சாவித்திரி பாய் ….

………………………………………………..

………………………………………………..

இந்த தலைமுறை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு பெண்மணி –

• இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும், சமூக சீர் திருத்தவாதியுமான சாவித்திரி பாய் பூலே, மஹாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டம், நைகோன் கிராமத்தில் 03/01/1831 – அன்று பிறந்தார்.

• இந்தப் பூமியில் மனித இனம் உருவான பின்னர் குறிப்பிட்ட காலம் வரையில் பெரும் எண்ணிக்கை மக்கள் கல்வி கற்கும் உரிமை சில ஆயிரம் ஆண்டுகள் மறுக்கப்பட்டு வந்தது.

• மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்கள், அடிமைகளாக வாழ்ந்த நிலையில், கல்வி கற்கும் வாய்ப்புகள் கிடைத்த பின்னர், அறிவியல் கல்வி கற்று இன்று பகுதி அளவிலான பொருளாதார சுதந்திரம் மற்றும் பகுதி அளவிலான சமூக விடுதலை பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.

• சில ஆயிரம் ஆண்டுகள், ஒடுக்கு முறையின் கீழ் வாழ்ந்து வந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாரிசுகள் அறிவியல் கல்வி மூலமாகவே பகுதி அளவிலான முன்னேற்றம் மற்றும் பகுதி அளவிலான பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றை அடைய முடிந்தது என்பதை அறிந்து செயற்பட வேண்டும்.

• ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அறிவியல் கல்வி அவசியமாகும்.

• பெரும்பாலானோருக்கு இவரது வரலாற்றுப் பங்களிப்புகள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

• சாவித்திரி பாய் பூலே வாழ்ந்த காலத்தில் குழந்தைத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் நாட்டில் இயல்பாக இருந்து வந்தது. சாவித்திரி பாய் பூலேக்கு, 9 வயது இருக்கும் போது, ஜோதிராவ் பூலேவை திருமணம் செய்து கொண்டார்.

• இவர் தன்னுடைய கணவருடன் இணைந்து பல சமூக நலப்பணிகளில் ஈடுபட்டார்.

• சமூக சீர் திருத்தவாதியாக பின்னால் உருவெடுக்க ஜோதிராவ் பூலேவுக்கு அப்போது வயது 13. ஆரம்பத்தில் சாவித்திரி பாய்க்கு, ஜோதிராவ் பூலே கல்வி கற்றுக் கொடுத்தார். தாழ்த்தப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்கான பள்ளியை இந்தத் தம்பதி 1847 – ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்கள்.

• பின்னர், 1848 – ஆம் ஆண்டில் நாட்டிலேயே முதல் முறையாக பெண் குழந்தைகளுக்கான பள்ளியை புனேவில் உள்ள பீடே வாடு பகுதியில் ஆரம்பித்தார்கள்.

• அந்தப் பள்ளி 9 பெண் பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பள்ளிக்கு ஆசிரியராக சாவித்திரி பாய் பூலே தானே பொறுப்பேற்று கல்வி கற்றுக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரானார்.

• அவர் பெண் விடுதலை, சமூக அங்கீகாரம் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 1852 – ஆம் ஆண்டு மஹிளா சேவா மண்டல் என்கின்ற அமைப்பை ஆரம்பித்தார்.

• சமூகத்தில் கல்வி கற்கும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வியைக் கொண்டு செல்லும் பணியில் சாவித்திரி பாய் தன்னுடைய வாழ் நாளைச் செலவிட்டார்.

• அந்தக் காலத்தில் இத்தகைய பணியை மேற்கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே அன்று கல்வி கற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

• மற்றவர்களுக்கு கல்வி கற்கும் உரிமைகள் மறுக்கப்பட்டது. அப்படிபட்ட காலத்தில் பெண்களுக்கு கல்வியைக் கொண்டு சென்றால் எதிர்ப்பு எழாமலா இருந்திருக்கும்…??

• ஆம், பள்ளிக்கு சாவித்திரி பாய் செல்லும் வழியில், அவர் மீது சேற்றையும், சாணத்தையும், மண்ணையும் மாறி மாறி வீசுவார்களாம்.

• இதனை தன்னுடைய கணவர் ஜோதிராவிடம் அவர் கூறியுள்ளார். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?. மாற்று ஆடையை தினமும் எடுத்துச் செல். பள்ளிக்குச் சென்றதும் அதனை மாற்றிக் கொண்டு பாடம் நடத்து என்று அவர் அறிவுரை கூறியுள்ளார்.

• அதன்படி, பள்ளிக்குச் செல்லும் போது இரண்டு புடவைகளை அவர் எடுத்துச் சென்றார். பெண் சிசுக் கொலைக்கு எதிர்ப்பு, விதவை திருமணம், சாதி ஒழிப்பு என பல்வேறு சீர்திருத்த பணிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டார். அதற்காக இலக்கியங்களையும் அவர் படைத்தார்.

• சாவித்திரி பாய் பூலே, போ கல்வி பெறு. புத்தகத்தைக் கையில் எடு. அறிவு வளரும் போது, சிந்தனையில் மாற்றம் ஏற்படும். சிந்தனையில் மாற்றம் ஏற்படும் போது, அனைத்தும் மாறி விடும். கல்வி அறிவே பெண்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் என்று கூறி வந்தார்.

• தீண்டாமை, குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடினார். கணவரின் மறைவுக்குப் பின்னரும், சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார்.

• ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அறிவியல் கல்வி அவசியமாகும் •

• இவர் சிறந்த கவிஞரும் கூட. 1892 – ஆம் ஆண்டு கவிதை நூலை வெளியிட்டார். இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி, பெண் உரிமை, தீண்டாமை என அனைத்துத் தளங்களிலும் கவிதைகள் எழுதி தனி முத்திரை பதித்தார்.

• அவர் அந்தக் காலத்திலேயே தனது கணவரின் சிதைக்கு தீ மூட்டினார். சாவித்திரி பாய் பூலே…!!! ( நன்றி – ரா. ராஜகோபாலன் …)

……………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.