…………………………….

பணக்காரர்களிடம் எந்த சுவாரசியமும் இல்லை. ஒரு இயந்திரத்தால் உருவாக்கித் தள்ளப்படும் நட்டு போல்டு போல பல பணக்காரர்களும் ஒரே மாதிரி இருப்பார்கள். செமையாக போர் அடிக்கும்.
ஏழைகளிடம் பணம் இல்லையென்றாலும் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருந்தது இல்லை. எதிர்பார்க்க முடியாதது,
விசித்திரமானது எல்லாம் ஏழைகள்தான் செய்வார்கள். முக்கியமாக பண விஷயத்தில்.
இதில் என்னை பெரிதும் கவனிக்க வைத்தவர் , மரியாதை கொள்ள வைத்தவர் ரத்தன் டாட்டா.
ஜி ஆர் டி டாட்டாவைப் பற்றி பல கதைகள் இருந்தாலும், ரத்தன் டாட்டா இங்கிலாந்து கோரஸ் ஸ்டீல் கம்பனியை வாங்கிய கதை மிரட்டலாக இருக்கும். விரிவாக இந்தியா டுடேயில் எழுதியிருந்தார்கள். அற்புதமான கட்டுரை ஆக்கம். ஒரு பரபரப்பான மாஸ் ஹீரோ திரைப்படம் போல இருக்கும்.
ரத்தன் டாட்டா இந்திய வீட்டில் இருந்து எத்தனை மணிக்கு கிளம்பினார் என்பதில் இருந்து ஆரம்பித்து நிமிட நிமடங்களாக விளக்கி , எப்படி டீல் முடித்து மீண்டும் இந்தியா திரும்பினார் என்பது வரை இருக்கும்.
இதை அழகான ஸ்கிரிப்ட் ஆக்கி திரைப்படம் எடுக்கலாம் திரைப்பட இயக்குநர் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இப்போது அவருடைய உயில் தனித்துவமாக இருக்கிறது. இந்த உயிலில் ஒரு பெரிய செய்தி இருக்கிறது.
அவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு 3800 கோடி என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அவர் போதும் போ என நினைத்திருப்பார் போல. அதனால்தான் 3800 கோடியோடு கிடக்கிறது.
இதில் பெரும்பாலானவற்றை டிராஸ்ட் , போன்ற philonthrophy நடவடிக்கைகளுக்கு எழுதி வைத்துள்ளார்.
பங்களா போன்றவற்றை நண்பருக்கு எழுதி வைத்துள்ளார்.
இதில் முக்கியமாக என்னைக் கவர்ந்தது. பணம் இருக்கிறது என வேலை ஆட்களுக்கு தூக்கி அடிக்கவில்லை.
அதிகபட்சமே ஒரு கோடிதான் ஒதுக்கி உள்ளார். அதிலும் அவர்கள் பெற்ற கடன் அடக்கம்.
அவரின் தத்து மகன் போன்ற உதவியாளார் ஷந்தானு நாயுடுவுக்கு வெளிநாட்டில் எம் பி ஏ படிக்க 1 கோடி கடன் தான் கொடுத்துள்ளார்.
அதை தள்ளுபடி செய்திருக்கிறார். தன்னிடம் தான் கணக்கிலடங்கா பணம் உள்ளதே என 1 கோடியை ஷந்தானுவுக்கு சும்மா தூக்கிக் கொடுக்க வில்லை.
ஒரு கோடி டாட்டாவுக்கு தூசி. ஆனால் ஷந்தானுவுக்கு தூசி இல்லை என்பது டாட்டாவுக்கு தெரிந்திருக்கிறது. அப்படிக் கொடுத்திருந்தால் அது ஷந்தானு வாழ்வை டிஸ்டர்ப் செய்திருக்கும். ஷந்தானு தன்மை மாறியிருக்கும்.
ரத்தன் எவருடைய தன்மையும் மாறாமல் உதவி செய்திருக்கிறார் என்பதுதான் முக்கியமான விஷயம்.
