உலகில் அதிக அளவில் யூதர்களை கொண்ட – டாப் 10 நாடுகள் ….

…………………………………..

………………………………….

நான் காரணத்தோடு தான் இந்த காணொளியை
இங்கே பதிவிடுகிறேன்…..

இதை பார்த்த பிறகு இஸ்ரேலின் தற்போதைய
பாலஸ்தீன நடவடிக்கைகளைப் பற்றி உங்கள் மனதில்
தோன்றும் கருத்து என்ன …???

முடிந்தவர்கள் பின்னூட்டத்தின் மூலம் தெரியப்படுத்துங்களேன்….

………………………………….

.
…………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to உலகில் அதிக அளவில் யூதர்களை கொண்ட – டாப் 10 நாடுகள் ….

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இந்தக் காணொளி சொல்லும் விஷயம் எனக்குப் புரியவில்லை. பல்வேறு நாடுகளில் யூதர்கள் வசிக்கிறார்கள் (during aggression, they moved to various countries). பிறகு இஸ்ரேல் நாடு உருவான பிறகு பலர் தாங்கள் இருக்கும் நாட்டிலேயே இருந்திருக்கிறார்கள். இஸ்ரேலில் 85 சதம் யூதர்கள்.

    இதற்கும் தற்போதைய பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்? இஸ்ரேல், ஆறு மாதங்களுக்கு முன்பு பாலஸ்தீனத்தின்மீது படையெடுத்திருந்தால் அது வேறு அர்த்தம் தரும். தற்போது ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி ஆயிரம் யூதர்களைக் கொன்றனர். இஸ்ரேல் அதற்கு பதில் தாக்குதல் நடத்தி, எதிர்காலத்திலும் இந்த மாதிரி பயங்கரவாதச் செயல் தன் நாட்டிற்கு எதிராக நடைபெறக்கூடாது என்று ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க முயல்கிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் தந்திருப்பவர்களும், அவர்களோடு சேர்ந்தவர்களும்கூட இந்தப் போரினால் பாதிக்கப்படுகிறார்கள். எந்த warம், அப்பாவிளையும் பாதிக்கும். அதுதான் இப்போதும் நடக்கிறது. இஸ்ரேல் முடிந்த அளவு அதனைத் தவிர்க்க முயல்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலில் புகுந்து குழந்தை முதியவர்கள் என்று பலரையும் கடத்தியது, கொன்றது உங்களுக்கு தியாகமாகத் தெரிகிறதா? நாம் கார்கில் போர் நடத்தியது aggressionஆ இல்லை நம் நாட்டைப் பாதுகாத்துக்கொள்ளவா? அந்தப் போரில் இறந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள்/பயங்கரவாதிகள் மாத்திரம்தானா?

    நிற்க…. 1990ல் ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தது, அதனைத் தன் நாட்டின் ஒரு பகுதியாகவும் அறிவித்தது. இது aggression. அந்தச் சமயத்தில் குவைத்தில் இருந்த (வேலைக்கு வந்து அந்த நாட்டினால் வாழ்ந்துகொண்டிருந்த) பாலஸ்தீனியர்கள் குவைத்துக்கு எதிராக ஈராக்கிற்கு ஆதரவளித்தனர். பெரும் பொருட்செலவோடு அந்த குவைத் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்ததும், most பாலஸ்தீனியர்கள் குவைத்தைவிட்டுத் துரத்தப்பட்டனர்.

    நீங்கள் இஸ்ரேல் நடத்தும் இந்தப் போரை பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போர் என்று பார்க்கிறீர்கள். அந்தப் பார்வை தவறு. இஸ்ரேல் தன் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் இந்தப் போரில் ஈடுபடுகிறது என்று நான் பார்க்கிறேன்.

    நம் நாட்டு முஸ்லீம்கள், யூத முஸ்லீம்களுக்கு இடையிலான போர் என்று நினைத்து, பாலஸ்தீனத்தை/முஸ்லீம்களை ஆதரிக்கிறார்கள். இதைப்போன்றுதான், கம்யூனிஸ்ட் சங்கரையாவும், இந்தியா சீனா போரின்போது, சீனாவை ஆதரித்தார். (அப்புறம் இந்தியாவில் டாக்டர் பட்டமும் எதிர்பார்த்தார்). இத்தகைய போக்குகள் தேசத்துக்கு ஆதரவானது அல்ல.

    கல்ஃப் தேசங்களில் ஒருவர், இஸ்ரேலுக்குச் சென்றதற்கான ஆதாரத்தை பாஸ்போர்ட்டில் வைத்திருந்தால், பல நாடுகளில் நுழைவதே சிக்கல். அதனால் pilgrimage செல்பவர்கள்கூட, ஜோர்டான் சென்று பிறகு தனி அனுமதிப் பேப்பரை வைத்துக்கொள்வார்கள், பாஸ்போர்ட்டில் Entry/Exit stamp அல்லது விசா ஆதாரங்கள் இருக்காது. அந்தமாதிரி இருக்கும் நிலையிலேயே, பஹ்ரைனில் வியாபாரம் பார்த்துவந்த பல யூதர்கள் இருந்தனர்.

  2. jayakumar chandrasekaran's avatar jayakumar chandrasekaran சொல்கிறார்:

    பலஸ்தீனியர்கள் மேல் போர் தொடுக்க ஒரு காரணம் வேண்டும் என்பதற்காக நேதன்யாஹு நம்முடைய ஜி இடம் படித்துக் கொண்ட ஒரு புல்வாமா தான் ஹமாஸின் துவக்கத் தாககுதல். அவ்வளவு தூரம் மோஸஸாட் ஹமாசையும் ஊடுருவி உள்ளது. . இந்த உண்மை சிறிது காலத்தில் வெளிப்படும்.
    Jayakumar

  3. Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    நீங்க ஈழத் தமிழர்களை மனதில் வைத்துத்தான் இதனை பதிவேற்றியுள்ளீர்கள் சரியா

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.