…………………………………………………………………………..

…………………………………………………………..
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அதானி குழுமத்தின் மீது
பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், தற்போது புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் அதானி குழுமத்தின் மீதான முறைகேடு சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த முறை சற்றும் எதிர்பார்க்காத வகையில்
பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி-யின் தலைவர் மாதபி புச்சு அதானி குழும பங்குகள் முறைகேடாக உயர்த்தப்பட்டதில் தொடர்புடையவராக உள்ளார் என்ற குற்றச்சாட்டைச் செபி முன் வைத்துள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச்-ன் புதிய குற்றச்சாட்டின்படி, செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் “அதானி நிறுவனத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டும் எந்தவிதமான ஒழுங்குமுறை நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்ற தொனியிலேயே அதானி குழுமத்தின் நிர்வாகத்தினர் பதில் அளிக்கக் காரணம் மாதபி புச்டன் அதானி குழுமத்திற்குத் தொடர்பு இருக்கலாம் என்று நாங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தோம்” என்று தெரிவித்துள்ளது.
வினோத் அதானி – செபி தலைவர் தொடர்புடைய IPE Plus Fund கணக்கு உருவானது எப்படி…?
“எங்கள் கணிப்புக்கு ஏற்றப்படி மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் வினோத் அதானி பயன்படுத்திய அதே மர்மமான பெர்முடா மற்றும் மொரிஷஸ் பண்ட் நிறுவன கட்டமைப்புகளில் பங்கு வைத்திருந்தனர் என்பது எங்களுக்கு முன் தெரியவில்லை” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில், தங்களுக்குக் கிடைத்த விசில்ப்ளோவர் வெளியிட்ட ஆவணங்கள் படி மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் 2015-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள IPE Plus Fund 1 என்ற பண்டில் கணக்கைத் தொடங்கியுள்ளனர்.
…………………………………………………..

……………………………………………………
இந்த கணக்கில் செய்யப்பட்ட முதலீட்டுக்கான ஆதாரமாக அவர்கள் சம்பளம் பெற்ற பணத்தை முதலீடு செய்வதாக குறிப்பிட்டு உள்ளனர். மேலும் புச் தம்பதியின் நிகர சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் என்றும் IIFL-ல் ஒரு முக்கிய அதிகாரி கையெழுத்திட்டு உறுதி செய்துள்ளதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. IPE Plus Fund 1 என்ற பல அடுக்குகள் கொண்ட பண்ட் நெட்வொர்க்-ஐ நிர்வாகம் செய்வது IIFL அமைப்பு தான்.
……………………………………………………..

………………………………………………………..
மேலும், மாதபி புச் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செபி-யின் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதற்கு சில வாரங்களுக்கு முன்பாக, அதாவது 2017 மார்ச் 22-ஆம் தேதி, அவரது கணவர் தவால் புச், மொரிஷஸில் உள்ள நிதி நிர்வாக நிறுவனமான ட்ரைடென்ட் டிரஸ்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது மற்றும் தனது மனைவியின் ஜாயின்ட் கணக்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று கோரியுள்ளார். தவால் புச் குறிப்பிடும் கணக்கு Global Dynamic Opportunities Fund (“GDOF”) தொடர்புடையது. இந்த கடிதம் மூலம் மாதபி புச் மற்றும் தவால் புச்-க்கு சொந்தமான கணக்கு, தவால் புச்-ன் முழு கட்டுப்பாட்டிற்கு வந்தது.
……………………………………………

இதற்கு பின்னர், 2018 பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிடப்பட்ட கணக்கு விபத்தில், மாதபி புச்சின் பர்சனல் மெயில் ஐடி-க்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இந்த கட்டமைப்பின் முழு விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதில், “GDOF செல் 90 (IPE Plus Fund 1)” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் புச் தம்பதியின் இந்த பண்டில் இருக்கும் பங்கின் மதிப்பு 872,762.25 டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
……………………………………………

…………………………………………….
பின்னர், 2018 பிப்ரவரி 25-ஆம் தேதி, மாதபி புச் செபி-யின் முழுநேர உறுப்பினராக இருந்தபோது, தனது கணவரின் பெயரில் வணிகம் செய்து, தனது தனிப்பட்ட ஜிமெயில் மூலம் இந்திய இன்ஃபோலைன் நிறுவனத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், “GDOF செல் 90 (IPE Plus Fund 1)” பண்டில் உள்ள பங்குகளை விற்பனை செய்யும்படி கோரியுள்ளார்.
……………………………………

