……………………………………………………………..

…………………………………………………………..

……………………………………………
ஏறத்தாழ, 90 ஆண்டுகளுக்கு முன்பு சாண்டில்யனும் (என்னும் பாஷ்யம் அய்யங்கார் …) –
என் அப்பாவும் ….. சுதேசமித்திர ன் தமிழ் நாளிதழில் ஒன்றாக பக்கத்து பக்கத்து டேபிள்களில் (அல்லது ஒரே டேபிளின் இரு பக்கங்களிலும் தனித்தனியே … !!! )அமர்ந்து பணியாற்றினார்கள் என்பதை இப்போதும் நினைத்துப் பார்க்கும்போது எனக்கு அச்சரியமாக இருக்கிறது…..!!!
அந்தக்காலங்களில், என் அப்பா கல்லூரிப் படிப்பை தொடர்ந்து கொண்டே, ( தஞ்சாவூர்/கும்பகோணத்தில் ) தீவிரமாக இந்திய சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்…. ஒரு கட்டத்தில், பிரிட்டிஷ் போலீசால் கைது செய்யப்படக்கூடிய நிலை ஏற்பட்டபோது, ரகசியமாக தப்பியோடி, அப்போதைய மெட்ராஸ் சென்று, ராஜாஜி அவர்களை சந்தித்து, இனி நான் என்ன செய்யட்டும் என்று கேட்டிருக்கிறார்….
ராஜாஜி அவர்கள், நீ போய் சுதேசமித்திரனில் கொஞ்ச காலம் இரு – நான் அவர்களிடம் பேசுகிறேன் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்… சுதந்திர போராட்டத்தில் சுதேசமித்திரனின் பங்கு மிகப்பெரியது…. என் அப்பா எழுத்தாளர் அல்ல…. இருந்தாலும் அலுவலகத்தில் தன்னால் இயன்ற விதங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். கொஞ்ச நாட்கள் வெளியே தலை காட்டாதே என்று ராஜாஜி அவர்கள் சொல்லி இருந்தார்.
எனவே 24 மணி நேரமும் சுதேசமித்திரன் அலுவகத்திலேயே வாசம்…. அந்தக்காலத்தில், சாண்டில்யனுடன் தனக்கு ஏற்பட்ட நட்பு பற்றி, நிதானமாக பிற்காலத்தில் 70-களில் (… !!! ) என் அப்பா என்னிடம் சொன்னார்……
நான் சின்ன வயதுகளில், சாண்டில்யனின் வர்ணனைகளால் (…??? ) கவர்ந்திழுக்கப்பட்டு, அவரது தொடர்கதைகளை ஒன்று விடாமல் வாசித்திருக்கிறேன்…… அந்த சம்யங்களில் எல்லாம் எனக்கு – சாண்டில்யன், அப்பாவின் நண்பர் என்பது தெர்யாது…..
திடீரென்று, சாண்டில்யன் எழுத்துகளை இப்போது படித்தால் எப்படி இருக்குமென்று தோன்றியது….. சும்மா சாம்பிளுக்கு படித்தால் போதும். எனவே, நாவல்கள் வாங்குவதை தவிர்த்து விட்டு, இணையத்தில் எதாவது கிடைக்கிறதா என்று தேடினேன்…….விளைவு –
……………………………..
கடல் புறா: தமிழ்நாட்டின் பெருமை
கடல் புறா ஒரு மீனவனை வீரனாக மாற்றுகிறது;
அது தமிழ்நாட்டின் கடலோர மக்களின் உண்மையான பிரதிபலிப்பு. சோழர்களின் கடற்படை வலிமையை இது நினைவுபடுத்துகிறது – அவர்கள் கடலைக் கடந்து சரித்திரம் படைத்தார்கள்.
கடல் புறா நாவல் ஒரு கதை மட்டுமல்ல; அது தமிழர்களின் ஆன்மாவை, அவர்களின் கலையை, அவர்களின் கனவுகளை உயிர்ப்பிக்கிறது. இதைப் படித்து முடிக்கும்போது, நம்முள் ஒரு கேள்வி எழுகிறது – இன்று நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்….???
………………………….
சாண்டில்யனின் கடல்புறா நாவலிருந்து சாம்பிளுக்கு
சில பக்கங்கள் –
………………





………………………………………………………………………………………………………………………………………………………………………………



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே (சரித்திர நாவல்கள்) படித்திருக்கிறேன்.
சாண்டில்யன் நாவல்களில் போர் வர்ணனை போல யாருமே எழுதுவது கடினம். அவ்வளவு சுவாரசியமாக போர்த் தந்திரங்களை எழுதுவார். அவருடைய நாவல்களில் எனக்குப் பிடிக்காதது (அதாவது பக்கங்களை ஸ்கிப் பண்ணுவேன்) காதலன் காதலி உரையாடல்கள். உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சாண்டில்யன் நாவல்களின் முதல் மூன்று பக்கங்களுக்கும் ஒரு சில வாக்கியங்கள்தாம் உண்டு.
உங்கள் அப்பாவைப் பற்றி இன்னும் விவரமாக எழுதலாமே. சாண்டில்யன் அவர்களை நினைவுபடுத்தியதன் மூலம், அவரது பல நாவல்களை மனது அசைபோடுகிறது.