………………………………..

………………………………

………………………………….
” ஒரு நல்ல மனிதனுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை
மரியாதையையும் ஒரு போலி மனிதனுக்கு இந்த
சமுதாயம் கொடுக்கிறதே …” என்று ஒரு கமல் படத்திலேயே
வசனம் ஒன்று வரும். அவரது பொது வாழ்வில் அது அவருக்கே
மிகவும் பொருத்தமாக இருக்கும்….
இவரது லேடஸ்ட் படம் வந்த பின்னர், அதன் கதை, காட்சி,
விவரங்கள் வெளிவந்துள்ளன…. இந்தப் படத்தின் கதையையும்
இவரே தான் எழுதி இருக்கிறார்…. இவ்வளவு ஆபாசமான
பாத்திரத்தையும், கதைக்களனையும் அமைத்ததன் மூலம்,
தனது நிஜ உருவத்தையும் – தன்னையறியாமலே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
எந்த திமுகவை, ஆட்சியை – எதிர்த்து, 2 வருடங்களுக்கு முன்,
தானே ஒரு புதிய கட்சியை ஆரம்பித்ததாகச் சொன்னாரோ, அந்தக் கட்சியிலேயே வெறும் ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்காக
ஐக்கியமாகி விட்டதைப் பற்றி எந்த கூச்சமும் இல்லாத ஒருவரைப்
பற்றிய, பல நிஜ செய்திகளை, பின்னணிகளைச் சொல்லி,
ஒரு விரிவான விமரிசனம் எழுத வேண்டுமென்று நினைத்துக்
கொண்டிருந்தேன். வசதிப்பட வில்லை….
இப்போதைக்கு, எழுத்தாளர் அராத்து அவர்கள் எழுதிய ஒரு
விமரிசன கட்டுரையை மட்டும் கீழே பதித்து, கொஞ்சமாக
நிறைவு கொள்கிறேன்…..
இனி அராத்து அவர்கள் –
கமலைப் பற்றி இரண்டு விஷயங்கள்….
1) வழக்கமாக கமல் உளறினாலும், உடல் மொழியில் ஒரு தனித்துவமான தன்னம்பிக்கையும், திமிரும் உளறும் போதும் இருக்கும். கோபிநாத் இண்டர்வியூ பார்த்தேன். மேற்சொன்ன இரண்டும் மிஸ்ஸிங்க்.
உரையாடல் முழுக்க, ஏனோ வலிந்து ப்ளாஸ்டிக்காக இளி இளி என இளித்துக்கொண்டே பேசுகிறார். இது ஒரு பிம்பின் உடல்மொழி. ஏன் கமல் இப்படி மாறினார்? வயதாவதால் வரும் கனிவா? கனிவென்றாலும் இப்படியா இளித்து வழிய வேண்டும்?
2) காப்பி அடிப்பதைப்பற்றி கமல் விளக்கம் கொடுக்கும் க்ளிப்பிங்க் பார்த்தேன். வழக்கம் போல உளறல். ஆனால் முதன்முறையாக, ஆமா நான் காப்பி அடிப்பேன் என ஒத்துக்கொண்டிருக்கிறார்.
“அம்மான்னு கூப்ட அம்மாதான் சொல்லிக்கொடுத்தாங்க” அதுவே காப்பிதான் என ஆரம்பித்து உளறிக்கொட்டினார்.
சமூகத்தை எடுத்துக்கொண்டால் மூத்தோர் சொல்லிக்கொடுத்ததையே காப்பி அடித்துக்கொண்டு அமர்ந்திருந்திருப்போமானால், நாம் அனைவரும் இன்னும் காட்டில் மரப்பொந்துக்குள்தான் அமர்ந்திருப்போம். பெண்கள் உடன்கட்டை ஏறிக்கொண்டிருக்கக்கூடும். இன்ன பிற…
கலை, இலக்கியம், இசை, திரைப்படம் என வருகையில் கிரியேட்டிவிட்டி முக்கியம். ஒரிஜினாலிட்டி முக்கியம். ஒன்றைப்பார்த்து இன்ஸ்பையர் ஆகி அல்லது இன்ஃப்ளூயன்ஸ் ஆகி மறு உருவாக்கம் செய்யும் கோஷ்டி எங்கும் உள்ளது. அவர்களும் கலைஞர்கள் தான்.
அவர்களை ரீமிக்ஸ் கலைஞர்கள், ரீ மேக் கலைஞர்கள் என்பார்கள். கலைஞானி எனச் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். மேலும் அவர்கள் திருட்டுத்தனமாகக் காப்பி அடிக்க மாட்டார்கள். கிரெடிட் கொடுத்து செய்வார்கள்.