…………………………………….
மாதவி புச்-ன் கணவர் தவால் புச், 2019-ஆம் ஆண்டு பிளாக்ஸ்டோன் நிறுவனத்தில் மூத்த ஆலோசகராகச் சேர்ந்தார். அதற்கு முன்பு அவர் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான யுனிவேர்சல் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
நிதித் துறை, ரியல் எஸ்டேட் அல்லது மூலதன சந்தை துறையில் அனுபவம் இல்லாத தவால் புச், எப்படி பிளாக்ஸ்டோன் போன்ற முதலீட்டு துறையில் ரவுண்டு கட்டி அடிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் மூத்த ஆலோசகராக பதவியேற்க முடியும் என்ற கேள்வியை ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் பிளாக்ஸ்டோன் நிறுவனம், இந்தியாவில் முதல் ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்ட் நிறுவனமான எம்பாசி ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்ட் நிறுவனத்தைத் தொடங்கியது.
இதற்கு 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் SEBI அனுமதி அளித்தது. இது தவால் புச் பிளாக்ஸ்டோனில் சேர்ந்த சில மாதங்களுக்கு முன்பே நடந்துள்ள முக்கியமான விஷயம். இதற்குப் பின்னர், மாதவி புச் SEBI-யில் முக்கிய பொறுப்பில் இருந்த காலகட்டத்தில், பிளாக்ஸ்டோன் நிறுவனம் மேலும் இரண்டு ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்ட் நிறுவனங்களைத் தொடங்கியுள்ளது. இதற்கு SEBI அனுமதி அளித்தது.
மாதவி புச் SEBI அமைப்பின் உயர் பதவியிலும், தவால் புச் பிளாக்ஸ்டோன் நிறுவனத்தில் பணியாற்றிய காலகட்டத்தில் REIT தொடர்பாக SEBI பல்வேறு விதிகளை இயற்றியுள்ளது. இது ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்ட் நிறுவனங்களுக்கு அதிக நன்மை செய்துள்ளது.
குறிப்பாக பிளாக்ஸ்டோன் நிறுவனத்திற்கு இது பெரும்பலனாக அமைந்துள்ளது என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
இதில் குறிப்பாக SEBI பல்வேறு சந்தர்ப்பங்களில் ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்ட் நிறுவனங்கள் (REITs) தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது. இதில் ஏழு கலந்தாய்வு ஆவணங்கள், மாஸ்டர் சுற்றறிக்கையில் மூன்று புதுப்பித்தல், மைர்போ, ஸ்மால், மீடியம் REIT நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டி மற்றும் பிளாக்ஸ்டோன் போன்ற யூனிட் உரிமையாளர்களுக்கான புதிய இயக்குநர் நியமன உரிமைகள் ஆகியவை இக்காலக்கட்டத்தில் கொண்டுவரப்பட்டவை ஆகும்.
இந்த காலக்கட்டத்தில் பிளாக்ஸ்டோன் முதலீட்டில் இயக்கும் Mindspace REIT இந்தியாவின் 2வது பெரிய REIT ஆக ஆகஸ்ட் 2020ல் இருந்தது, Nexus Select Trust மே 2023ல் பட்டியலிடப்பட்டது. டிசம்பர் 2023ல் தவால் புச் பணியாற்றிய பிளாக்ஸ்டோன், எம்பசி REIT நிறுவனத்தில் இருந்த தனது பங்குகளை விற்பனை செய்து சுமார் 853 மில்லியன் டாலர் பணத்தை வெளியேற்றி லாபம் அடைந்தது.
இது இந்தியாவின் மிகப்பெரிய பிளாக் டிரேட் அந்த வருடத்தில் இருந்தது என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது அறிக்கையில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும், 2023 காலகட்டத்தில் நடந்த ஒரு தொழிற்துறை கூட்டத்தில் செபி தலைவராக மாதவி புச் கலந்துகொண்டு ரியல் எஸ்டேட் முதலீட்டு டிர்ஸ்ட் நிறுவனங்களைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக எதிர்காலத்திற்கான முதலீட்டுத் திட்டம் என்றும், அனைத்து முதலீட்டாளர்களும் REIT-ஐ சாதகமான சொத்து முதலீடாகக் கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது கணவர் பணியாற்றும் பிளாக்ஸ்டோன் நிறுவனத்திற்கு இது பெரும்பலன் அளிக்கும் என்பதை மறைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் இந்த அறிக்கை எத்தகைய விளைவுகளை
ஏற்படுத்தப் போகின்றன …??? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…
…………………………………………………………………………………………………………………………………….
பிற்சேர்க்கை –
தற்போது கிடைத்துள்ள ஒரு விவரமான வீடியோ –
…………..
…………………………………………………………………………………………………………………………………………………..



1 Response to “எல்லாத்தையும் ” வாங்கு… ” எல்லாரையும் “வாங்கு ….சிக்கிய செபி தலைவரும், அவர் புருஷனும் ….!!!