அரசு அழைப்பிதழ் – ஏன் இந்த முரண்பாடு …?

………………………………….

………………………………….

கீழே ஒரு கல்வெட்டு எழுத்து –

……………..

இராஜ ராஜ சோழன் -‘ ஜ ‘ சோழன் காலத்திலேயே
இருந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு அத்தாட்சி….

மேலே ஒரு அழைப்பிதழ்-

அதில் ஒரு இடத்தில் – ‘ஸ்’ ஏற்கப்பட்டிருக்கிறது….
அதே இதழில் – ‘ஜ’ ஏற்கப்படவில்லை … பதிலுக்கு ‘ச’


ஒன்று சுடாலின் என்று போடுங்கள் அல்லது
இராஜ ராஜ என்று என்று போடுங்கள் –

ஒரே அழைப்பிதழில் இரண்டு வித தமிழா ….?
இந்த முரண்பாடு அசிங்கமாகத் தெரியவில்லை…..???

ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ இவையும் தமிழ் எழுத்துக்களே.
இந்த எழுத்துக்கள், இந்த வடிவத்தில்,
நிச்சயமாக – வேறு மொழிகளில் இல்லை.

ஆனால் இவை வடமொழி (பழங்கால வட இந்திய மக்களின்
மொழியான பிராகிருதம்) உச்சரிப்பிற்கு ஏற்ப
தமிழில் எழுத்துக்கள் இல்லாததால் வடமொழி ஒலிப்பிற்காக
இணைக்கப்பட்ட எழுத்துக்கள்.
இவை கிரந்த எழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன.

மொழி என்பது ஓசைகளை உள்ளடக்கியது தானே.
ஓசைகளே எழுத்துக்களாகின்றன. இப்படி இருக்கையில்,
சில ஓசைகளுக்கான எழுத்து வடிவங்கள் நமது மொழியில் ஏதோ ஒரு காரணத்திற்காய் இல்லாமல் ஆகிறது எனில்,
அதை நிரப்புவதில் என்ன தவறு …. ? மேற்கண்டவை
அப்படிபட்ட எழுத்துக்கள் தானே. இவற்றை உபயோகிப்பதில்
என்ன தவறு?

‘ழ’ நமது மொழிக்கே உள்ள ஓர் எழுத்து என்பதில் பெருமை படும்
அதே நேரத்தில நமது மொழியில் இல்லாத எழுத்துக்கள் குறித்து
அக்கறையும் கொள்ள வேண்டும் அல்லவா ….?

உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்துகளை. அதுவும் ஏற்கெனவே
பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருப்பவற்றை
ஏற்றுக் கொள்வதில் வெட்கமென்ன, தயக்கமென்ன …….?

இதனால், தமிழ் மேலும் மெருகூட்டப்படுகிறது.
தமிழில் உச்சரிக்க முடியாத வார்த்தைகளே கிடையாது
என்றிருந்தால் அது நமக்குப் பெருமை தானே….?


……………………………………………………………….

.

………………………………………………………..……

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to அரசு அழைப்பிதழ் – ஏன் இந்த முரண்பாடு …?

  1. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    நீங்கள் எழுதிய அளவு யோசித்து செயல்படுபவர்களா இவர்கள்? தமிழ் மீது இவர்களுக்கு என்ன அக்கறை? நீங்கள் சொன்ன விஷயத்தில் இருக்கும் ‘வட’ என்பதை எதித்துதான் இவர்கள் அரசியலே இருக்கிறது. அப்படி இருக்கும்போது இதை எப்படி ஒத்துக்கொள்வார்கள்?

    ராஜராஜன் என்பதை ராசராசன் என்று எழுதினால் அந்த அரசனா வந்து கேட்கப்போகிறான்? அதுவே ஸ்டாலின் என்பதை சுடாலின் என்று எழுதிவிட்டால் எழுதியவர்கள் கதி?

    தமிழ் எக்கேடு கேட்டால் இவர்களுக்கென்ன?

  2. suryaj's avatar suryaj சொல்கிறார்:

    “ஜ” என்ற எழுத்தைத் தவிர்த்துத் தமிழ் காக்கப் பட்டு விட்டது. ராஜராஜன் காலக் கல்வெட்டிலியே “ஜ” என்ற எழுத்து பயன்படுத்தப் பட்டிருந்தாலும், கருணாநிதிச் சோழன் காலத்தில் “ஜ” போன்ற வடமொழி எழுத்துகள் கன்னித்தமிழின் பரிசுத்தம் கெடாமல் இருக்கத் தவிர்க்கப் பட வேண்டிய ஆரியப் பயன்பாடு. அதே சமயம், “சுடாலின்” என்று எழுதாமல் “ஸ்டாலின்” என்று எழுதுவது மூலம் ஆரியர்கள் மேல் எந்த வன்மமும் எங்களுக்கில்லை என்ற செய்தியும் சொல்லப்படுகிறது. இதிலென்ன தவறு கண்டீர் நீர்? வாழ்க தமிழ்! வளர்க கருணாநிதிச் சோழனின் குடும்பம்!

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இதற்கு (ஜ தவிர்க்கப்படுவதற்கு) காரணம் அரசியல் மாத்திரமே. வி.சி.க, அகத்து (ஆகஸ்டாம்) என்றெல்லாம் சுவர்களில் எழுதுவதைக் கவனித்ததில்லையா? அரசியல்வாதிகளில் தமிழ் அறிந்தவர்களே மிக மிகக் குறைவு. எத்தனைபேர் உண்மையாகப் படிப்பறிவு கொண்டவர்கள் என்பதைச் சுலபமாகக் கணக்கெடுத்துவிடலாம்.

    இலக்கியங்களில் ஷ, ஜ, ஸ போன்றவை உபயோகப்படுத்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக தமிழ் எழுத்துக்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன (வைஷ்ணவர்-வைட்டணவர், விஷ்ணு-விட்டு, ராஜ – ராச, தேஜஸ்-தேசு, பூஜை-பூசை என்றெல்லாம்).

    எழுத்தில், அதிலும் பெயர்கள் அப்படியேதான் உபயோகப்படுத்தப்பட வேண்டும். அதனால் ராஜராஜ சோழன் என்பதுதான் சரி. அதுபோல ஸ்டாலின். அதுவும் தவிர, எவை எவை இயற்கையான தமிழ்ச் சொற்கள், எவை பிறமொழியிலிருந்து வந்து தமிழர்கள் உபயோகப்படுத்த ஆரம்பித்தவை, நாம் எப்போதும் இயற்கையான தமிழ் சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதெல்லாம் பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை). ஆனால் இதெல்லாம் தெரிய ‘தமிழ் மொழி’ தெரிந்திருக்கவேண்டும். தமிழ் அறிவு இல்லாததால் இப்படி அழைப்பிதழ் அடிக்கப்படுகிறது. அரசின் அழைப்பிதழைச் சரி பார்க்க ஓய்வு பெற்ற தமிழாசிரியர் யாரையாவது பதிவியில் அமர்த்தினால் தேவலை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.