………………………………………………….

…………………………………………………….
“எடிட்டோரியல் வித் சுஜித் நாயர்” – காணொளியில் நாயர்
சொல்வது சரியா…..?
ஒரு சில கட்சிகளின் தேர்தல் விளம்பரங்கள் மக்களை முட்டாள்களாக
நினைத்து தான் வெளியிடப்படுகின்றன….
ஆனால், அவற்றை மட்டும் வைத்து அத்தனை வாக்காளர்களையும்
முட்டாள்களாக எடை போடுவது சரியா ….???
……………
முதலில் சுஜித் நாயரின் எடிட்டோரியல் காணொளியை
பார்த்து விடுங்கள் – கீழே –
………………………………………………….
…………………………
சில கட்சிகள், சில தலைவர்கள், மக்களை அப்படித்தான்
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மையே….
ஆனால், இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு….
பற்பல மொழிகள், இனங்கள், ஜாதிகள், மதங்கள்… படித்தவர்கள்,
பாமர மக்கள், நகரத்தினர், கிராமவாசிகள்
ஏழைகள், பணக்காரர்கள், ஆண்கள், பெண்கள் – என்று
எத்தனையோ பாகுபாடுகள்.
இங்கே அனைத்து மக்களையும் ஒரே தராசில் வைத்து
எடைபோட முடியுமா….?
இதில் எதை வைத்து, எந்த தீர்மானத்திற்கு வர முடியும் ….?
சிலரை சில நாள் ஏமாற்றலாம்…
பலரை பல நாள் ஏமாற்றலாம்….
ஆனால் –
எல்லாரையும், எப்போதுமே ஏமாற்றி விட முடியாது.
ஒன்றை மட்டும் சொல்லலாம்….
சில தலைவர்கள் நினைத்துக்கொண்டிருப்பது போல் –
இங்கே – மக்கள் அத்தனை பேரும் முட்டாள்கள் அல்ல ….
.
………………………………………………………………………………………………………………….……..



முதலில் பிஜேபியை தாண்டி,ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றால், பிஜேபியின் ஆட்சியின் ஊழல்களை பட்டியலிடவேண்டும்.
மோடி எவ்வளவு ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார் , அவரின் மனைவிவசிக்கும் மாட மாளிகைகளையும், நகைகளையும், அவர் தினம் தோறும் வாழும் ஆடம்பர வாழ்க்கையையும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.மோடியின் சகோதரர்கள் மோடியை வைத்து இதுவரை எவ்வளவு ஆயிரம் கோடிகளை சம்பாதித்துள்ளார்கள், அவர்கள் பயன்படுத்தும் கார்கள், அவர்களின் மாளிகை வீடுகள் போன்றவற்றை மக்களிடம் காட்சிப்படுத்த வேண்டும்.
மோடியின் வங்கி கணக்கில் எவ்வளவு ஆயிரம், லட்சம் கோடிகள் உள்ளன என்று மக்களிடம் நிரூபிக்க வேண்டும்.
ஆனால் நடப்பதோ …தலைகீழ்……
பாவம் தான் எதிர்க்கட்சிகள்…இங்கு என்ன குடும்ப ஆட்சியா நடைபெறுகிறது….
கடைசியில் பதன்கோட் தாக்குதல் , evm , மதவாதம் ….. இவைதான் அவர்களுக்கு கடைசியில் கிடைத்த அவல் போலும் ….ஒவ்வொரு தேர்தலிலும் இதையே மென்று கொண்டிருக்க வேண்டியதாயிருக்கிறது….
இந்நிலை எந்த எதிரிக்கும் நேர கூடாது இறைவா ….