சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் ….
இந்த ஒட்டகங்கள் இரண்டும் ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு
சுமார் 2000 கிலோ மீட்டர் தூரம் கால்நடையாக அழைத்து
வரப்பட்டிருக்கின்றன.
பக்ரீத் -ஐ முன்னிட்டு குர்பான் (பலி/தானம்) கொடுப்பதற்காக !
பண்டிகைக்கு இன்னும் 4-5 நாட்கள் இருப்பதால் அதை
வீணாக்காமல் சொந்தக்காரருக்கு சம்பாதித்துக் கொடுக்க
சிறுவர்களை சவாரி அழைத்துச் செல்கின்றன.
இதைக் கொன்று உண்ணவிருக்கும் நண்பர்களே –
தங்கள் உயிரைக் கொடுத்து, உடலைக்கொடுத்து,
உங்கள் பசியைப் போக்குவதற்காக 2000 கி.மீ. தூரம்
நடந்து வந்திருக்கும் இவற்றைப் பார்த்தால் உங்களுக்கு
இரக்கமாக இல்லையா ?
சாப்பிடுவதற்கு உங்களுக்கு வேறு உணவுப் பொருட்கள்
எவ்வளவோ கிடைக்கும் –
தயவுசெய்து இவற்றை விட்டு விடுங்களேன்.




நிஜமான சாமியாரா இல்லை ….