குழந்தைகளை தெருநாய் கடியிலிருந்து காப்பாற்ற அருமையான யோசனை..….!!!

……………………………………………….

……………………………………………..

மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை….!!!

தெருநாய் பிரச்சினைக்கு, உத்திரப்பிரதேசத்தில் மிக்சரியான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்கள்….

எந்தவித் தயக்கமோ, மன உறுத்தலோ இன்றி – நாமும், இதையே பின்பற்றலாம்…..

………………………………………………………

செய்தி தளத்திலிருந்து –

மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை.. உபி அரசு பிறப்பித்த வினோத உத்தரவு.. ..?

நாடு முழுக்க தெருநாய் பிரச்சனை ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கும் சூழலில் இது தொடர்பாக உபி அரசு ஒரு வினோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு தெருநாய் காரணமே இல்லாமல் இரு முறை மனிதர்களைக் கடித்தால் அந்த நாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது போல, ஆயுள் முழுக்க காப்பகத்தில் அடைக்கப்படுமாம்.

உபி அரசின் இந்த உத்தரவு குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். கடந்த சில காலமாகவே இந்தியாவில் தெருநாய் பிரச்சனை மிக மோசமான ஒன்றாக மாறியிருக்கிறது. தெருநாய் பிரச்சனையைக் கையாள உச்ச நீதிமன்றமும் கடந்த மாதம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது.

மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. உபி அரசு உத்தரவு இதையடுத்து வேக்சின், கருத்தடை பணிகளை எல்லா மாநில அரசுகளும் தீவிரமாக மேற்கொண்டு வந்தன.

இந்தச் சூழலில் தான் உத்தரப் பிரதேச அரசு வினோதமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு மனிதனைக் காரணமின்றிக் கடித்தால் நாய்களுக்குத் தண்டனையாம். இதுபோல முதல் முறை நடந்தால் அந்த நாய்கள் 10 நாட்களுக்கு விலங்கு மையத்தில் வைக்கப்படுமாம்.

அதேநேரம் மீண்டும் அந்த நாய் காரணமில்லாமல் மனிதர்களைக் கடித்தால் வாழ்நாள் முழுக்க அந்த நாய் அங்கேயே அடைக்கப்படும் என்றும் உபி அரசு உத்தரவிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதற்குச் சமம்.

அப்படிக் காப்பகத்தில் அடைக்கப்படும் நாய்கள் தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறதாம். யாராவது ஒருவர், அந்த நாயைத் தத்தெடுத்தால் மட்டுமே அது காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்படும். மீண்டும் நாயைத் தெருக்களில் விட மாட்டோம் எனச் சொல்லி உறுதிமொழிப் பத்திரம் கொடுத்தால் மட்டுமே நாயை ரிலீஸ் செய்வார்களாம். ஆக்ரோஷமான நாய்களைக் கையாளும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அம்மாநில முதன்மைச் செயலாளர் அம்ரித் அபிஜாத் இந்த உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறார்.

எப்படி?

தெருநாய் கடி காரணமாக ஒருவர் ரேபிஸ் வேக்சின் போட வந்தால், அந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கப்படுமாம். சம்பந்தப்பட்ட நாய் விலங்குகள் மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுமாம். இது குறித்து பிரயாக்ராஜ் மாநகராட்சி கால்நடை அலுவலர் டாக்டர். பிஜய் அம்ரித் ராஜ் கூறுகையில், “கால்நடை மையத்தில் நாங்கள் நாய்களைப் பரிசோதிப்போம். கருத்தடை செய்யப்படாவிட்டால், கருத்தடை செய்வோம். பிறகு 10 நாட்கள் அந்த நாயின் நடத்தையைக் கண்காணிப்போம்.

விடுவிக்கப்படுவதற்கு முன்பு, அந்த நாய்க்கு மைக்ரோசிப் பொருத்தப்படும். இதன் மூலம் நாயின் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியும்.

அதே நாய் மீண்டும் மனிதனைக் காரணமின்றி இரண்டாவது முறை கடித்தால், அது வாழ்நாள் முழுவதும் மையத்திலேயே வைக்கப்படும். நாய் காரணமில்லாமல் கடித்ததா.. இல்லை தற்காப்பிற்காகக் கடித்ததா என்பதைக் கால்நடை மருத்துவரைக் கொண்ட 3 பேர் கொண்ட குழு முடிவு செய்யும்.

அதாவது யாராவது கல்லைத் தூக்கி எறிகிறார்கள் என்றால் அதற்காக நாய் கடித்தால் அது காரணமில்லாமல் கடிப்பதாகக் கருத மாட்டோம். சும்மா வீதியில் போய்க் கொண்டிருப்போரைக் கடித்தால் மட்டுமே நடவடிக்கை இருக்கும்” என்றார்.

இதுபோல போவோர், வருவோரை எல்லாம் ஆக்ரோஷமாகக் கடிக்கும் நாய்கள் வாழ்நாள் விலங்கு மையத்தில் வைக்கப்படுமாம். அந்த நாயைத் தத்தெடுக்க விரும்புவோர் தங்கள் பெயர், முகவரி போன்ற அனைத்து விவரங்களையும் கொடுக்க வேண்டும். மேலும், தெருக்களில் நாயை விட மாட்டோம் எனச் சொல்லி உறுதிமொழிப் பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒருவேளை நாயைத் தத்தெடுத்தவர் மீண்டும் அதைச் சாலையில் விட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாம். ஆக்ரோஷமான தெருநாய்களைக் கட்டுப்படுத்தவே உபி அரசு இந்த நடவடிக்கையை எடுக்கிறது.

……………………………………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.