………………………………………..

…………………………………………..
பொதுவாக நமக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு
சென்று டாக்டரைக் காணும்போது, குறிப்பிட்ட டாக்டரை
தான் தேடிப் போவோம். ஏனென்றால், அந்த டாக்டரின் கனிவான
பேச்சு, சிகிச்சை அளிக்கும் விதம், நோயாளிகளிடம் அவரது
அணுகுமுறை போன்றவை நமக்கு மிகவும் பிடித்து இருக்கும்.
ஒரு டாக்டரின் திறமைக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம்
அவர் தனது நோயாளிகளை நடத்தும் விதத்திற்கும் உண்டு.
அமெரிக்காவில் இரைப்பை குடலியல் நிபுணராக பணியாற்றும்
தமிழகத்தை சேர்ந்த டாக்டர் பால் என்றழைக்கப்படும் பழனியப்பன் மாணிக்கம் –
சமூக ஊடகங்களில் தனது நகைச்சுவை அல்லது மெடிக்கல் காமெடி
(மருத்துவ நகைச்சுவை) மூலம் முக்கியமான தகவல்களை அனைவரும் ரசிக்கும்படி கொடுக்கிறார். துவக்க காலங்களில், அவரது நோயாளிகள் மட்டுமே பயன்பெற்று வந்த அவரது நகைச்சுவையை –
தற்போது, சமூக ஊடகங்களில் இடம் பெறும் மெட்-காம் காணொளிகள்
மூலம் அனைவரும் சேர்ந்து ரசிக்க முடிகிறது.
முதலில் கோவிட்-19 தொடர்பாக அவர் போட்ட சில வீடியோக்களுக்கு
நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததால், அது அவரை மேலும் பல வீடியோக்களை
உருவாக்க வழிவகுத்தது. பல்வேறு மருத்துவ விஷயங்களை
நகைச்சுவையாக சொல்லத் துவங்கினார்…. இன்று டாக்டர் பாலுக்கு
யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள்
இருக்கிறார்கள்.
டாக்டர் பால், வீடியோக்களை தவிர்த்து பல ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நேரடியாகயும் நடத்தி வருகிறார். அமெரிக்கா,
இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தனது மெட்காம் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை அவர் நடத்தி வருகிறார்.
டாக்டர் பால் பேட்டி ஒன்றில் கூறுகையில்,
” முன்பு நான் 100 கிலோ எடை இருந்தேன், அப்போது
வேலை செய்யும் போது படபடப்பு ஏற்பட்டது. உடல் எடையை குறைக்க ஒவ்வொரு வித உணவையும் முயற்சி செய்தேன். நோயாளிகளுடன்
சேர்ந்து, உண்ணாவிரத ஆய்வு திட்டத்தை தொடங்கினேன்.
இதில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனை தனிப்பட்ட வாழ்க்கையிலும்
செய்யத் தொடங்கினேன். கிட்டத்தட்ட 25 கிலோ எடை குறைந்த பிறகு,
நான் கற்றுக் கொண்ட பாடங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஒரு மருத்துவராகவே உடல் எடையை குறைக்க நான்
மிகவும் அவஸ்தைப்பட்டேன். அப்படியானால், சாதாரண மக்களுக்கு
இது எவ்வளவு கடினமானதாக இருக்கும் என்று நான் ஆச்சரியப்பட்டேன்.
அதனால் தான் ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுக் கொள்ள
மக்களுக்கு உதவ, இன்ஸ்டாகிராமில் ரீல்கள் உருவாக்கினேன்.
மக்களை சிரிக்க வைப்பதில் கிடைக்கும் திருப்தியை நான் மிகவும் விரும்புகிறேன்.
எனது டிப்ஸ்களை பின்பற்றிய பிறகு பலர் என்னிடம்
வந்து தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை பகிர்ந்து
கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் கதைகளை பகிர்ந்து கொள்ளும்போது அவர்களின் கண்களில் கண்ணீர் தோன்றுகிறது. அது என்னை வியப்பில் ஆழ்த்தியது. மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் …
மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன் ” என்று தெரிவித்தார்…..
கீழே டாக்டர் பால் & ப்ரியா பால் ஆகியோரின் ஒரு ஸ்டேண்ட் அப் காமெடி -பேட்டி – காணொளி …. (எதிர்காலத்தில் இன்னும் சில வீடியோக்களையும் இந்த வரிசையில் எதிர்பார்க்கலாம்….)
………………..
“குப்பைல போட வேண்டியத என் தொப்பைல போட்டுடுவா..!😂”
Dr Pal & Priya Pal Fun Interview
…………..
.
……………………………………………………………………………………………………………………….……..



…
ஜெ. நினைவு நாளில் ….சென்னையில் இயற்கையின் நினைவுறுத்தல் விளையாட்டு ….!!!
…………………
https://www.indiatoday.in/india/video/videos-chennai-under-water-amid-non-stop-rain-haunting-reminder-of-2015-deluge-2471723-2023-12-04
இதைப்பற்றிப் பேச, எழுத எந்த மீடியாவிற்கும் (தினமலர் தவிர என்று தோன்றுகிறது) யோக்கியதை இல்லை. இவர்களெல்லாம் நாட்டிற்குக் கேடு விளைவிப்பவர்கள், உண்மையை நடுநிலையாக எழுதாததன் மூலம். ஜெ. காலத்தில் எப்படியெல்லாம் எழுதினார்கள், ஆனால் இப்போது பழியை இயற்கை மீது தூக்கிப்போடுகிறார்கள், இத்தனைக்கும் இப்போதுதான் ஐயாயிரம் கோடிகள் செலவு செய்துவிட்டு.
ஸ்டாலின் சொல்கிறார், இது இயற்கைப் பேரிடராம். இதைச் சொல்ல அவருக்குத்தான் வெட்கம் இல்லை. ஜெ. காலத்தில் இது நடந்தபோது எப்படியெல்லாம் பேசினார்கள். இப்போது மாத்திரம் இது இயற்கையின் சதியா? திமுகவின் கையாலாகாத் தனமும் ஊழலும், பத்திரிகைகளின் நேர்மையற்ற போக்கும், திமுக கூட்டணிக் கட்சிகளின் கொத்தடிமைத்தனமும்தான் எனக்குப் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.