இப்படியும் ஒரு தலைவர் ……!!!

……………………………..

…………………………….

1965-ம் ஆண்டில் ஒரு நாள்…

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின், நீண்ட திண்ணையில்,
நடந்து வந்து கொண்டிருந்தார், புகழ்பெற்ற மக்கள் மருத்துவர், டாக்டர்.பி.கே.ஆர் வாரியார் அவர்கள்..

அப்போது, நோயாளிகளுக்கிடையே, ஒரு நடுத்தர வயது தம்பதியர் இருப்பதை கவனித்தார், டாக்டர் வாரியார். தனது கண்களை நம்ப முடியவில்லை அவரால், மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார்.

ஆமாம், அவர்கள் வேறு யாரும் இல்லை. டாக்டர்.வாரியார் அவர்கள் சந்தேகப்பட்டது சரியே.

அங்கே… அந்த திண்ணையில் இருந்தவர்கள், மார்க்சீய அறிஞரும்,
உலக வரலாற்றில், முதன்முறையாக, தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட, கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர், மக்களின் தோழருமான –
தோழர் ஈ. எம். எஸ். அவர்களும், அவரது மனைவியாரும் தான். அவர்கள் அருகில் ஒரு சோற்று பாத்திரமும் இருந்தது.

டாக்டர்.வாரியார் அவர்கள், ஓடிச்சென்று, தோழரிடம் சென்று, என்ன ஏது என்று விசாரித்த போது, தங்களது மகன், அனியன் என்ற இ.எம்.ஶ்ரீதரனுக்கு, ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக மருத்துவமனைக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார் தோழர் ஈ.எம்.எஸ்.
கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வருக்கு அனைத்து வசதிகளும் செய்து தருவதற்கு தயாராக இருப்பதாக, டாக்டர்.வாரியார் தோழரிடம் கூறினார்.

ஆனால், அதை மிகவும் நாகரீகமாக, மறுத்துவிட்டார் தோழர் ஈ.எம்.எஸ் என்ற எளிய தோழர்! பண்பட்ட, தொழிலாளி வர்க்க பண்பாடு………..!

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, டாக்டர்.வாரியார் ஈ.எம்.எஸ். தம்பதியினரை தனது வீட்டுக்கு உணவுக்கு வருமாறு அழைத்தபோது, தங்களிடம் இருந்த சோற்று பாத்திரத்தைச் சுட்டி காட்டியபடி, தங்களது உணவை, தங்களது வீட்டிலிருந்து எடுத்து வந்துள்ளதாக கூறினார்
தோழர் ஈ.எம்.எஸ் என்ற எளிய தோழர்.

டாக்டர் வாரியார், தனது வீட்டுக்கு சென்று உணவுக்கு பிறகு திரும்பி மருத்துவமனைக்கு வரும்போது, அதே திண்ணையில் அமர்ந்து, தங்களது உணவை உண்டு கொண்டிருந்த, தோழர் ஈ.எம். எஸ். அவர்களையும்,
அவரது மனைவியையும், பிரமிப்பை அடக்க முடியாமல் கடந்து சென்று கொண்டிருந்தார், டாக்டர்.வாரியார்.

( ஐ.வி.தாஸ் எழுதி, கேரள பாஷா இன்ஸ்டியூட் வெளியிட்ட “ஈ.எம்.எஸ் வாழ்க்கையும், காலமும்” என்ற நூலில், டாக்டர்.பி.கே.ஆர். வாரியார் எழுதிய ஒரு கட்டுரை… )

……………………………………………………..

முன்னாள் கேரள முதல்வர்,
தோழர் நம்பூதிரி பாட் அவர்களைப்பற்றிய சில விவரங்கள் –

………..

  • கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏலங்குளம் கிராமத்தில் (1909) பிறந்தார். ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூரிதிரிபாட் என்பது முழுப்பெயர். சாதி, பழமைவாதங்களுக்கு எதிராக இளம் வயதிலேயே போராடினார். முற்போக்கு இளைஞர்கள் அமைப்பான வள்ளுவநாடு யோகஷேம சபையில் இணைந்து செயல்பட்டார்.

