யுகப்புரட்சியாளர்கள் தொல்.திருமாவளவன், கவிஞர்
கனிமொழி மற்றும் ராஜபக்சே – யின் நகைச்சுவை
உணர்வை வெளிப்படுத்தும் – நக்கீரனில் வெளிவந்துள்ள
செய்தி அப்படியே –
இலங்கையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள்
அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை நேரில்
பார்வையிடுவதற்காக முதல் வர் கருணாநிதி ஏற்பாட்டின்படி,
தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 10 பேர் அடங்கிய குழு கடந்த
சனிக்கிழமை இலங்கை சென்றது.
இலங்கை சென்ற அவர்கள் கடந்த 13ஆம் தேதி மாலை
கொழும்பில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்தனர்.
அப்போது ராஜபக்சே கனிமொழி எம்பியிடம் அருகிலிருந்த
திருமாவளவனைக் காட்டி,
இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர்,
ஆதரவாளர், நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர்
தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் அதிர்ஷ்டவசமாக
தப்பிவிட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும்
தொலைந்திருப்பார். திருமாவளவனை நான் இப்போது சந்திக்க
முடியாமல் போயிருக்கலாம் என்று கூறியதாகவும், அதை
சிரித்தப்படியே திருமாவளவன் கேட்டுக்கொண்டிருந்தார் எனவும்
செய்திகள் வெளியாகி இருந்தன.
இதுபற்றி திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,
“என்னை அறிமுகம் செய்த போது இலங்கை அதிபர் ராஜபக்சே
நகைச்சுவையாக அதை கூறினார். நானும் அதை
நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன் என்று தெரிவித்தார்.
மானங்கெட்ட தமிழர்களே – கையால் ஆகாத கபோதிகளே
உங்கள் அகராதியில் நக்கலுக்கு பெயர் நகைச்சுவையா ?
எத்தனை முறை வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்
பார்த்திருப்பீர்கள் ? அப்படியும் சொரணை இல்லையா ?
கேட்டுக்கொண்டு சும்மா வந்திருக்கிறீர்களே ………



இதைப்பற்றி பலர் கொதித்து எழுதுகிறார்களே தவிர சிந்தித்து எழுதுவதாக தெரியவில்லை ….
நண்பரே,
உங்களைப்போன்றவர்கள் இருப்பதால் தான் இவர்கள் எல்லாம் இன்னும் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
சிந்திக்காமல் எழுதுவது இல்லை இது ?
நெஞ்சு பொறுக்குதில்லையே –
இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் – என்று அந்த முண்டாசு கவிஞன் அன்றே பாடியது இன்றும் பொருந்துகிறது.
இங்கே வாய் கிழியப்பேசுபவர்கள் சந்தர்ப்பம் வாய்த்தபோது பதிலுக்கு நாலு வார்த்தை கேட்பதற்கென்ன ?
அதுவும் ராஜபக்சேவே வாய்ப்பை உருவாக்கி கிளறியபோது திருப்பிக்கொடுத்திருக்க வேண்டாமா ?
வேறு ஒன்றும் செய்ய முடியாது -ஒத்துக்கொள்கிறேன்.
ஆனால் –
பதிலுக்குப்பேசி இருந்தால் என்ன தலையையா வாங்கி இருப்பார்கள் ? என்ன அகில உலக தமிழினத்தலைவரின் தயவு இனி கிட்டாமல் போயிருக்கும் – அவ்வளவு தானே ?
நாகரிகம் கருதி . . . . . என்று சமாளிக்கிறார். கொலைகாரனிடம் என்ன நாகரிகம் வேண்டிக்கிடக்கிறது ? லட்சம் தமிழர்களைக்கொன்றவனை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்படும்போது – அதுவும் அந்தப்பாவியே வாய் கொடுக்கும்போது -ரத்தம் கொதிக்க வேண்டாமா ? –
“கொலைகாரப்
பாவியே – உன்னால் தானே இத்தனை பேரும் இன்று தவிக்கின்றனர் ” என்று சொல்லவாவது செய்திருக்கலாம் அல்லவா ?
அதைக்கூடச் செய்ய தைரியம் இல்லாதவர்கள் இங்கு வந்து ஏன் வாய் கிழியப்பேச வேண்டும் ?
நாடகம் ஆட வேண்டும் ?