கிரியேட்டிவிட்டி , ஒரிஜினாலிட்டி எல்லாம் எல்லோருக்கும் வர வேண்டிய அவசியம் இல்லை. அவரவர்க்கு வருவதை அவரவர் செய்துகொள்ளலாம்.
காப்பி அடித்து விட்டு, அதை வெளிப்படையாக இவ்வளவு நாட்கள் சொல்லாமல் , இணையம் பரவலானவுடன், இனி மறைக்க முடியாது என்ற தருணம் வந்ததும், அம்மா , ஆடு , இலை, ஈ கதையெல்லாம் சொல்லி சமாளிப்பது கேவலத்திலும் கேவலம்.
கமலுக்கு திரைத்துறையில் அனைத்து டெக்னிக்ஸும் தெரியும். அவர் ஒரு மல்டி – டெக்னீஷியன், கிராஃப்ட்ஸ்மென். கலைஞன் அல்ல.
காப்பி அடித்து அதை நியாமமும் படுத்துபவன் கலைஞனே அல்ல. கலைஞன் என்பது ஒரு மனோபாவம். ஒரு ஆட்டிட்யூட். தன் ஒரிஜினல் கலை மூலம் தலைக்கனம் ஏற வேண்டும். அந்த ஏறிய தலைக்கனத்துக்கு உண்மையாக இருக்க வேண்டி ஒரிஜினல்களை படைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
காப்பி அடித்து , அதன் மூலம் எல்லாம் தலைக்கனம் ஏறினால் அதற்குப்பெயர் பைத்தியம்.
இன்னொன்று, கலைஞனாக இல்லாமல் இருப்பது கேவலமும் அல்ல. சிற்பியாகவும் இருக்கலாம். ஆசாரியாகவும் இருக்காலாம். எந்த ஆசாரியும் தன்னைச் மரச் சிற்பி எனச் சொல்லிக்கொள்ள மாட்டார். அந்த இங்கிதம் தெரிய வேண்டும் அவ்வளவுதான்.
கமல் படங்களில் எதுவும் ஒரிஜினல் இல்லை என்பதால்தான் –
இண்டர்நேஷனல் அளவில் அவருடைய படங்களுக்கு சிறு மரியாதையும் இல்லை.
கடைசியாக , நான் ஒரு மாஜி கமல் ரசிகன் என்பதால் இதையும் சொல்லிக்கொண்டு….
தற்போதைய தமிழ் சினிமாவில் பலரும் காப்பி அடிக்கிறார்கள். தமிழ் சினிமா என்றாலே காப்பிதான் என ஆகி விட்டது. ஆனாலும் கமலை மட்டும் ஏன் விமர்சிக்கிறேன் என்றால், சினிமாவில் இருப்பவர்களில் இவர்தான் அதிகம் படித்திருக்கிறார். அட் லீஸ்ட் கார்ல் மார்க்ஸ் என்கிறார். சில தத்துவவாதிகள் பெயரைச் சொல்கிறார். சில எழுத்தாளார்களின் பெயரைச் சொல்கிறார். இவ்வளவு படித்த நீ ஏன்யா இப்படி காப்பி அடிக்கிற? அத வேற திருட்டுத்தனமா செய்ற? என்ற கோபம் தான்.
நம் ஊரில் யோசிக்க கதைகளா இல்லை? கதாசிரியர்களா இல்லை?
தானே நூறு ஃபாரீன் படம் பார்த்து விட்டு, அதிலிருந்து உருவி, தானே தன் டேப்லெட்டில் ஸ்கிரிப்ட் எழுதறேன் பேர்விழி என எழுத வேண்டியது…அதை எல்லாரும் பாராட்ட வேண்டியது…
இதெல்லாம் ஒரு பொழப்பு.
எழுத்தாளனெல்லாம் 1000 பிரதி விற்கும் நாவலுக்கு தனி ஒருவனாக அவ்வளவு மெனக்கெடுகிறான், யோசிக்கிறான், புதிதாக உருவாக்குகிறான். 500 கோடி படத்துக்கு சுலுவாக காப்பி அடிக்க வேண்டியது. அதை பெருமையாக பீற்றிக்கொண்டு , நியாயப்படுத்த எவ்வளவு சுரணையற்றத் தனம் வேண்டும்.
நிறைய படித்தால் மட்டும் போதாது. அதை உள்வாங்கிக்கொள்ளவும், பயன்படுத்தவும் தனி அறிவும், ஆர்வமும், மெனக்கெடலும் வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் கமல்.
…………………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….