…………………………………………….

……………………………………………..
உங்கள் வீட்டின் சுவற்றில் உள்ள கடிகாரம் தான் இந்த ‘Milky Way Galaxy’ என கற்பனை செய்துக்கொண்டு இந்த பதிவை தொடருங்கள்.
நம் சூரிய மண்டலம் இந்த படத்தில் உள்ள மில்கிவே கேலக்ஸிக்குள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அசுர வேகத்தில் சுற்றி வருகிறது.
சூரிய மண்டலத்தின் வேகம்:
மணிக்கு – 8,28,000 கி.மீ
நிமிடத்திற்கு – 13,800 கி.மீ
வினாடிக்கு – 230 கி.மீ.
இப்போது உங்கள் சுவர் கடிகாரம் தான் மில்கிவே கேலக்ஸி. இந்த கடிகாரத்தில் நம் சூரிய மண்டலம் 12-லிருந்து தொடங்கி திரும்ப 12 மணிக்கே வருவதற்கு 220 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.
அதாவது,
வினாடி முள் ஒரு வினாடி எடுத்து வைக்க 5080 ஆண்டுகள் ஆகும்.
நிமிட முள் ஒரு நிமிடத்தை முடிக்க 3,05,000 ஆண்டுகள் ஆகும்.
மணி முள் 12-லிருந்து 1 மணிக்கு வர 18.3 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.
இப்போது இந்த கடிகாரத்தில் நம் சூரிய மண்டலத்தின் ஒரு சுற்றை(Orbit) மட்டும் பார்ப்போம்.
ஒரு சுற்று – 220 மில்லியன் ஆண்டுகள்.
கடிகாரத்தின்(கேலக்ஸி) 12 மணியிலிருந்து நம் சூரிய மண்டலம் புறப்படுகிறது(மேலே கூறிய அசுர வேகத்தில்).
சூரிய மண்டலம் 55 மில்லியன் ஆண்டு பயணத்திற்கு பின்னர் 3 மணியை தொடும்போது டைனோசர்கள் அழிவுக்கு அருகே வாழும்.
110 மில்லியன் ஆண்டுகள் பயணத்திற்கு பின்னர் 6 மணியை(மில்கிவேயின் பாதி தூரம்) தொடும்போது பாலூட்டி விலங்குகள் தோன்ற தொடங்கும்.
165 மில்லியன் ஆண்டுகள் பயணத்திற்கு பின்னர் 9 மணியை சூரிய மண்டலம் அடையும்போது டைனோசர்கள் அழிந்திருக்கும்.
பின்னர் சூரிய மண்டலம் தொடர்ந்து பல மில்லியன் ஆண்டுகள் பயணித்து…
11.59.59 மணி நேரத்தை அடையும்போது தான் மனிதர்களாகிய நாம் தோன்றுகிறோம்.
ஆக, இந்த மில்கிவே கேலக்ஸியில் டைனோசர்கள் 30 நிமிடங்கள் வாழ்ந்துள்ளன. ஆனால், இதே மில்கிவே கேலக்ஸியில் மனிதர்களாகிய நாம் தோன்றி வெறும் 1 வினாடி தான் ஆகிறது.
இந்த ஒப்பீடு மூலம் நம் சூரிய மண்டலம் எவ்வளவு தான் அசுர வேகத்தில் சுற்றினாலும் கூட, ஒரு சுற்று முடிவதற்குள் பல உயிரினங்கள் பரிணாமம் அடைந்து அழிந்து போனது எனில், இந்த கேலக்ஸி எவ்வளவு பிரமாண்டமானது என்பதை புரிந்துக் கொள்ளலாம். ( நன்றி – பிரகாசம் பழனி…)
……………………………………………………………………………
இந்த உலகில் நீங்கள் பார்ப்பது எதுவுமே நிகழ்காலத்தில் இல்லை என்றால் உங்களால் நம்ப முடியுமா…?
நிச்சயமாக முடியாது. ஆனால், அது தான் உண்மை.
நீங்கள் மேலே வானத்தில் உள்ள சூரியனை பார்த்தால், நீங்கள் இதே வினாடி அங்குள்ள சூரியனை பார்க்கவில்லை. சரியாக 8.2 நிமிடங்களுக்கு முன்னால் சூரியன் எப்படி இருந்ததோ, அதை தான் இப்போது இந்த வினாடி நீங்கள் பார்க்கிறீர்கள்.
ஏனெனில், சூரிய ஒளி பூமியை அடைய 8.2 நிமிடங்கள் ஆகிறது.
இரவில் நிலாவை நீங்கள் பார்த்தால், இந்த வினாடியில் உள்ள நிலாவை பார்க்கவில்லை. சரியாக 1.3 வினாடிக்கு முன்னால் இருந்த நிலாவை தான் பார்க்கிறீர்கள்.
ஏனெனில், நிலாவின் ஒளி பூமியை அடைய 1.3 வினாடி ஆகிறது.
இரவு வானில் நமக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான பிராக்ஸிமா செண்டாரியை இப்பொழுது பார்க்க முடிந்தால், நீங்கள் 4.2 ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தில் இருந்த நட்சத்திரத்தை தான் நீங்கள் இந்த நிமிடம் பார்க்கிறீர்கள்.
ஏனெனில், இந்த நட்சத்திரத்தின் ஒளி பூமியை அடைய 4.2 ஒளி ஆண்டுகள் ஆகிறது.
சோ, நீங்கள் வானத்தில் பார்ப்பது எல்லாமே நீங்கள் பார்க்கும் அதே நேரத்தில் அங்கே இருப்பவை அல்ல. எல்லாமே கடந்த காலத்தை சேர்ந்தவை.
