…………………………………….

…………………………………………

…………………………………………

……………………………………..

…………………
நேற்று, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஹைகோர்ட், குர்மீத் ராம் ரஹீம்
சிங்குக்கு திரும்பத் திரும்ப பரோல் கொடுக்கப்பட்டதை கடுமையாக
சாடி இருக்கிறது.
குர்மீத் ராம் ரஹீம், 2 பெண் சீடர்களை கற்பழித்த வழக்கிலும்,
இரட்டை கொலை வழக்குகளிலும் 20 வருட கடுங்காவல்
சிறை மற்றும் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு
ஜெயிலில் இருந்தவன்.
கடைசியாக – ஜனவரி, 24 -ல் ஹரியானா அரசால் 50 நாட்கள் பரோல்
வழங்கப்பட்டு சுதந்திரமாக வெளியே திரிந்து கொண்டிருக்கும்
இவன் மார்ச் 10-ந்தேதி சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம்
உத்திரவிட்டிருக்கிறது….
இனி, இவனுக்கு எப்போது பரோல் கொடுக்க வேண்டுமானாலும்,
உயர்நீதிமன்றத்தை கலந்து ஆலோசிக்காமல் ஹரியானா அரசு
தன்னிச்சையாக கொடுக்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம்
கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
2022-ஆம் ஆண்டில் –
பிப்ரவரியில் 21 நாட்களுக்கும்,
ஜூன் மாதத்தில் ஒரு மாதமும்,
அக்டோபரில் 40 நாட்களும் என – மொத்தம் 3 முறை
ஹரியானா அரசால் இவனுக்கு பரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மீண்டும் 2023-ஆம் ஆண்டில் –
ஜனவரியில் 40 நாட்களும்.
ஜூலையில் 30 நாட்களும், மீண்டும்
நவம்பரில் 21 நாட்களும், பரோல் வழங்கப்பட்டிருந்தது.
கடைசியாக – ஜனவரி, 24 -ல் இவனுக்கு ஹரியானா அரசால்
50 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு வெளியே திரிய அனுமதிக்கப்
பட்டிருக்கிறான்.
ஆக, கடந்த 2 வருடங்களில் மொத்தம் 7 முறை இவனுக்கு
பரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது….
இந்த ரேப்பிஸ்ட் மற்றும் கொலைகாரனைப்பற்றிய பின்னணியை
அறியாதவர்களுக்காக, சுருக்கமாக கீழே –
…………..
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ குருசார் மோடியா கிராமத்தில் 1967 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்த குர்மீத்தை அவனது ஏழு வயதில், தேரா சச்சா
சவுதா மத அமைப்பின் தலைவர் ஷா சட்னம் சிங்-ஆல் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் 1990 ஆம் ஆண்டு, அமைப்பின் தலைவராக குர்மீத் ராம் ரஹிம் சிங்கை
ஷா சட்னம் அறிவித்தார்.
(இவன் எப்பேற்பட்ட அயோக்கியன் என்பதை
அப்போது அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லையே …)
2007’ல் சீக்கிய மதகுரு தலைவர் ‘குரு கோவிந்த் சிங்’ போல தன்னை
உருவகப் படுத்திக்கொண்டான். ஒருகட்டத்தில் தன்னை கடவுளாகவே
முன்னிறுத்தத் தொடங்கினான்.
2014 ஆம் ஆண்டு மெசஞ்சர் ஆப் காட் என்ற படத்தில் நடித்த குர்மீத்,
அடுத்தடுத்து 3 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறான்…..
(எல்லாம் சொந்த தயாரிப்பு தான்..!!!)
வெள்ளித்திரையின் சூப்பர் ஹீரோக்களை மிஞ்சும் சாகசங்களை தனது திரைப்படத்தில் வெளிப்படுத்தி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான
ரசிகர்க்ள் கம் சீடர்களை உருவாக்கிக்கொண்ட குர்மீத் ராம் ரஹிம் சிங்,
பல சர்ச்சைகளிலும், வழக்குகளிலும் சிக்கினான்….
ஆசிரமப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதான
சர்ச்சை. இதனை அம்பலப்படுத்த முயன்ற பத்திரிகையாளர் ‘ராம் சந்தர்
சத்ரபதி’ என்பவரின் கொலை சம்பவத்தில் சிக்கியதாக சர்ச்சை. ஆசிரமப் பணியாளர் ‘ரஞ்சித் சிங்’ கொலை வழக்கிலும் இவனது பெயர் அடிபட்டது.
- இதுபோன்ற சர்ச்சைகளுக்கிடையே பாலியல் வன்கொடுமை வழக்கு
மற்றும் கொலை வழக்கு என இரண்டு வழக்குகள் அவன் மீது பாய்ந்தன.
2002’ல் தேரா சச்சா சவுதா ஆசிரமத்திலிருந்து, ஒரு மொட்டைக் கடிதாசு
-அன்றையப் பிரதமர் வாஜ்பாய்க்கு சென்றது.
அதில், ‘குர்மித் ராம் ரஹீம் சிங்கின் பாலியல் தொல்லை’ பற்றி
பல குற்றச்சாட்டுகள் எழுதப்பட்டிருந்தது.
விளைவு, வாஜ்பாய் அவர்கள் விசாரணைக்கு உத்திரவிட்டார்.
செப்டம்பர் 2002’ல் வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
டிசம்பர் 2002-ல் ரஹீம் மீது வழக்குப் பதிவு செய்தது சி.பி.ஐ.
ஐந்து ஆண்டுகள் கழித்து 2007-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் 1999 முதல் 2001 வரை குர்மித் ராம் ரஹீம் சிங் இரண்டு பெண்களை
பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது.
2009 மற்றும் 2010-ல் இரண்டு பெண்களும் வாக்குமூலம் அளித்தனர்.
அதுவரையிலும் அம்பாலா நகரில் நடைபெற்று வந்த விசாரணை நீதிமன்றம் பஞ்ச்குலாவுக்கு மாற்றப்பட்டது.
இந்தியப் புலனாய்வுத் துறையின் சிறப்பு நீதிமன்றம் இவனை
‘வன்புணர்வுக் குற்றவாளி’ என 25 ஆகஸ்ட், 2017 அன்று அறிவித்தது.
இந்தத் தீர்ப்பு வெளியானதும் இந்த பொறுக்கியின் ஆதரவாளர்களால் ஏற்பட்ட வன்முறைகளில் 36 பேர் கொல்லப்பட்டனர்; 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இவனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்பின், கொலைக்குற்ற வழக்கில் வெளியான தீர்ப்பில் இவனுக்கு
ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது…..
…………………………
இப்பேற்பட்ட ஒரு பொறுக்கி, அயோக்கியன், போலி சாமியாருக்கு ஹரியானா அரசு இத்தனை உதவிகள் செய்வது ஏன்….? இவ்வளவு பரோல்கள் ஏன்…?
இவனிடமிருந்து பதிலுக்கு என்ன எதிர்பார்க்கப்படுகிறது…..????
.
…………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….