சுகி சிவம் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது …???

…………………………………..

இந்த முகங்களில் தெரிவது “தவ” களையா அல்லது ( கிணற்றுத் ) ” “தவக்களை “யா …???

………………………………………………………………………………………………………………………..

துவக்கத்தில் விதண்டாவாதம் – காழ்ப்புணர்ச்சி என்று தோன்றினாலும் கூட , உண்மையில் சுகி சிவம் அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கவே செய்கிறது.

இளம் பிராயத்தினரை ஆசிரமம் கவர்ந்து இழுத்துக்கொண்டு அவர்களை சம்பளம் இல்லாத வேலைக்காரர்களாகத் தானே பயன்படுத்திக் கொள்கிறது …?

அவர்களை பெற்று வளர்த்து, படிக்கவைத்து உருவாக்கிய பெற்றோர்களை நிர்க்கதியாக தவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம் ..? பெற்றவர்களை கவனித்துக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமை இல்லையா …???

சாமியார் நேர்மையானவராக இருந்தால், சிறுவயதினரை சேர்த்துக்கொள்ளும் முன்பு, பெற்றோர்களின் அனுமதியை முதலில் பெற்று வாருங்கள் என்று சொல்ல வேண்டாமா …?

ஆனானப்பட்ட ஆதிசங்கரருக்கே, தாயின் சம்மதம் இல்லாமல் சந்நியாசம் பெற தகுதி இல்லை என்று சொல்லப்பட்டு விட்டதே …???

………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சுகி சிவம் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது …???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    சுகி சிவத்துக்கு கடுகளவேனும் நேர்மை இருக்குமானால் சொல்வேந்தர் பட்டத்துக்கு எனக்குத் தகுதியில்லை. காசு மற்றும் சொந்த நலன் கருதி திராவிடத்துக்கும் பிற மதங்களுக்கும் என்னை விற்றுவிட்டேன். லியோனியுடன் சேர்ந்துவிட்டேன். அதனைக் கருத்தில்கொண்டு நான் பேசுவதை நீங்கள் பரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கலாமே என்று எங்களுக்கும் கேட்க ஆசைதான்.

    சில நாட்களுக்கு முன்பு சாரநாத்தில் மற்றும் புத்த கயாவில் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களை நூற்றுக்கணக்கில் பார்த்தேன். சீனியர்களில் சிலரின் முகம் அன்பு கருணையை எனக்குக் காண்பிக்கவில்லை. Who am I to judge them? இலங்கையில் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள்தானே தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள். But who am I to judge them? இதைப்போல மற்ற மதத்தினரைப் பற்றியும் எழுதலாம்… இல்லை பதவி பெற்றுக்கொண்டு, பணம் வாங்கிக்கொண்டு திமுக தலைவர்கள் திராவிடர் கழகப் பேச்சாளர்களைப் போல இந்துக்களை மாத்திரம் குறிவைக்கலாம்.

    இந்தப் பெண்கள் எல்லோரும் சட்டப்படி முடிவெடுக்கும் வயதை அடைந்த பிறகு தன் விருப்பப்படி ஆசிரமத்தில் சேர்ந்திருக்கிறார்கள் என்பது கோர்ட்டில் அவர்கள் கொடுத்த வாக்குமூலங்களில் நிரூபணமாகியிருக்கிறது என்ற செய்தி படித்தேன்.

    Who is this Suki Sivam to judge them? இளவயது காதல் திருமணம், லவ் ஜிகாத் மத மாற்றம் போன்ற சமூகக் கேடுகளுக்கு எதிராகப் போராடியவரா? பதவி காசுக்காக வாயை வாடகைக்கு விடும் நாஞ்சில் சம்பத் வகையறா தானே.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    பெற்றோர்களை நிர்கதியாகத் தவிக்க விடுவது, பெற்றோர்களை கவனிக்க வேண்டியது பிள்ளைஇளின் கடமையில்லை யா? — இந்தக் கேள்வி பலவித எண்ணங்களை கேள்விகளை என்னுள் உருவாக்குகிறது. பயணத்தில் இருப்பதால் விரிவாக தட்டச்சு செய்ய இயலவில்லை. கடந்த 65 வருடங்களில் பலவித மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.மாற்றங்கள் இயலாமை Practical problems என்று அவற்றை நாம் கடக்கிறோம் அப்படித்தான் எதையும் கடக்கவேண்டும். சில விதிவிலக்குகள் சமூக விதியாகிவிடாது.. நம் சமூக நியதியே பெண் என்பவள் இன்னொரு வீட்டுக்கு அவர்களுடைய சந்ததியை வளர்கச் சென்றுவிடுகிறாள். மாறிவரும் காலகட்டத்தில் அவளும் நிறைவாகச் சம்பாதிக்கும்போது தன் பெற்ளோருக்கும் கொஞ்சம் அனுப்ப முடிகிறது. இருந்தாலும் புகுந்த வீட்டின் பெற்றோரைப் போலவே கூட வைத்துக்கொண்டு பார்த்துக்கொள்வது அபூர்வமாகவே நிகழ்கிறது.

    நாம் என்ன செய்தோமோ, எதை சின்சியராக நம்பிச் செய்தோமோ, அதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் நம் வாரிசுகள் அதில் 70 சதமாவது (காலம் மற்றும் சௌகரியங்கள் மாறுதலடைவதால்) செய்வார்கள். We can’t expect our kids to be ideal parents.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.