அபூர்வமான மனிதர் எம்.என்.நம்பியார் …!!!

…………………………………………………………

…………………………………………………………


( அற்புதமான மனிதர் எம்.என்.நம்பியார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சேர்ந்து அளித்த ஒரு பேட்டி …!!!)

………………………………..

‘உங்கள் கணவர் சிகரெட் குடிக்கிறாரே, அதற்கு நீங்கள் எதுவும் ஆட்சேபனை சொன்னதில்லையா?”

”இல்லீங்க. வருஷத்துக்கு ரெண்டே மாசம்தான் சிகரெட் குடிப்பார். மீதி மாசங்களிலே குடிக்கமாட்டார்.”

”அதென்ன கணக்கு?”

”என்னவோ அப்படி ஒரு பழக்கம்.”

”உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்?”

”இரண்டு பையன்கள்; ஒரு பெண். அந்தக் காலத்திலேயே நாங்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மேற்கொண்டு விட்டோம்!”

”பொதுவா எத்தனை மணிக்குத் தூங்குவார்?”

”அவராலே நினைச்சவுடனே தூங்கமுடியுங்க. காரணம், கவலையே இல்லாத மனசு. நாமும் சந்தோஷமா இருக்கணும், நம்மோட இருக்கிற மத்தவங்களும் சந்தோஷமா இருக்கணும்னு நினைப்பார். இவ்வளவு நல்லவ ருக்கு எப்போதும் வில்லன் வேஷமே தர்றாங்களேனு நான் கவலைப்படறது உண்டு. ஆனா, அந்தக் கவலை கூட அவருக்குக் கிடையாது. வேஷம்… அது எதுவானாத்தான் என்னங்கிறது அவர் நினைப்பு!”

”குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிப்பாரா?”

”முந்திதான் அது. இப்ப பொண்ணுக்குக் கல்யாணமாகிவிட்டது. பையன்கள் காலேஜுக்குப் போனதுக்கு அப்புறம், நண்பர்கள் யாரும் வராவிட்டால் நான் சமையல் வேலைகளை முடித்துக் கொண்ட பிறகு ரெண்டு பேரும் ஏதாவது கதை பேசிக்கிட்டு இருப்போம். ‘பாட்மின்ட்டன்’ ஆடுவோம். அவருக்கு பூகோளத்திலே ஆர்வம் உண்டு. ருசிகரமான விஷயங்கள் சொல்வார். ராத்திரியிலே பசங்களோடு சேர்ந்து சாப்பிட்டால்தான் அவருக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும்.”

”வருஷா வருஷம் சபரிமலைக்குப் போகிறாரே… இங்கே கோயில்களுக்குப் போவது உண்டா?”

”இல்லீங்க. வீட்டிலேயே பூஜை அறை இருக்கு. நான் பூஜை செய்துகொண்டிருக்கும் போது அவர் வந்து கொஞ்ச நேரம் சாமி கும்பிட்டுட்டுப் போவார். அவ்வளவுதான்!”

”என் மனைவியைக் கேட்காமல் நான் எதையுமே செய்வதில்லை. எனக்கு ஷர்ட் தேர்ந்தெடுப்பதிலிருந்து எனக்கு வேண்டிய எல்லாக் காரியங்களையும் என் மனைவி தான் செய்வது வழக்கம். வீட்டு நிர்வாகத்திலிருந்து என்னை நிர்வகிப்பது வரை எல்லாமே என் மனைவிதான். மனைவிக்கு அடங்கிய கணவன் நான்!” என்கிறார் நம்பியார்.

”நல்லவர்கள் எல்லோரும் தம் மனைவியை இப்படித்தான் புகழ்வார்கள். புகழவேண்டி இருக்கும். காரணம், அவர்களுடைய வாழ்வில் மனைவி ஒரு ‘அஸெட்’! எனக்கு மனைவி தான் எல்லாமே என்று சொல்லிக்கொள்ள நான் வெட்கப்படுவதில்லை. மனைவியுடன் உள்ள உறவுதான் (mutual understanding) வாழ்க்கையை அழகாக அமைக்க முடியும்! என் மனைவி எனக்குக் கண்கண்ட தெய்வம்!” என்கிறார் நம்பியார்.

”இப்போதெல்லாம் வெளிப்புறப் படப் பிடிப்புக்குக்கூட நான் என் மனைவியை அழைத்துச் செல்கிறேன். அவள் நன்கு சமைப்பாள். நான்தான் மற்றவர்கள் தயாரிக்கும் உணவை விரும்பி ஏற்பதில்லையே!” என்று நம்பியார் கூற, கலகலவெனச் சிரிக்கிறார் ருக்மணி…….

……………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.