மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் !
இன்றைய தினம் (23/11/2009) தினமலர் நாளிதழில்
5-ம் பக்கத்தில், ஒரு மூலையில், ஒற்றைப்பத்தியில்,
முக்கியத்துவம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு
செய்தி கீழே –
அதான் முக்கியத்துவம் இல்லாத செய்தி என்று நீங்களே சொல்லி
விட்டீர்களே – பின் அதைப்பற்றி என்ன பேச்சு என்று கேட்பீர்கள் !
திருமதி ராஜாத்தி அம்மாள் அவர்கள் அரசியலில் இல்லை.
அவர் பதவிப்பொறுப்பு எதையும் வகிக்கவில்லை. பின்னர் அவர்
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்றதை தினமலர் செய்தியாகப்
போடுவானேன் ?
பழுத்த பகுத்தறிவாளரான கலைஞர் கருணாநிதி தன் துணைவியார்
இப்படி கோவிலுக்குச் செல்வதை எப்படி
அனுமதித்திருப்பார் என்று யோசிக்கிறீர்களா ?
துணைவியார் அவரிடம் அனுமதி கேட்டிருப்பார் என்று
நினைக்கிறீர்களா ?
அனுமதி கேட்டிருந்தால் கிடைத்திருக்கும் என்று
நினைக்கிறீர்களா ?
அனுமதி கிடைக்கவில்லை என்றால், அவர்
நம் சென்னை தாய்க்குலங்களைப்
போல “கம்முனு கெட” என்று சொல்லி விட்டு
போயிருப்பார் என்று நினைக்கிறீர்களா ?
முன்பு மாரியம்மன் கோவில் தீமிதி விழாவில்
கலந்துகொண்டு விட்டு
திமுக மாவட்டச் செயலாளர் கலைஞரிடம்
வாங்கிக்கட்டிக்கொண்டது நினைவுக்கு வருகிறதா ?
“ஊருக்கு தான் உபதேசம் – உனக்கு இல்லை பெண்ணே”
என்கிற வழக்கு நினைவுக்கு வருகிறதா ?
பகுத்தறிவுக் கவிஞர் கனிமொழி அம்மையார்
தன் மகனுக்கு எப்படி “ஆதித்யன்” என்கிற வடமொழிப்
பெயரை சூட்டினார் என்று எண்ணுகிறீர்களா ?
கவிஞர் கனிமொழி அம்மையாரும் தன் மகன்
நல்ல பக்திமானாக வளரட்டும் என்று நினைத்து
அனுப்பி இருப்பார் என்று தோன்றுகிறதா ?
உங்களுக்கு இது போன்ற கேள்விகள் எல்லாம் தோன்ற
வேண்டும் என்று தான் தினமலர் இந்த செய்தியை
வெளியிட்டிருக்கும் என்று இப்போது தோன்றுகிறதா ?
ஆனால், எனக்கென்னவோ, இது இனமானத்தலைவர்
“மானம்”மிகு திரு வீரமணி அவர்களுக்காகவே
வெளியிடப்பட்ட செய்தி என்று தான் தோன்றுகிறது !!
நாளையே இது ஒரு பிரச்சினையானால் அவர் தானே
வக்காலத்து வாங்கியாக வேண்டும் ? அது தானே
வழக்கம் ? அது தானே அவருக்கு இடப்பட்ட பணி ?
என்னவோ போங்கள். யோசித்து யோசித்து மண்டை
குழம்புகிறது – இந்த செய்தியை …. படிக்காமலே
இருந்திருக்கலாம்…..




நல்லா கேட்டீங்க….கேளுங்க ..கேளுங்க ..கேட்டுக்கிட்டே இருங்க…என்றாவது ஒரு நாள் அவங்களுக்கு கேக்குதான்னு பார்ப்போம்…. 🙂