சரி, வானத்தை விடுங்க. பூமியில் நாம் பார்ப்பது எல்லாமே நிகழ்காலம் தானே…?
நிச்சயமாக இல்லை….!!!
இங்கே பூமியிலும் நாம் எதை பார்த்தாலும் அது நாம் பார்க்கும் அதே நிகழ்காலத்தில் இருக்காது.
உதாரணத்திற்கு, ஒரு 20 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தை பார்க்கும்போது, நீங்கள் உண்மையில் இந்த நேரத்தில் உள்ள மரத்தை பார்க்கவில்லை. சில நேனோசெகண்ட்ஸ்க்கு முன்னால் இருந்த மரத்தின் உருவத்தை தான் பார்க்கிறீர்கள்.
ஏனெனில், மரத்திலிருந்து வந்த ஒளி இத்தனை nanoseconds தாமதமாக உங்களிடம் வந்து சேர்ந்துள்ளது.
நான் ஆரம்பத்திலிருந்து ஒளியை பற்றியே இந்த பதிவில் குறிப்பிட்டு வருவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஏன் தெரியுமா..?
நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு பொருள் மீதும் சூரிய ஒளி பட்டு பிரதிபலித்து அந்த ஒளி உங்கள் கண்கள் மீதுள்ள விழிப்படலத்தில் விழும்போது தான் உங்களுக்கு அந்த பொருளின் உருவம் தெரியும்.
அதாவது, நீங்கள் காட்சிகளை பார்ப்பதற்கு உங்கள் கண்கள் மட்டுமே காரணம் இல்லை. சூரிய ஒளி/மின்சார ஒளி ஒரு மரத்தின் மீது பட்டு, அந்த மரத்தின் உருவத்தை படம் பிடித்து அந்த படத்தை ஒளியாக கொண்டு வந்து உங்கள் கண்களில் சேர்க்கும்போது தான் உங்களுக்கு அந்த மரத்தின் முழு உருவமும் புலப்படும்.
இப்படி தான் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு பொருளின் உருவத்தையும் ஒளி தான் காப்பி அடித்துக் கொண்டு உங்கள் கண்களுக்கு கொண்டு வரும்.
சோ, ஒளி இல்லையெனில், உங்கள் கண்களுக்கு பார்க்கும் திறன் இருந்தாலும் நீங்கள் குருடர்கள் தான்.
அப்போ, 20 மீட்டர் தொலைவில் இருந்த அந்த மரத்தின் மீது ஒளி பட்டு சில நேனோசெகண்ட்ஸ் தாமதமாக உங்கள் கண்களுக்கு வருவதால், அது நிகழ்காலத்தில் இருக்காது.
இன்னும் சொல்லப்போனால், அந்த மரத்தின் இலைகள் அசைவது கூட நிகழ்காலம் கிடையாது.
இதை எளிமையான உதாரணத்துடன் விளக்குகிறேன்.
நீங்கள் ஒரு கிரிக்கெட் போட்டியை ஸ்டேடியத்தில் அமர்ந்து நேரடியாக பார்க்கிறீர்கள். அப்போது, பேட்ஸ்மேன் பந்தை அடிக்கும் காட்சி உங்களுக்கு நிகழ்காலம் போல் தோன்றும்.
ஆனால், அவர் பந்தை அடித்த அந்த காட்சி உங்கள் கண்களுக்கு ஒளி வடிவமாக வந்து சேர சில நேனோசெகண்ட்ஸ் தாமதம் ஆகியிருக்கும்.
இது பூமியில் இருந்துக் கொண்டு தாமதமாக மரத்தை பார்ப்பதற்கு சமம்.
இதே கிரிக்கெட் போட்டியை நீங்கள் வீட்டில் அமர்ந்துக்கொண்டு தொலைக்காட்சி வழியாக லைவ்வாக பார்த்தால், அந்த சிக்னல் சாட்டிலைட் வழியாக கிடைக்கப்பெற்று உங்கள் கண்களுக்கு வந்தடைய கூடுதலான நேனோசெகண்ட்ஸ் ஆகும்.
இது பூமியில் இருந்து வானத்தில் சூரியனை தாமதமாக பார்ப்பதற்கு சமம்.
இறுதியாக, இந்த கிரிக்கெட் போட்டியை பல ஆண்டுகளுக்கு பின்னர் யூடியூப்பில் நீங்கள் பார்த்தால், நீங்கள் பூமியில் இருந்துக் கொண்டு நட்சத்திரங்களை பார்ப்பதற்கு சமம். இரண்டுமே எப்போதே நடந்து முடிந்திருக்கும்.
ஆக, இவையெல்லாமே நிகழ்காலம் அல்ல.
அப்ப, எது தான் நிகழ்காலம்…?
ஒருவர் செய்யும் ஒரு செயலை அல்லது ஒரு காட்சியை இன்னொருவர் observer-ஆக பார்த்தால், அவருக்கு எல்லாமே இறந்த காலம் தான்.
ஆனால், அந்த செயலை செய்கிறாரே, அவருக்கு மட்டும் அந்த நேனோசெகண்ட் நிகழ்காலமாக இருக்கும்.
அதாவது, ஒரு செயல் அல்லது நிகழ்வு எந்த இடத்தில் நடக்கிறதோ, அந்த exact புள்ளியில், அந்த நேனோசெகண்டில் நிகழ்வது மட்டுமே அங்கே உண்மையான நிகழ்காலம்.
ஆக, இந்த உலகத்தில் ஒரு observer-ஆக நீங்கள் பார்க்கும் அனைத்து விஷயங்களும் 100% நிகழ்காலம் இல்லை … !!! ( வலைத்தளத்தில் கிடைத்தது….. எழுதியவருக்கு நன்றி …!!!)
………………………………………………………………………………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….