…………………………………………….

……………………………………………
பகவானின் அருளை முழுமையாக பெற்ற பாக்கியசாலியான,பகவான் ஸப்-ரிஜிஸ்டரார் நாராயண ஐயருக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத, காரணம் கூற முடியாத அளவு, கவனிப்பும், கனிவும், அன்பும், ஆசிகளும் பகவானிடமிருந்து கிடைத்தது.
பகவானுக்கு மிகப் பிரியமான பக்தர்களுள் அவர் ஒருவர் என்பது பலர் கருத்து.
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 30 மையில் தூரத்திலிருந்து சேத்துப்பட்டு என் ஊரில்
1928-ல் நாராயண ஐயர் துணை பதிவாளராக பணியாற்றி வந்தார்.
சுதந்திரமாக சிந்திக்க கூடிய,அவர் கடைந்தெடுத்த நாஸ்திகராக இருந்ததால்,ஸாதுக்களையும், ஸன்யாசிகளையும் சமுதாயத்தின் புல்லுருவிகள் என்று ஏளனம் செய்யும் ஒரு புரட்சிகரமான சிந்தனையாளாகவும் இருந்தார்.
அவருக்கு தெய்வ பக்தி உள்ள டாக்டர் ஏ.ராமகிருஷ்ண ஐயர் நண்பராக கிடைத்தது அவருடைய அதிர்ஷ்டமே.
திருச்சுழியில் பகவனுடைய குழந்தை பருவத்தில் அவருடைய விளையாட்டு தோழியாக இருந்த லக்ஷ்மி அம்மாவின் மகன் ராமகிருஷ்ண ஐயர்.
ஆகையால் , அவருக்கு விவரம் தெரியும் வயது வந்த போதிலிருந்தே, இயற்கையாகவே பகவானின் தீவிர பக்தர் ஆனார்.
அரசாங்க மருத்துவராக இருந்த அவர், சுவாரஸ்யமாக உரையாடக் கூடியவராகவும் இருந்தார்.
அவரது மென்மையான குணமும், நகைச்சுவையும் பிரசித்திப் பெற்றவை.
எங்கு பணியாற்றியப் போதும், தனது அலுவல்களுக்கிடையே நேரம் கிடைத்த போதெல்லாம் பகவானை காண வருவார்.
ஒருமுறை பகவான் தான் கடவுள், என அவர் உறுதியாக கூறுவதற்கு பொருள் என்னவென்றும், அவ்வாறு கூறும் போது அவரது அனுபவம் என்னவென்று தெளிவுபடுத்துமாறு நாராயண ஐயரிடம் நான் கேட்டேன்.
அவரது அனுபவங்களை நான் சந்தேகிக்கவில்லை.
ஆனால் அவற்றை அவர் வாய்மொழியாகவே கேட்க விரும்பினேன்.
பதில் கூற முற்பட்ட அவர் பகவானே தான் கடவுள்.
இவ்வாறு கூறும் போது எந்த மதத்தில் கூறப்படும் கடவுளையும் நான் குறிப்பிடவில்லை…..
எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் சுத்த சைதன்யத்தையே குறிப்பிடுகிறேன்.
ஒன்றேயான தத்துவத்தை ,
அதன் வெளிப்படையான அவதாரத்தோடு ஒப்பிடுவதில் அர்த்தமில்லை, என்பதால் இதற்கு முன் தோன்றிய அவதாரங்கள் ஒருவரோடும் பகவானை ஒப்பிட நான் விரும்பவில்லை,
என்றாலும் நாம் புரிந்து கொள்வதற்கு அது தேவையில்லை என்றால், அப்போது புத்தருடனும் அல்லது இயேசு கிறிஸ்துவுடனும் மட்டும் ஒப்பிடலாம்.
என்று கூறிய பின் தொடர்ந்து, எப்போதெல்லாம் அவருடன் பேசிக் கொண்டிருந்தேனோ, அல்லது அவர் ஸன்னிதியில் அமர்ந்திருந்தேனோ – அப்போதெல்லாம் கடவுளே அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன்.
சுத்த சைதன்யமே மனித உருக்கொண்டு, நம் புத்தியல் புரிந்து கொள்ளும் நிலைக்கு இறங்கி வந்து – ஆத்ம வித்தையின் உண்மையை தெளிவு செய்வது என்றால் அது நாம் பெற்ற பெறும் பேராகும்.
எப்போதுமே இத்தகைய எண்ணங்கள்,
பகவானையும் அவர்கள் உபதேசங்களையும் மேலும் தெளிவாக புரிந்து கொள்ளும்படி செய்தன என நாராயண ஐயர் உரைத்தார்.
……………………………………………………………………………………………………………………………………………………………………………..



சாதிக் பாட்சா - நீங்கள் சொன்னவுடன் என் அந்நாள் ஞாபகங்கள் வருகின்றன…. இன்றைக்கு திமுக-வில்,யாராவது அவரைப்பற்றி பேசுகிறார்களா …? அவரால், இவர்களுக்கு 10 பைசா கூட பிரயோஜனம்…