இதேபோல பர்ஸனல் செகரட்டரிக்கு 10 லட்சம் , வேலை ஆட்களுக்கு 1 லட்சம் முதல் , 1 கோடி வரை கொடுத்திருக்கிறார். இதில் அவர்கள் வாங்கிய கடனும் அடக்கம்.
பக்கத்து வீட்டுக்காரர் இவரிடம் 18 லட்சமோ என்னமோ கடன் வாங்கியிருக்கிறார் … அதுவும் தள்ளுபடி !
உதவி செய்யும்போது , தான் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற எண்ணத்தில் ரத்தன் எங்குமே செயல்பட்டிருக்கவில்லை என்பது தெரியவருகிறது. அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழுங்கள். அதை தொந்தரவு செய்யாத அளவுக்கு நான் உதவி செய்கிறேன் என்பதுதான் அவருடைய மன ஓட்டமாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன்.
பி.கு 1:
தங்கை முறை உறவுகளுக்கு 800 கோடி அளவில் கொடுத்திருப்பதாகப் படித்தேன். அது இந்த 3800 கோடியில் இருந்தா அல்லது அவரின் ஷேர் இன்வெஸ்ட்மெண்ட் உள்ளிட்ட இன்னபிற முதலீடுகளில் இருந்தா என்பது தெரியவில்லை. இவ்வளவு தொகை அவர்களுக்கு எதற்கு என்பதிலும் விளக்கமில்லை. ஒருக்கால் இதுவும் எதிர்காலத்தில் ஏதேனும் ஃபிலாந்த்ரபி நடவடிக்கைகளுக்குப் போகலாம்.
ஆக , இந்த நாட்டில் இருந்து சம்பாதித்த பெரும்பணத்தை இந்த நாட்டுக்கே அர்பணித்து விட்டு போயிருக்கிறார்.
பி.கு 2 :
டாட்டா லிட்ரரி அவார்ட் என பெயருக்கு ஏதோ செயல்படுகிறார்கள் எனத் தெரிகிறது. இந்த விஷயத்தில் மட்டும் ரத்தன் பெரும்பாலான இந்தியன் ஃபில்ஸ்டைன் மனநிலையிலேயே இருந்திருக்கிறார். ரத்தன் நினைத்திருந்தால்…
1) இந்தியா முழுவதும் இருந்து 100 நலிந்த எழுத்தாளார்களை தத்தெடுத்து வருடம் 1 கோடி அசால்டாக கொடுத்திருக்க முடியும்.
2) ஜேசிபி அவார்ட் , சாஹித்ய அகாடமி அவார்ட் எல்லாவற்றையும் , ஏன் புக்கர் , நோபல் போன்ற அவார்ட்களையே தூக்கி அடிக்கும் படி 100 கோடி பரிசுத் தொகை அறிவித்து புது விருது ஏற்படுத்தி உலகையே மிரள வைத்திருக்க முடியும். மத்திய அரசு வழங்கும் பிச்சைக்காசு 1 லட்சத்தை ஏளனப்படுத்தியிருக்க முடியும். இதுவும் ஒரு கலாச்சார ஃபிலாந்தரபி தானே. ஆனால் ஏனோ செய்யவில்லை, செய்யத் தோன்றவில்லை.
அ) ஒன்று அவருக்கு தோன்றியிருக்காது அல்லது ,
ஆ) எழுத்தாளர்களின் தன்மையான வறுமையிலேயே கிடக்கட்டும் , அவர்களின் நீண்ட கால வறுமைத் தன்மையை மாற்றக்கூடாது என லும்பன் போலவும் சிந்தித்து இருக்கலாம் !
எது எப்படியோ ஒரு தனித்தன்மையான மதிப்பு மிக்க, மரியாதை மிக்க ஆளுமையை இந்தியா இழந்து விட்டது. இனி இதைப்போல ஒருவர் இந்தியாவில் உருவாவது சாத்தியமற்றது. (நன்றி – அராத்து…. )
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….