………………………………………………….

…………………………………………………

……………………………………………………
டெஹ்ரானின் வெளியே, நெருப்புக் கோழிப் பண்ணையில் வேலை செய்யும் கரீமிற்கு அழகான நிறைவான குடும்பம். இரண்டு பெண், ஒரு ஆணாக மூன்று ப்ரியமான குழந்தைகள்.
காது கேட்காத முதல் பெண் ஹனியேவிற்கு வாங்கிக் கொடுத்திருந்த ஹியரிங் எய்ட் தண்ணீரில் விழுந்து வேலை செய்யாமல் போக, டெஹ்ரானில், அதை ரிப்பேர் செய்யமுடியாது, புதிய மெஷின்தான் வாங்க வேண்டுமென்கிறார்கள் மருத்துவமனையில்.
புதிய மெஷின் 350,000 தோமன் விலை. பெண்ணிற்கு தேர்வு நெருங்குவதால் சீக்கிரம் மெஷின் வாங்க வேண்டும். இதற்கிடையில் பண்ணையில் நெருப்புக் கோழி ஒன்று தப்பித்துப் போய்விட, அவருக்கு வேலை போகிறது.
தன்னிடமிருக்கும் மோட்டார் சைக்கிளை வைத்து டெஹ்ரானில் வாடகைக்கு ஓட்டி பணம் சம்பாதிக்கிறார் கரீம். பண்ணையின் சம்பளத்தை விட பணம் அதிகமாகவே கிடைக்கிறது. டெஹ்ரானின் செழிப்பு அவருக்கு ஆச்சர்யமாயிருக்கிறது.
டெஹ்ரானில், வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட பழைய பொருட்களை கொண்டு வந்து வீட்டில் சேர்க்கிறார் ஆசையாக.
நகர்ப்புறத்தின் பரிச்சயத்தின் நிழல் அவருள் மனிதத்தை கொஞ்சம் கீழிறக்குகிறது.
ஒருநாள் பழைய பொருட்களின் குவியலிலிருந்து தவறிக் கீழே விழுந்து அடிபட்டு மோட்டார் சைக்கிள் ஓட்ட முடியாமலாகிறது. சிறுவன் ஹூசேன் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறான். ஹூசேனிற்கும், அவன் நண்பர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே மீன்கள் வளர்த்து விற்று சம்பாதிக்க வேண்டுமென்று ஆசை.
டெஹ்ரானில் மீன்கள் வாங்கி ட்ரம்மில் கொண்டுவரும்போது, வழியில் ட்ரம் உடைந்து மீன்கள் சிதறுகின்றன…. மீன்களை அருகிலிருக்கும் தண்ணீரில் கண்ணீருடன் விட்டுவிட்டு டெம்போவில் வீடு திரும்புகிறார்கள்.
ஓடிப்போன நெருப்புக்கோழி பண்ணைக்குத் திரும்பிவிடுகிறது. கரீமையும் மறுபடி பண்ணைக்கு வேலைக்கு வரச் சொல்லி விடுகிறார் முதலாளி.
………….
தொலைந்துபோய் திரும்பி வந்த நெருப்புக்கோழி ஒருவகையில் கரீம்தான்….. அல்லது கரீமின் மனசாட்சி. படத்தில் நிறைய குறியீடுகள் இருக்கின்றன.
கரீம் சுவாரஸ்யமான குடும்பத் தலைவன். பாசமான தந்தை. மனைவியின் மீது பெரும் ப்ரியம். அழகான, அன்பான குழந்தைகள்.
பல இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க முடிகிறது ……. நெருப்புக் கோழி முட்டையை ஆம்லெட் போடுவதற்காக வீட்டிற்குக் கொண்டு வருகிறார் கரீம். மூன்று குழந்தைகளும் முட்டையை உடைப்பதற்கு போட்டி போடுகிறார்கள். கரீம் “வேண்டாம், வேண்டாம். உங்களுக்கு உடைக்கத் தெரியாது. அதுக்கு ஒரு டெக்னிக் இருக்கு. நான் காண்பிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு பென்சில், ஆணி, சிறிய சுத்தி சகிதம் தயாராகி உட்கார்கிறார்.
முன்னால் பெரிய ப்ளேட்டை வைத்து, அதன் மேல் முட்டையை வைத்து “இப்ப பாருங்க, நான் என்ன செய்றேன்னு” என்கிறார். குழந்தைகள் மூவரும் ப்ளேட்டை சுற்றி உட்கார்ந்து கொள்கிறார்கள். முட்டையின் மேல் பென்சிலால் சிறிய வட்டம் வரைகிறார். கோட்டின் மேல் ஆணியின் கூரிய முனை வைத்து லேசாக வட்டமாக தட்டுகிறார்.
முடித்து ஆணியைத் திருப்பி வைத்து, “இப்படித்தான் டெக்னிக்கா வரிசையாப் பண்ணனும்” என்று சொல்லிவிட்டு ஆணியின் மேல் சுத்தியால் தட்டுகிறார். முட்டை எக்குத் தப்பாய் உடைந்து எல்லோர் முகத்திலும் தெறிக்கிறது. ஹனியேவும், தங்கையும் வாய்விட்டுச் சிரிக்க, ஹூசேன் முகத்திலிருக்கும் முட்டையை வழித்துத் துடைத்துக்கொண்டு அப்பாவிடம் “இதுதான் உங்க டெக்னிக்கா?” என்கிறான்.
கரீம் வேலைக்குப் போகமுடியாமல் இருக்கும்போது, வேலைக்குப் போகும் சிறுவன் ஹூசேன், வேலைவிட்டு வந்து இரவுணவு சாப்பிடுவதற்கு முன்னால் களைப்பில் தூங்கிவிட, சாப்பிட எழுப்பச் சொல்கிறாள் நர்கீஸ். மகனை எழுப்பும்போது, காய்த்துப்போன அவன் கையைப் பார்க்கும் கரீம் கண்கலங்குகிறார்.
கரீம் காலிற்கு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்துவிட்டு வெளியில் பெஞ்ச்சில் காத்திருக்கும்போது, ஹூசேன் அப்பாவிடம், “இருங்க வர்றேன்” என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருக்கும் பெட்டிக்கடைக்குப் போய் “இரண்டு ஆரஞ்சு ஜூஸ் என்ன விலை?” என்று கேட்கிறான்.
கடைக்காரர் விலை சொல்ல, ஒன்று வாங்கத்தான் பணமிருக்கிறது. “ஒண்ணு குடுங்க” என்று வாங்கி வந்து அப்பாவிற்கு கொடுக்கிறான். கரீம் “உனக்கு வாங்கலயா?” என்கிறார். ஹூசேன் “எனக்கு இந்த ஜூஸ் புடிக்காது” என்கிறான்.
ஒரு ஈரானிய படம்…. யூ ட்யூபில் இலவசமாக காணக் கிடைக்கிறது….கீழே லிங்க் தருகிறேன்….. வாய்ப்பு கிடைக்கும்போது அவ்சியம் பாருங்கள்…… பிரமாதமான படம் என்று சொல்ல முடியாது. ஆனால், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை சொல்லும் ரியலிஸ்டிக்கான படம் என்று சொல்லலாம்… ( பரிந்துரை செய்த வெங்கிக்கு நன்றி …!!!)
…………………………………….
கதை தான் தெரிந்து விட்டதே….மொழி பற்றிய கவலையின்றி படத்தைப் பார்க்கலாம்….!!!
……………………………………..
The Song of Sparrows – (2008 – Iranian film) – Majid Majidi
……………………………………………………………………………………………………………………………………………………………………………..



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…