துக்ளக் ஆசிரியர் சோ’வின் கேள்விக்கு -கலைஞர் கருணாநிதி – தந்த பதில் …..!!!

………………………………….

…………………………………

………………………………………………………………….

துக்ளக் இதழுக்கு சோ அவர்கள் ஆசிரியராக இருந்தபோது,
கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது,
அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி இது –

சோ கேள்வி : ‘’வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா போன்றவர்கள் மீது வழக்குகள்
பதிவாகி இருக்கின்றன. இதே மாதிரி பார்த்தால், நீங்கள் உட்பட பல அரசியல்வாதிகள் மீதும் வழக்குகள் வர முடியாதா?’’

கருணாநிதி பதில் : “எப்படி வரமுடியும்? நாங்கள் ஆட்சியில்
இருக்கும்போது சொத்து ……..
வந்த வழியைக் காட்ட முடியாமல் ஏதாவது
சேர்த்திருக்கிறோமா……??? 😊😊😊

என்னுடைய வருமான வரிக் கணக்குகள் ஒழுங்காக இருக்கின்றன.
முறையாக வருமான வரி கட்டி வந்திருக்கிறேன்.

நான் எவ்வளவு காலம் சினிமா உலகில் பணியாற்றினேன் என்பது
உங்களுக்கே கூடத் தெரியும்.

1950-ல் ஆரம்பித்து சுமார் 76 படங்களுக்கு கதை வசனம்
எழுதியிருக்கிறேன். பத்து படங்களே நானே தயாரித்திருக்கிறேன்.

அவற்றில் சரியாக ஓடாத படங்கள் –
பெரும் நஷ்டத்தைத் தந்துவிட வில்லை.

ஆனால் வெற்றிப் படங்களோ நிறைய லாபத்தைத் தந்தன.
எம்.ஜி.ஆரை வைத்தே மூன்று படங்கள் எடுத்திருக்கிறேன்.

என்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும் சிலர் சினிமாவில் எழுத்தாளர்களாகவும், டைரக்டர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
படம் தயாரித்திருக்கிறார்கள்.
மாறனின் மகன் கலாநிதி மாறன் சன் டிவி நடத்துகிறார்.

ஆக ஒவ்வொருவருக்கும் வருமானத்திற்கான
வழிமுனை-சோர்ஸ்- ஒழுங்காக இருக்கிறது. ( 😊😊😊 )
எல்லாமே வருமானவரி இலாகாவினால் ஆய்வு செய்யப்பட்டு
ஏற்கப்பட்ட வருமானம்.

அப்படி இருக்க வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்ததாக
என் மீதோ, எங்கள் குடும்பத்தின் மீதோ வழக்கு வருவதற்கு
வாய்ப்பே இல்லை’’ …… !!!

.
……………………………………………………………………………………………………….…

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to துக்ளக் ஆசிரியர் சோ’வின் கேள்விக்கு -கலைஞர் கருணாநிதி – தந்த பதில் …..!!!

  1. Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    இதுக்கு பேர்தான் விஞ்ஞான வழி ஊழல்

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    உங்களுக்கும் எனக்கும்தான் இப்படி கணக்கு காண்பிக்கத் தெரியாது. அரசியல்வாதிகளுக்கு எல்லாமே ஜுஜுபி. இப்படித்தான் ப.சிதம்பரம், அவர் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு முட்டைக்கோஸ் விளைவித்தார் என்று கணக்கு காண்பித்தாராம் (பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவரது வீட்டில் கோஸ் விளைவதில்லை. அவரும் விவசாயி என்ற நிலையிலிருந்து விலகிவிட்டார்)

    நியாயமாக சம்பாதித்துத்தான் லட்சம் கோடி சொத்துக்கள் அவருக்குச் சேர்ந்தன.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.