………………………………………………..

……………………………………………………………………….
பள்ளியிலேயே படித்த கதை தான் – ஆனால் கொஞ்சம் மாற்றத்துடன் …..
அவன் ஒரு உறுதியான இளைஞன். நிறைய சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவனுள் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவன் அப்பா சாதாரணமான நெசவாளி, ஒரு சராசரி அப்பாவின் மனநிலையில் ஆடைகளை நெய்யும் தனது தொழிலில், தன் மகனையும் சிக்க வைக்க அவர் தீர்மானித்தார். அவனும் சிக்கிக் கொண்டான். ஆனால் அவன் கைகள் ஆடைகளை நெசவு செய்தபோதும் மனமோ கனவுகளை நெசவு செய்தது….!!!
என்றாவது, எப்படியாவது, எதையாவது சாதிக்கப் போவதாகக் கற்பனையாக, திசை தெரியாது பேசித் திரியும் வெற்று இளைஞனாக அவன் இல்லை. அவனது எண்ணம் தெளிவாக இருந்தது. தீர்க்கமான திட்டம் தயாராக இருந்தது. கடல் மார்க்கமாக இந்தியாவை அடைய வேண்டும் என்ற கற்பனை, சுடலைவிடப் பெரிதாக அவன் வசம் இருந்தது.
ஆம்… அவனது பூமியில் இருந்து கிழக்குத் திசையில் இருக்கும் இந்தியாவுக்குத் தரை மார்க்கம் தவிர. கடல் மார்க்கம் சுண்டுபிடிக்கும் வெறி ‘கப்பல்’ சுப்பலாக அவனிடம் குவிந்திருந்தது. அந்த இளைஞன்தான் கிறிஸ்டோபர் கொலம்பஸ்.
உலகம் கடலுக்குள் மீனையும் முத்தையும் தேடியபோது புதிய நாட்டையே தேடும் எண்ணம் அந்த இளைஞனுக்கு இருந்தது. உதவத்தான் ஒருவரும் இல்லை! அவனோ அசரவில்லை…!
பல நாட்டு அரசர்களை நாடி உதவி கேட்டும், கப்பலும், கப்பல் கப்பலாக உணவும், இதர பொருளும், கப்பலைச் செலுத்தும் மனிதர்களையும் கொடுக்க எந்த அரசும் துணியவில்லை.
அந்தத் தோல்விக்கு அவனது மனமோ பணியவில்லை. பத்து வருடக் காலம் தொடர்ந்து போராடிய பின் ஸ்பெயின் நாட்டு அரசி இஸபெல்லாவுக்குக் கொலம்பஸ் மீது நம்பிக்கை பிறந்தது. மூன்று கப்பல்களையும், பயணத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களையும் இஸபெல்லா தந்து உதவினாள்.
அடுத்த பிரச்சினை ஆரம்பம் ஆயிற்று. கப்பலைச் செலுத்த, கடல் பயணம் மேற்கொள்ளத் தேர்ந்த மாலுமிகள் வேண்டுமே…! கொலம்பஸுக்கு உதவ எந்தத் தேர்ந்த மாலுமியும் தயாராக இல்லை. முன்பின் தெரியாத கடல்வழிப் பயணத்திற்கு உயிரைப் பணயம் வைக்க ஒருவரும் தயாராக இல்லை.
அனுபவம் உள்ள மாலுமிகள் மட்டுமல்ல, தின்று கொழுத்த தண்டச் சோறுகள் கூட அவருடன் வரத் தயாராக இல்லை. ஆனாலும் கொலம்பஸ் நம்பிக்கையை விடவில்லை.
சிறைக் கைதிகளை… மரணத்தின் விளிம்பில் நின்ற குற்றவாளிகளை… கொள்ளைக்காரர்களை… அழைத்துப்போக விரும்பினார்… எதிர்பார்த்த மரணம்… அல்லது எதிர்பாராத பயணம்… என்பதில் மரணத்தைவிடப் பயணம் பரவாயில்லை என்று முடிவு செய்த எண்பத்து ஏழு தண்டனையாளர்களை உடன் அழைத்துக் கொண்டு கொலம்பஸின் கப்பல் பயணித்தது.
தண்டனை பெற்றவர்களை அழைத்துப்போவது எத்தனை கொடிய தண்டனை…? கொலம்பஸ் அசரவில்லை. காற்றையும் கடலையும் கிழித்துக்கொண்டு அவனது கனவுகளின் நனவான கப்பல் கரையில் இருந்து மறைந்தது.
அடுத்த குழப்பம் ஆரம்பமானது. கிழக்கே இருக்கும் இந்தியாவை அடையப் புறப்பட்ட பயணம் தவறாக மேற்கே நோக்கி நிகழ்ந்துவிட்டது. அந்தத் தவறுதான் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்தது. வீரர்களையும் தீரர்களையும் கடவுள் கைவிடுவதில்லை என்பது உண்மையாயிற்று. நம்பிக்கை உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பது நிரூபணமாயிற்று.
மேற்கு நோக்கிய தவறான பயணம்தான் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கக் காரணம் ஆயிற்று. ஏழை நெசவாளியின் களவு நெசவு நினைவு – நிஜமாய் அமெரிக்கா அவன் வசப்பட்டது.
அடடா… கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த மாதிரி இனிக் கண்டுபிடிக்க பூமியில் என்ன இருக்கிறது? ஐந்து கண்டங்களையும் அதன் உள் உறங்கும் எண்ணெய், நிலக்கரி, வைரம் உட்பட அனைத்தையும் அமெரிக்காவின் சாட்டிலைட்டுகள் கண்டுபிடித்துவிட்ட பிறகு நாங்கள் கண்டுபிடிக்க இனி என்ன இருக்கிறது? என்று யோசிக்கிறீர்களா?
பொறுங்கள்… பொறுங்கள்…
கொலம்பஸைப் போல நீங்கள் அமெரிக்காவைக் கண்டுபிடியுங்கள் என்று சொல்வது நோக்கம் அல்ல….! உங்களுக்குள்ளே ஒரு கொலம்பஸ் இருக்கிறாரே! அவரை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா?
எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி உங்களுக்குள் ஒளிந்திருக்கும்… மறைந்திருக்கும்… அந்தக் கொலம்பஸை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டாமா…?
இனிக் கொலம்பஸ் மாதிரி அமெரிக்காவைக் கண்டுபிடிக்க வேண்டாம்… உங்களுக்குள் இருக்கும் கொலம்பஸைக் கண்டுபிடியுங்கள்… உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்… (உதவிக்கு நன்றி – அரசு நாயகன் …!!! )
………………………………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….