………………………………………..

…………………………………………


……………………………………….
கிராமஃபோன் கம்பெனியில் அப்பா வயலின் வாசிக்கப் போவார் நானும் கூடவே போவேன்.
அப்போ தனியா மாடியில் வயலின் வாசித்துக் கொண்டிருப்பேன். இதைப் பார்த்த இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன் என்னைப் பாராட்டி தன்னோடு சேர்த்துக் கொண்டார். இதெல்லாம் 1939-ல் நடந்தது.
கொஞ்ச காலம் அங்கே இருந்துவிட்டு ஏவிஎம்மின் சரஸ்வதி ஸ்டோர்ஸ், பிறகு “ஹெச்எம்வி’ ஆர்க்கெஸ்ட்ராவில் பணிபுரிந்தேன். இதற்கிடையில் மீண்டும் சி.ஆர். சுப்பராமன் என்னை அழைத்தார். வேலைக்காரி, நல்லதம்பி போன்ற பல படங்கள் வெற்றியடைந்து கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த அவர் “என் கூடவே இரு’ என்றார்.
கொஞ்ச நாள் கழித்து எம்.எஸ். விஸ்வநாதனும் அங்கு வந்து சேர்ந்தார்.
அப்போது நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென்று சி.ஆர். சுப்பராமன் இறந்து விடவே தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்று அவர் இசையமைக்க ஒப்புக் கொண்டிருந்த படங்களை நாங்கள் முடித்துக் கொடுத்தோம்.
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் எங்களை ஊக்குவித்தார். எங்களிடம் “”வடநாட்டில் சங்கர் – ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஏன் இருக்கக் கூடாது” என்றார்.
எனக்கு வயலின் ஒன்றே போதும் என்றேன். அதெல்லாம் இருக்கட்டும், இருவரும் சேர்ந்து இசையமையுங்கள் என்று ஊக்குவித்து தன்னுடைய “பணம்’ என்ற படத்தில் எங்கள் இருவரையும் இணைத்து முதன்முதலில் இசையமைக்க வைத்து டைட்டிலில் –
“விஸ்வநாதன்-ராமமூர்த்தி’ என்று போட்டார்.
“அண்ணே… ராமமூர்த்தி என்னைவிட வயதிலும், இசை அனுபவத்திலும் பெரியவர். அதனால் அவர் பெயரை முன்னால் போடுங்கள் என்று எம்.எஸ்.வி. அவர்கள் என்.எஸ்.கே.விடம் சொல்ல –
“வி’ பாஃர் விக்டரி அதனால் உன் பெயர் முன்னால் இருக்கட்டும் ராமமூர்த்தி உன்னை தாங்கிப் பிடிப்பார் என்றார். அன்று இணைந்து ஆரம்பித்த எங்கள் பயணம் பலநூறு படங்களுக்கு தொடர்ந்தது.
ஒவ்வொரு பாடகரிடமும் நாங்கள் எதிர்பார்த்ததுபோல் பாட்டு வரும் வரையில் விட மாட்டோம்.
எம்.எஸ்.விக்கு மைக் வாய்ஸ் உண்டு. அதனால் அவரை நான் உற்சாகப்படுத்தி பாட வைப்பேன். என்னையும் பாடு என்பார். எனக்கு மைக் வாய்ஸ் கிடையாது… அது எனக்கே தெரியும். அதனால் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன் என்றேன்.
( இசையமைப்பாளர் T .K . ராமமூர்த்தி – தினமணியில் … )
……………………………………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….