  • கல்லூரி நாட்களில் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். 1934-ல் காங்கிரஸ் கட்சியில் ஓர் அங்கமாக சோஷலிச காங்கிரஸ் கட்சியை தொடங்கியவர்களில் இவர் முக்கியமானவர். அதன் தேசிய இணை செயலாளராக 6 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டார்.
  • அப்போது, சென்னை மாகாண சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் கருத்துகள், சிந்தனைகளை பத்திரிகைகளில் கட்டுரைகளாக எழுதி வந்தார். ஏழைத் தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தினார். பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார். கேரளாவில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தொடங்கப்பட்டதில் முக்கியப் பங்கு வகித்தார்.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் உடைமைகளை விற்று, கட்சிக்காக செலவிட்டார். ‘தொழிலாளர்களின் தத்துப் பிள்ளை’ என அழைக்கப் பட்டார். பிராமண வகுப்பைச் சேர்ந்த இவர், மீனவர்கள், தொழிலா ளர்கள், தலித்களுடன் இணைந்து அவர்களது முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார்.
  • 1950-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரானார். 1957 தேர்தலில் வென்று கேரள முதல்வரானார். இதன்மூலம், சுதந்திர இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வர் என்ற பெருமை பெற்றார். உலக வரலாற்றிலேயே பொதுவுடைமைத் தலைவர் ஒருவர், மக்களாட்சித் தேர்தல் மூலம் மாநில முதல்வராகப் பதவி ஏற்றதும் இதுவே முதல் முறை.
  • இவரது ஆட்சிக் காலத்தில் கல்வி, நிலச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1964-ல் கட்சி பிளவுபட்டபோது மார்க்சிஸ்ட் பிரிவுடன் இணைந்தார். அதன் பொதுச் செயலாளராக பல ஆண்டுகள் செயல்பட்டார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரள மாநிலம் உருவானதில் முக்கியப் பங்காற்றினார்.
  • இரண்டாவது முறையாக 1967-ல் முதல்வரானார். எதிர்க்கட்சித் தலைவராகவும் தனது கடமையை சிறப்பாகச் செய்தார். ‘மக்கள் திட்டம்’ மற்றும் ‘கேரள இலக்கிய இயக்கம்’ ஆகிய அமைப்புகள் மூலமாக அதிகாரத்தைப் பரவலாக்கும் தன் கொள்கையைப் பரப்பினார்.
  • இலக்கிய ஆர்வம் கொண்டவர். ஆங்கிலம், மலையாளம் இரண்டிலுமே எழுதும் திறன் பெற்றிருந்தார். நில உரிமை, சமூகம், அரசியல், கேரள மாநிலம், வரலாறு, மார்க்ஸியம், தத்துவம் தொடர்பாக பல நூல்களை எழுதியுள்ளார்.
  • இவரது படைப்புகள் ‘ஈஎம்எஸ் சஞ்சிகா’ என்ற தொகுப்பாக பின்னர் வெளிவந்தது. 2 நூல்கள் ‘வேதங்களின் நாடு’, ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு’ என்ற தலைப்புகளில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இறுதி நாட்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதிலும், கட்டுரைகள் எழுதி அதன்மூலம் கட்சியை வழிநடத்தினார்.
  • எளிமையாக வாழ்ந்தவர். ஏறக்குறைய 70 ஆண்டுகாலம் பொது வாழ்வில் ஈடுபட்டவர். ‘ஈ.எம்.எஸ்’ என நேசத்துடன் அழைக்கப்பட்டார். நேர்மையான அரசியல்வாதியாகவும், முன்னுதாரணத் தலைவராகவும் விளங்கிய ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் 89-வது வயதில் (1998) மறைந்தார்.

நம்பவே முடியவில்லை அல்லவா ….

இப்படியும் சில தலைவர்கள் இருந்தார்கள் நம்மிடையே என்று … !!!

…………………………………………………………………………………………………………………………………………………..……….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to இப்படியும் ஒரு தலைவர் ……!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    சில தலைவர்களைப் பற்றிப் படிக்கும்போது இப்படியும் அரசியலில் இருந்து நாட்டுக்காக மக்களுக்காகப் பாடுபட்டார்களா என்று நினைத்து மிகவும் ஆச்சர்யமும் பிரமிப்பும் வருகிறது.

    சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பு மிகப் பலர் இப்படி வாழ்ந்திருந்திருக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு சிலர்தான் தங்கள் வாழ்க்கையை மக்களுக்காக, தாங்கள் கொண்ட கொள்கையின் பிரகாரம் வாழ்ந்திருக்கிறார்கள்.

    பொதுவாக கேரள அரசியல் தலைவர்களே down to earth, இப்போதும்கூட என்று சொல்வார்கள். நம்மில் ஒருவர் அவர் என்ற எண்ணம் அவர்களைப் பார்த்தவுடன் மலையாளிகளுக்கு ஏற்படும் என்பார்கள் (முதல்வர் வீட்டிற்கே நாம் சென்றுவிடமுடியும், பேச முடியும்). சமீபத்தில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகியைப் பற்றி அவ்வாறு நினைக்க நேர்ந்தது (இதோ பத்து நிமிடங்களில் அவர் வெளியே செல்வார், நீங்கள் இருவரும் பார்க்கலாம், நாளை காலையில் தர்பாரில்-மக்களைச் சந்திக்கும் நிகழ்வில், நேராக அவரைச் சென்று பார்த்துப் பேசலாம் என்றார் கோரக்நாத் கோவில் வளாகத்தில் இருந்த காவல் அதிகாரி).

    ஈஎமெஸ் அவர்களைப் பற்றிய பதிவு மனதைத் தொட்டது. ஒருவேளை தற்போது மீண்டும் பாரதத்தில் இறங்கி கம்யூனிஸ்ட் தலைவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்தால், கோடிக்கணக்காக லஞ்சம் வாங்கி கட்சி நடத்தி கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, ஓரிரு சீட்டிற்காக கூட்டணியில் உள்ள பெரிய கட்சியின் காலில் விழுந்துகிடந்து, மக்களைப் பற்றிக்கவலைப்படாமல், அவர்களின் கஷ்டத்தில் பங்கேற்காமல், அவர்களுக்கு நிகழும் அநீதிகளுக்காகப் போராடாமல் இருக்கும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைப் பார்த்து, தான் வாழ்நாளில் பெரும் தவறு செய்துவிட்டதாக நினைப்பாரோ?

    • agni's avatar agni சொல்கிறார்:

      சங்கீ பார்த்தீயா
      சந்தடி சாக்குல இஎம்எஸ் அவர்களையும் கொலைகாரன் ஆதித்யானத்தையும் ஒரே தட்டில் கொண்டு வந்துட்டியே

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.