உலக மகா கலைப் படைப்பாளி !
உளியின் ஓசை தமிழ்ப்படம் கலைஞர் அவர்களால்
முழுப் பொறுப்பு ஏற்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
அந்தப் படத்திற்கு அவர் எழுதிய கதை, உரையாடலுக்காக சென்ற
வ்ருடத்தின் சிறந்த கதை, உரையாடல் ஆசிரியராக அவரால்
நியமிக்கப்பட்ட குழு அவரையே
தேர்ந்தெடுத்து விட்டது.
நடைபெறவிருக்கும் பரிசளிப்பு விழாவில்
கமல், ரஜினி, வைரமுத்து, வாலி, குஷ்பு, படைசூழ,
தவிர்க்க முடியாத காரணத்தால் –
தனக்குத் தானே பரிசளித்துக் கொள்ளப்போகிறார்.
இந்த செய்தியின் முக்கியத்துவம் கருதி, அண்மையில்
இந்தப் படத்தை –
சிறிது மெனக்கெட்டே – பார்த்தேன்.
என்ன காரணத்தாலோ –
இந்தப் படத்தைப் பற்றியோ, இந்த செய்தியைப் பற்றியோ
சரியான விமரிசனங்கள் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை !
கலைஞர் தன்னை நாத்திகராக காட்டிக்கொள்பவர் (!)
அப்படியே இருக்கட்டும் – அவர் மஞ்சள் துண்டு மகாத்மியம்
அனைவரும் அறிந்ததே !
ஆனால் சரித்திர நாயகர்களை திரித்துக்காட்ட
அவருக்கு ஏது உரிமை ?
– பழுத்த சிவபக்தனான ராஜ ராஜ சோழனையும்,
அவனது மிகச்சிறந்த அமைச்சரான பிரம்மராயரையும்
அவமானப்படுத்த அவருக்கு என்ன உரிமை இருக்கிறது ?
மாபெரும் சரித்திர நாயகனை –
இவர் படம் என்கிற ஒரே காரணத்திற்காக –
திருநீறு கூட பூச விடாமல் தடுத்து விட்டாரே !
படம் முழுவதும் நெற்றியில்
ஜிகினா காகிதத்தை ஒட்டி கோமாளி போல் வலம் வரச்செய்து விட்டாரே !
அமைச்சர் பிரம்மராயரை வில்லன் போலவும்
சதிகாரனாகவும் சித்தரித்து இருக்கிறார்.(ராஜ ராஜனின் அமைச்சர்
பிரம்மராயர் ஒரு அந்தணர் என்பதும் ராஜராஜனுக்காக்
உயிரையும் விடத்துணிந்தவர் அவர் என்பதும் சரித்திரம் )
ஆனால் அந்த அமைச்சரை –
(அவர் அந்தணர் என்ற ஒரே காரணத்திற்காக (?) )ஓரு கட்டத்தில்
ராஜ ராஜனுக்கு எதிராக சதி செய்பவராகவே சித்தரித்துள்ளார் !
ராஜ ராஜன் புகழ் பாடும் படம் எடுப்பதாக படத்தின் துவக்கத்தில்
கூறி விட்டு அவரால் முடிந்த வரை அந்த சரித்திர நாயகனை –
மாபெரும் வீரனை –
அவமானப்படுத்துவதிலேயே
குறியாக இருக்கிறார்.
தஞ்சை பெரியகோயிலின் பெருமையை கூறுவதற்காக படம்
எடுப்பதாக துவக்க உரையில்
கூறி விட்டு புத்த மதம் தான் எல்லாருக்கும் சிறந்த புகலிடம் என்று
படத்தின் இறுதியில் பறை சாற்றுகிறார்.
இந்து சமயத்தின் மீது
அவருக்கு இருக்கும் வெறுப்பை வெளிப்படுத்த ஒரு
வடிகாலாகவே இந்த படம் அமைந்துள்ளது.
ராஜராஜனையும், அந்த மாபெரும் கலைக் கோயிலை கட்ட
அவனால் எடுக்கப்பட்ட முயற்சிகளையும்,
இதை விட மோசமாக யாராலும் சித்தரிக்க முடியாது.
தமிழர் தலைவர், தமிழ் இனத்திற்கே தலைவர் என்று
(அவர் கட்சியினரால்)துதி பாடப்படுபவர் தமிழுக்கும்,
தரணி போற்றும் தமிழ் மன்னன் ராஜ ராஜனுக்கும் –
பெருத்த அவமானத்தை தேடித் தந்துள்ளார் !
ராஜராஜன் ஒரு ஆத்திகனாகவும், இந்து சமயத்தைச்
சேர்ந்தவனாகவும் இருந்ததே இதற்கு அடிப்படையாகி விட்டது !
சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக சரித்திரப் பாத்திரங்களை
சேதப்படுத்துவது – ஏற்கெனவே அவர் மீது அண்மைக்காலமாக
தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறுப்பினை கூட்டுவதாகவே
அமையும்.



நிஜமான சாமியாரா இல்லை ….