
பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள ..
மேலே உள்ள செய்தியில் இருப்பது போல் பெண்கள் லட்சத்தில்
ஒருவர் இருக்கலாம். அவருக்கு நம் பாராட்டுக்கள் !
அவரைப்போல் துணிச்சல் இல்லாத சராசரிப் பெண்கள்
செயின்களை பறி கொடுக்கும் நிகழ்வு நாள்தோறும் நடந்து
கொண்டு தான் இருக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும்
சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமாக 17 பெண்கள்
தங்கள் தங்க சங்கிலிகளைப் பறி கொடுத்திருக்கிறார்கள்.
காவல் துறையால் இவர்களைப் பிடிக்கவோ,
கட்டுப்படுத்தவோ முடியாதா ?
நிச்சயம் முடியும் – ஆனால் ?
அவர்கள் கைகள் அரசியல்வாதிகளால் கட்டப்பட்டு
இருக்கின்றனவே !
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடினார் –
“திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது –
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே
இருக்குது. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது “
– அது அந்தக்காலம். வறுமை காரணமாகத் திருடியது
எல்லாம் போயே போய் விட்டது. இல்லாதவர்கள் எல்லாம்
இன்று உழைத்து தான் பிழைக்கிறார்கள்.
மானமாய்ப் பிழைக்கிறார்கள்.
பின் எடுக்கிறவன் யார் ? குடிக்கவும், கூத்தடிக்கவும்,
இன்னபிற வசதிகளையும் அனுபவிக்கவும் தான் இன்று
எடுக்கிறார்கள்/அடிக்கிறார்கள் .
யார் அவர்கள் – ?
அரசியல்வாதிகள் – ஆளும்கட்சிக்காரர்கள் கோடிக்கணக்கிலும்,
அவர்களது அடியாட்கள் லட்சக்கணக்கிலும்,
அவர்களின் பொடியாட்கள்/கூலிப்படைகள்
ஆயிரக்கணக்கிலும் இந்த மாதிரி செயின் திருட்டு, கொலை,
கொள்ளை, கட்டைப் பஞ்சாயத்து
ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள்.
யார் கேட்க முடியும் – யார் தடுக்க முடியும் இவர்களை ?
மக்களுக்கே மரத்துப் போய் விட்டது.
போலீசில் புகார் கொடுத்தால், பிடித்துக்கொடுத்தால்,
கொடுத்தவர் வீடு போய் சேரும் முன்னர்
போலீச்காரருக்கு போன் வந்து விடும் – பெரிய இடங்களிலிருந்து.
பின் ? இவர்கள் வீடு
போய்ச் சேர்ந்து விடுவார்கள்.
இவர்களிடமிருந்து தப்ப வேண்டுமானால் பெண்களுக்கு
ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.
பெண்களே –
நீங்கள் தங்கச்சங்கிலி போட்டு அழகு பார்ப்பதை
எல்லாம் வீட்டோடு வைத்துக்கொள்ளுங்கள் !
வெளியே வரும்போதெல்லாம்
தங்க முலாம் பூசிய, டூப்ளிகேட் நகைகளையே
போட்டு வாருங்கள்.
அதுவும் அசல் தங்கம் போலவே இருக்க வேண்டும் !
யாராவது மிரட்டினால், தயங்காமல்
எடுத்துக்கொடுத்து விடுங்கள் !
பறிக்கும் செயின்கள் எல்லாமே போலியாக இருந்தால் –
ஒரு வேளை வெறுத்துப்போய் கொஞ்ச நாட்களில்
இந்த ஆட்கள் இந்த வேலையைக்
கை விடலாம்.
(ஆனால் வேறு புது வழியை யோசிக்கக்கூடும் !அப்போது
நாமும் மாற்றி யோசிப்போமே ! )



நிஜமான சாமியாரா இல்லை ….