……………………………………….

………………………………………..
பல சுவாரஸ்யமான, ஆழமான கேள்விகள் …
சாமர்த்தியமான பதில்கள் …
நிகழ்கால அரசியலில் ஆர்வமுடையவர்கள்
அவசியம் பார்க்க வேண்டிய ஒரு பேட்டி கீழே –
கேள்விகேட்கும் நெறியாளர் தமிழினியன்
பதில் சொல்பவர் “துக்ளக்” ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள்.
இந்த நெறியாளரின் வயதை நினைத்தபோது, இவ்வளவு
கூர்மையான, ஆழமான கேள்விகளை நான் நிச்சயமாக
எதிர்பார்க்கவில்லை… இந்த கேள்விகள் அவரது அரசியல் ஞானத்தை
மட்டுமல்லாமல், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கூட
வெளிப்படுத்துகின்றன.
நெறியாளரின் கேள்விகளை, வீசப்படும் வேகப்பந்துகளாக நினைத்தால்,
குருமூர்த்தி அவர்கள் அவற்றை அடித்து விளாசாமல், தனது
ஆற்றலாலும், அனுபவத்தாலும், புத்தி சாதுரியத்தினாலும், வலதிலும்
இடதிலுமாக திசை திருப்பி விடுகிறார்….பந்துகள் இலக்கை எட்டும் முன்னரே
திசை திரும்பி விடுகின்றன ….. !!!
நல்ல ஒரு பேட்டியை அளித்ததற்காக புதியதலைமுறை தொலைக்காட்சியை
பாராட்டும் அதே நேரத்தில், மனதில் ஆச்சரியமும், கேள்வியுமாக,
2 விஷயங்கள் மேலெழும்புகின்றன…
ஆச்சரியம் – புதிய தலைமுறையில் எப்படி, இப்படி ஒரு பேட்டி…..???
நிர்வாகத்தலைமை கவனிக்கும் முன்பே வெளியாகி விட்டதா….???
கேள்வி – இந்த நெறியாளர், இதே தொலைக்காட்சியில்
தொடர்ந்து இதே பாணியில், பணி புரிவாரா …???
பேட்டியை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு சில “சங்கதி”கள்
திரு.குருமூர்த்தி அவர்களிடமிருந்து கிடைக்கும்….
அவை என்ன என்று நான் சொல்லப்போவதில்லை;
அது முழுக்க முழுக்க பார்ப்பவர்களின் கோணத்தையும்,
கூர்மையையும் பொறுத்தது.
………………………………………..
.
…………………………………………………………………………………………………………………………………………………..



next 5 years again BJP? :(
y sad smiley BJP is better than indira congress