……………………………………….

…………………………………………..

………………………………………………
Average cost of above TVS King Deluxe in India is around 2.5 lakh rupees ….
…………………………………………..
ஆப்கானிஸ்தான் குன்துஸ் நகரத்தில் இருந்து தஜிகிஸ்தானை இணைக்கும் ஒரு கிராமப்புற சாலை.
தாலிபான்களின் ஆட்சி, துப்பாக்கிகள் சாதாரணமாய் புழங்கும் ஒரு அசாதாரண சூழல்.
பொருளாதாரம் மிகவும் பின் தங்கியிருக்கிறது. நகரங்களுக்கு மட்டுமே சாலைகள்.
பிறது அனைத்தும் மண் மற்றும் மலைப்பாதைகள் தான். ஆனால் அங்கு ஓடும் பெரும்பான்மை ஆட்டோக்கள் டிவிஎஸ் தான்.
எல்லை, அரசியல், நிலப்பரப்பு என பல தடைகளை மீறி தமிழ்நாட்டை சார்ந்த ஒரு நிறுவனம் எவ்வளவு தூரம் சென்றிருக்கிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
இது ஒரு சாதாரண காட்சி அல்ல, உலக பிராண்டுகளே சிரமப்படும் இடங்களிலும் இந்தியப் பொறியியல் தன் பாதையை அமைத்துக் கொள்கிறது என்பதற்கான சான்று.
வாழ்வதே சவாலாக இருக்கும் இடங்களிலும், தமிழ்நாடு தன் வழியைத் தேடி முன்னேறுகிறது என்பது நிச்சயம் ஒரு பெருமை தான் ! ( நன்றி – ஹரிஹரசுதன் தங்கவேலு …)
………..
நான் மேலும் படித்த சில விவரங்கள் – ( இன்னும் கொஞ்சம் காலரை தூக்கலாம் …..)
ஆப்பிரிக்க நாடுகளில் பைக் TVS ஆட்டோ பஜாஜ் TVS இரண்டும் அதிக அளவில் புழக்கத்தில் காணப்படுகிறது….
…………………
முக்கியமாக தென் அமெரிக்கா நாடுகளில் பிரேசில் பேரூர் கொலம்பியா மற்றும் மத்திய கரும்பின் நாடுகள் ஜமைக்கா – போன்ற நாடுகளிலும் நமது பஜாஜ் டி வி எஸ் ஹீரோ ஆகிய நிறுவனங்களின் வண்டிகளை மக்கள் அதிகமாக உபயோகிப்பதை பார்த்திருக்கிறேன் நமது வண்டிகள் அதிக மைலேஜ் கொடுப்பதாலும் சைனா வண்டிகளை விட தரமாக இருப்பதாலும் அதை அங்குள்ள மக்கள் விரும்புவதாக சொல்கிறார்கள்…
…………………
இலங்கையில் TVS,BAJAJ ஆட்டோக்கள் தான் அதிகம் இருக்கு…
……………….
சோமாலியாவில் கார்களை பார்க்க இயலாது ஆனால் டிவிஎஸ் ஆட்டோக்கள் இருக்கும்.
………………..
இங்கு மட்டுமல்ல எகிப்தில் கூட டிவிஎஸ் ஆட்டோக்கள் ஓடுகிறது..
………………
………………………………………………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….