ஸ்ரீநிதி சிதம்பரம் (கணவர் பெயர் கார்த்தி )
(மாமனார் பெயர் சிதம்பரம் – அது எப்படி இவர்
பெயருடன் சேர்ந்ததோ ?)
G.K. வாசன் ( தந்தை பெயர் – கருப்பையா )
( K சரி G எதற்கு ?)
M.K. ஸ்டாலின் ( தந்தை பெயர் – கருணாநிதி )
(K சரி M எதற்கு ? )
K.K.S.S.R. ராமச்சந்திரன்
(ஒன்றும் தெரியவில்லை )
M.R.K. பன்னீர்செல்வம்
(புரியவில்லை)
தமிழ் நாட்டில் இது போல் நிறைய புகழ் பெற்ற ( ! )
பெயர்கள் இருக்கின்றன.
இப்போதைக்கு இவ்வளவு தான் நினைவுக்கு வந்தது !
சொல்ல மறந்து விட்டேன் – இன்னுமொரு முக்கியமான
விஷயம் –
தமிழ் நாட்டின் முதல் குடும்பம் – முதல்வர் குடும்பம்.
முத்தமிழ் வித்தகர், தமிழ் வளர்த்த பெருமான்,
செம்மொழிச் செம்மல் – ரொம்ப சரி.
ஆனால் அவர் குடும்பத்துப் பெயர்களைப் பாருங்களேன் !
கலாநிதி
தயாநிதி
உதயநிதி
ஆதித்யா
ரெட் ஜெயண்ட் மூவீஸ்,
க்ளொவ்டு நைன் மூவீஸ்
சன் டிவி
சன் நியூஸ்
கே டிவி
சுமங்கலி கேபிள் விஷன்




[…] […]