கும்பிடும் வரை கடவுள் – திருட்டுப் போனால் …?? – “சிலை ” … !!! சில வித்தியாசமான சிந்தனைகள் …!!!

…………………………………….

………………………………….

கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை !

அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும்,

நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்!

எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!

தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!…!!!

ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம்… !!

வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை…!!!

அடுத்த வாக்கியம் பொய்….

முந்தய வாக்கியம் உண்மை…..

இதுல எது உண்மை….?எது பொய்….?…அதுதான் கடவுள்…!!!

அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,

தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!

இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!… இது தானே நிதர்சனம்… ???

இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான்.

வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்….!!!

இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு…!!

250 ரூபாய்க்கு பளிச்சென்றும்

100 ரூபாய்க்கு சுமாராகவும்

இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்…!!!!

மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள்…. இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்…!!!

தூக்கம் வராமல்

முதலாளி…

தூங்கி வழியும்

வாட்ச்மேன………யோசிக்க வைக்கும் முரண்…. !!!

கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..

கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை….!!!

……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக