நாளந்தாவும், வராஹமிஹிரரும் ….

………………………………………………………………………..

……………………………………………………….

……………………………………………………..

………………………………………………………………………………………………………….

மேலே உள்ள புகைப்படங்கள் –

ANCIENT NALANDA UNIVERSITY’S RUINS

( The Establishment Of Mahavira Was Formed By The
Emperor Kumara Gupta In The Fifth Century A.D.
From The 5th To 12th Century The Knowledge Of
This Place Was In The State Of Climax. Due To International Reputation, Large Number Of
Students Had Come To Study From China, Mongolia,
Tibet, Korea And Other Asian Countries.
The Level Of Teaching Was Extremely High Here…)

………………………………………………………………………………………………………………………………

விக்கிபீடியா சொல்கிறது –

வராஹமிஹிரர் (VARAHAMIHIRA, 505-587 CE) உஜ்ஜையினில்
(இன்றை மத்திய பிரதேசம், இந்தூர் அருகே உள்ளது…)
வாழ்ந்த ஒரு இந்திய வானியலாளர், கணித மேதை மற்றும் சோதிடரும்
ஆவார். இவர் வராகர் என்றும், மிகிர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இன்றைய மால்வாவிற்கு அருகிலுள்ள அவந்திப் பகுதியில் பிறந்தவர்.
இவரது தந்தை ஆதித்தியதாசரும் ஒரு வானியலாளர்.

வராகமிகிரர்
பிறப்பு – 505 CE
இறப்பு – 587 CE
தொழில் – இந்திய சோதிடர், கணிதவியலாளர்
காலம் – குப்தப் பேரரசு
கருப்பொருள் -வானியல், சோதிடம், கணிதம்
குறிப்பிடத்தக்க படைப்புகள் -பஞ்ச சித்தாந்திகம்,
பிருகத் சம்கிதம் (Brihat-Samhita),
பிருகத சாதகம் (Brihat Jataka)

……………………………..

சந்திரகுப்தர் காலத்தில் வாழ்ந்த வானசாஸ்திர அறிஞர் வராகமித்திரர். உஜ்ஜயினியில் 505-ம் ஆண்டு பிறந்தார். கிரகணம் வரப்போவதை முன்கூட்டியே அறிந்து சொல்லும் எளிய முறையை வராகமித்திரர் கண்டறிந்தார். அதாவது, எண்ணெய்க் கிண்ணம் ஒன்றில் கீரையை மிதக்கவிடும் செயல்முறையின் வழியே எப்போது கிரகணம் தோன்றும்
என்று சொல்லி இருக்கிறார்.

கூடுதலாக, கோள்களின் இணைப்பே கிரகணத்துக்குக் காரணம் என்று அறிவியல்பூர்வமாக எழுதினார். இது, கிரகணம் பற்றி வெள்ளைக்காரர்கள் கணித்து அறிவதற்கு பல நூற்றாண்டுக்கு முன்பே உருவான அறிவியல்.

பௌத்த மதம் புகழ்பெற்றிருந்த காலத்தில், இந்தியாவில் புகழ்பெற்ற
ஆறு பௌத்தப் பல்கலைக்கழகங்கள் இருந்தன. அவை, நாலந்தா,
விக்ரமசீலம், உடந்தாபுரி, சோமபுரம், ஜகத்தாலம், வல்லடி ஆகியவை.
இந்த ஆறு பல்கலைக்கழகங்களிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தார்கள். தனித்தனிப் பாடப் பிரிவுகள் இருந்தன. நாலந்தாவில்
1,510 ஆசிரியர்கள் இருந்தார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
நுழைவுத் தேர்வு நடத்தித்தான் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

பேராசிரியர்களை ‘துவார பண்டிதர்’ என்ற அழைத்தார்கள். பயிற்று மொழிகள் பாலியும் சமஸ்கிருதமும். ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் தனித்தனியாக விரிவுரை மண்டபம் என்று ஓர் இடம் ஒதுக்கப்பட்டு
இருந்தது. கல்வி நிலைய வளாகத்துக்கு உள்ளேயே ஆசிரியர்கள் தங்கியிருந்தார்கள். பேராசிரியர்​களாக நியமிக்கப்படுகிறவர்களுக்குத் தனியான பயிற்சி முறையும், தேர்வும் நடத்தி இருக்கின்றனர்.
நாலந்தாவினுள் 300 அறைகளும், ஏழு தனி வளாகங்களும் இருந்து உள்ளன.பல்கலைக்கழகத்தை நடத்த மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

அருகில் உள்ள 20 கிராமங்களில் இருந்து, வசூலிக்கப்பட்ட வரியில்தான் பல்கலைக்கழகம் இயங்கியது. கல்வி வளாகத்துக்குள் பெரிய நூலகமும் இருந்துள்ளது. கி.பி. 1,037-ல் நடந்த படையெடுப்பில் நாலந்தா
பல்கலைக்கழகம் எரிக்கப்பட்டது.காஞ்சிபுரத்திலும் நாகப்பட்டினத்திலும் இதுபோல பெரிய பௌத்தப் பல்கலைக்கழகங்கள் இருந்திருக்கின்றன. அவற்றைப்பற்றி யுவான்சுவாங் தனது குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.

இதே வேளையில், இங்கிலாந்தின் கல்வி வரலாற்றை எடுத்துப்
பார்த்தால், 16-ம் நூற்றாண்டு வரை அங்கு கல்விக்கு அதிக
முக்கியத்துவம் தரவே இல்லை. ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் 11-ம் நூற்றாண்டில் துவங்கப்​பட்ட போதும்,
அவை பெரிய கல்வி நிலையமாக வளர்ச்சி பெறவில்லை.

1546-ல் ஆக்ஸ்ஃபோர்டில் வேலை செய்தது ஐந்தே பேராசிரியர்கள்
தான். அவர்களுக்குத் துணையாக சில பயிற்சி ஆசிரியர்கள்
இருந்திருக்கின்றனர். 1805-ல்தான் புதிய பாடப் பிரிவுகளாக
மருத்துவம் உயர்விஞ்ஞானம் அறிமுக​மாகிறது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் வளர்ச்​சிக்கு முக்கியக் காரணம் தனிநபர்கள்
அளித்த கொடைகள் மற்றும் தர்ம நிறுவனங்கள் தந்த நிலம் மற்றும்
பொருளாதார உதவிகளே..!இங்கிலாந்தில் 1780-களில்
ஞாயிற்றுக்கிழமை வகுப்புகள் என்ற புதிய நடைமுறை துவங்குகிறது.

1802-க்கு பிறகுதான், ஆரம்பக் கல்வி மீது தனிக் கவனம்
செலுத்தப்படுகிறது. ஆனாலும், கணிதம், புவியியல் மற்றும் இலக்கியம்
தவிர வேறு துறைகளில் கல்வியில் அக்கறை காட்டப்படவில்லை.
ஓர் ஆங்கிலப் பள்ளியில் பிரதானமாக லத்தீனும் கணிதமும்தான் கற்றுக்கொடுக்கப்பட்டன. அதுவும் 20-க்கும் குறைவான மாணவர்களே படித்தார்கள்.

1812-ல் இந்தியாவில் பணியாற்றிய கிறிஸ்தவ மெஷினரியைச் சேர்ந்த
ஹாவல், இங்கிலாந்து திரும்பி தனது சொந்தக் கிராமத்தில், இந்தியாவில் உள்ளது போல ஏழை எளியவர்களுக்கும் கல்வி தரப்பட வேண்டும்
என்று பிரசாரம் செய்தபோது, பிரபுக்களின் பிள்ளைகளுக்கு
அளிக்கப்படும் கல்வி எப்படி, ஏழைகளுக்கு அளிக்க முடியும் என்று,
மதச் சபையே அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது.

எல்லோருக்குமான கல்வி என்பது இங்கிலாந்துக்கு முன்பே இந்தியாவில் நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதே வரலாற்று உண்மை.

ஆனால், இந்தியாவில் நிலவிய சாதியக் கட்டுப்பாடு, கல்வி
கற்றுத்தருவதில் சூத்திரர்களை ஒதுக்கி வைத்தது, பெண் கல்வியை முற்றிலுமாக முடக்கியது என்பதையும் மறுக்க முடியாதுதான்.
அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற குரல் நியாயமானது. எந்தக் கல்வி என்பதில் தான் பிரச்சனையே.மன்னர் ஆவதற்கும் மந்திரி ஆவதற்கும் கல்வித் தகுதி தேவை இல்லை. ஆனால், சாதாரண மனிதன் பொருளாதார ரீதியாக வசதி இல்லாமல் போகும்போது கல்வி
மட்டுமே தன்னை மேம்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்கிறான்.
கல்வியை நாடிப் போகிறான். அதுதான் இந்தியக் கல்வியின்
ஆதாரப் புள்ளி.

ஆங்கிலக் கல்வி உருவாக்குவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு
முன்பாகவே, இந்தியாவில் வகுப்பறை, பாடப் பிரிவு, பாட நேரம்,
பயிற்றுவிக்கும் சிறப்பு ஆசிரியர்கள், தங்கிப் படிக்கும் முறை என
எல்லாமே அறிமுகமாகி விட்டது.

கூடுதலாக, இயற்கையோடு இணைந்து கல்வி கற்க வேண்டும்
என்பதற்காக, மலையின் மீதோ, காட்டின் அமைதியான பகுதியிலோ
சில கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டன. கல்வியோடு ஒழுக்கமும், வாழ்க்கைப் பாடங்களும் இணைந்து போதிக்கப்பட்டன.
ஆசிரியர் – மாணவர் உறவு என்பது, தந்தை – மகன் உறவைப் போல நெருக்கமானதாகவே இருந்து இருக்கிறது.

1,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, மதுரையைச் சுற்றி இருக்கும்
எட்டு மலைகளிலும் சமணர்கள் குகைப் பள்ளிகளை நடத்தி,
மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவித்தனர். பள்ளி என்ற சொல்
சமணம் தந்ததுதான். மலைக் குகையின் உள்ளே கல்லால் ஆன
படுகைகளை அமைத்து, அங்கேயே பாடம் படித்து, சமைத்துச்
சாப்பிட்டு அந்த இடத்திலேயே உறங்கினர். தங்கிப் படிக்கும் பள்ளி
என்ற முறை அவர்கள் உருவாக்கியதே.

அதனால்தான் இன்றும் சமையல் அறையை மடப்பள்ளி என்றும்,
படுக்கை அறையை பள்ளிஅறை என்றும் சொல்கிறோம். அவை,
ஒரு காலத்தில் சமணப் பள்ளியின் பகுதியாக இருந்ததன்
நினைவுதான் இதற்கான காரணம்.

இப்படியான இந்தியாவின் அசலான கல்வி முறைகளை ஒழித்து,
அதன் மீது உருவாக்கப்​பட்டதுதான் இன்று நாம் பயிலும் ஆங்கிலக்
கல்வி முறை. சிறைச்சாலை போன்ற வடிவத்திலே வகுப்பறையை ஆங்கிலேயர்தான் வடிவமைத்​தனர். படிக்காத மாணவனை
பிரம்பால் அடிக்க வேண்டும் என்பதும், ஐரோப்பாவில் இருந்து
நமக்கு அறிமுகமானதுதான்.மாணவனின் எழுத்துத் திறனை
மட்டும் வைத்து பரீட்சை வைப்பதைவிடவும், அவனது பேச்சு, எழுத்து, தனித்திறன் ஆகிய மூன்று தளங்களில் பரீட்சை நடத்தி அவனது
அறிவைச் சோதனை செய்தது இந்தியக் கல்வி முறை.

1931-ம் ஆண்டு வட்ட மேஜை மகாநாட்டில், ”இந்தியாவின்
ஆயிரமாண்டு கால இந்தியக் கல்வி முறை ஒழிக்கப்பட்டு,
புதிய கல்வி புகுத்தப்பட்டதால், முன்பைவிடவும் அதிகம் படிப்பறிவு இல்லாதவர்கள் உருவாகிறார்கள்” என்று ஆதங்கப்பட்டுப்
பேசினார் காந்தி. அதற்குப் பலத்த கண்டனம் எழுந்தது.
ஆனால், அவரது ஆதங்கம் நியாயமானது என்பதை இன்றைய
கல்விக் கொள்ளைகள் சுட்டிக்காட்டுகின்றன.

மெக்காலே கல்வி முறை அறிமுகமாவதற்கு முன், பாடசாலை,
மதரஸா, குருகுலம் என்ற மூன்று வகையாக அடிப்படைக் கல்வி
அமைப்புகள் இந்தியாவில் நடைமுறையில் இருந்தன. இந்தியாவில்
சாதியக் கட்டுப்பாடு காரணமாக அடித்தட்டு மக்களுக்குக் கல்வி
கிடைக்காமல் போனதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்
கொண்ட வெள்ளை அரசு, உயர் வகுப்பினரோடு சமமாக வேண்டும்
என்றால்… அதற்கு ஆங்கிலக் கல்விதான் தேவை என்ற வாதத்தை முன்வைத்தது.

அதை அன்றைய அடித்தட்டு சமூகமும் உண்மையென நம்பி
ஏற்றுக்கொண்டது. ஆனால், பேயிடம் தப்பி பூதத்திடம்
மாட்டிக்​கொண்ட கதை போல, ஆங்கிலக் கல்வி அறிமுக​மாகியதால்
ஏற்பட்ட வளர்ச்சி ஒரு புறமும், நவீனத் தீண்டாமையாக விவசாயிகள்
மற்றும் உழைப்பாளிகளைத் தீண்டத்தகாதவர்களை போல ஆங்கிலம் படித்தவர்கள் நடத்தும் முறை மறு பக்கமும் உருவானது.

ஆங்கிலக் கல்வியால் உருவான நன்மைகளை நாம் மறுக்க முடியாது என்றபோதும், அது உருவாக்கிய ஆங்கில மோகம் நம்மை ஆட்டி
வைக்கிறது. தமிழில் கல்லூரிப் படிப்பை படித்தவர்கள்கூட தரக்குறைவானவர்களாக நடத்தப்படுவதும், ஆங்கிலம் பேசத்
தெரியாத காரணத்தால் குற்றவுணர்ச்சி கொள்வதும், எளிய விண்ணப்பங்கள்கூட ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்படும் நிலை உருவானதும் ஆங்கிலம் மீதான அதீத மயக்கமின்றி வேறென்ன!

அசோகர் வாழ்ந்தார், அக்பர் மொத்த இந்தியாவை அரசாட்சி
செய்தார், ராஜேந்திர சோழன் சோழ சாம்ராஜ்ஜியத்தை
உருவாக்கினான் என்றெல்லாம் வரலாற்றில் வாசிக்கிறோம்.

அவர்கள் எந்த மொழியில் பேசினார்கள்? தாய்மொழி இல்லாமல்
பிற மொழியில் பேசியா ஆட்சி செய்தார்கள்? அந்த உண்மையை
ஏன் வரலாற்றில் இருந்து நாம் கற்க மறந்தோம்….?

எல்லா மொழிகளையும் போல ஆங்கிலமும் பயன்பாட்டுக்கான
ஒரு மொழியே. தேவைப்படுகிறவர்கள் அதைக் கற்றுக்கொள்ளட்டும். சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளட்டும். வாழ்வை விருத்தி செய்துகொள்ளட்டும். ஆனால், ஒரு மொழி தனது அதிகாரத்தால்
இன்னொரு மொழியை அழித்து ஒழிப்பதை மக்கள் மௌனமாக பார்த்துக்கொண்டு இருப்பதுதான் வேதனை தருவதாக இருக்கிறது.

(நன்றி – ஆசிரியர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் …..
அவர்களின் ஒரு கட்டுரையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது ….)

.
………………………………………………………………………………………………………………..……..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நாளந்தாவும், வராஹமிஹிரரும் ….

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //நிலவிய சாதியக் கட்டுப்பாடு, கல்வி கற்றுத்தருவதில் சூத்திரர்களை ஒதுக்கி வைத்தது, பெண் கல்வியை முற்றிலுமாக முடக்கியது// – கல்வி கற்பதில் ‘சாதிப் பாகுபாடு’ இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. இங்கு ‘சூத்திரர்கள்’ என்று சொல்லப்படுபவர்கள், நில வேலை, சுத்தம் சம்பந்தப்பட்ட வேலைகள் மற்றும் எடுபிடி வேலைகள் செய்துவந்த பட்டியல் இனத்தவர்களைக் குறிப்பிடுகிறது என்றே நான் நினைக்கிறேன். அதில் பெரும்பான்மை சாதிகளுக்கு ஒரு personal agenda இருந்தது. அவர்களும் கல்வி அறிவு பெற ஆரம்பித்தால் உடலுழைப்பு வேலைக்கு தங்களுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் என்ற selfish approachதான் அதன் காரணம். இதுபோலவே, பெண்களுக்கு பொதுவாக கல்வி மறுக்கப்பட்டதன் காரணம், வீட்டு வேலைகள் எல்லாம் பிறகு யார் செய்வார்கள், தங்கள் உணவு, உணவுப் பொருட்கள் தயார் செய்வது-நெல் புழுக்குவது, அரிசி அரைப்பது, மற்ற ingredients ready செய்வது, குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது போன்ற வீடு சம்பந்தமான வேலைகளுக்கு ஆண்கள் முழுவதுமாக பெண்களையே நம்பியிருந்ததால், அவர்களுக்கு பிற்காலத்தில் கல்வி அறிவு மறுக்கப்பட்டது (அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்பது போல). இது முழுவதுமே ஆண்களின் மற்றும் நால் வர்ணத்தின் selfish agenda.

    //ஆங்கிலம் பேசத் தெரியாத காரணத்தால் குற்றவுணர்ச்சி கொள்வதும்// – இந்தக் குற்றவுணர்ச்சிக்கு மாணவர்கள்தாம் காரணம். சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த சில ஆசிரியர்கள்-பாலிடெக்னிக், கல்லூரி, அவர்களது ஆரம்ப காலக் கல்வி கற்றுத்தரும் பிரச்சனைகளைப் பற்றிச் சொன்னபோது, மாணவர்கள், பிரின்சிபாலிடம் சென்று, ஆங்கிலத்தில் Physics, Chemistry, Maths போன்றவற்றை நடத்துவதால் ஒன்றும் புரியவில்லை என்று கம்ப்ளெயிண்ட் செய்து, பிறகு அவற்றைத் தமிழ் உதாரணங்களோடு விளக்கவேண்டியதாகிவிட்டது (using colloquial language) என்று சொன்னார். அந்த அந்தப் படிப்பு படிக்கவேண்டும் என்றால் (உயர் படிப்பு), அதைவைத்து பெரும் வேலை வாய்ப்பு தேடவேண்டும் என்றால் அதற்குரிய மொழி அவசியம். அதே சமயம், புரிந்துகொள்ள தாய்மொழி உபயோகம் (அதாவது நம் சிந்தனைக்கு எந்த மொழி சுலபமோ அது. வேலையின் ஆரம்பத்தில் அல்லது அதற்கு முன்பு, தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் பேசினேன். பிறகு ஆங்கிலத்தில் இயல்பாகப் பேச முடிந்தது…பிறகு பழக்கத்தில் சிந்தனையும் ஆங்கிலத்தில் செல்வதை உணர முடிந்தது. ie natural language will become English). இதை எழுதும்போது கொரியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் தாய் மொழியில்தான் professional courses நடத்துகின்றன என்பதையும், அதில் அவர்கள் மிகப் பெரும் திறமை காட்டுகிறார்கள் என்பதையும் கண்டிருக்கிறேன். (Hardware, Network etc. கொரியர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள் பெரும் திறமைசாலிகள், நம்மைவிடவும்)

    //ஒரு மொழி தனது அதிகாரத்தால் இன்னொரு மொழியை அழித்து ஒழிப்பதை// – கட்டுரை ஆங்கிலத்தைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன். மக்களின் ஆதரவைப் பெறாமல் எதுவும் வெற்றிபெறாது. மக்கள் இதனை விரும்புகிறார்கள். திரைப்படப் பாடல்கள், மக்களின் பேச்சு வழக்கு, உணவுப் பழக்கம், உடை என்று எல்லாமே மேற்கத்தையர் பாணியையே கொண்டிருக்கிறது.

    இந்தப் பதிவைப் படிப்பவர்கள் மற்றும் கட்டுரையாளர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளலாம், எத்தனைபேர் தமிழில் கையெழுத்திடுகிறோம் என்று (நான் தமிழ் கையெழுத்துதான்…எப்போதும்)

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      பெண்கள் கல்வியைப் பற்றி எழுதும்போது, சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது நினைவுக்கு வந்தது (எது என்றெல்லாம் சரியாகத் தெரியாது). அதாவது கணவன் செய்யும் புண்ணியங்களில் பாதிப் பலன் மனைவியைச் சேரும் என்றும், மனைவி செய்யும் புண்ணியங்கள் அவளுக்கு மாத்திரமே பலன் என்றும், பாவங்கள், செய்பவருக்குத்தான் என்றும் அந்த சாஸ்திர வாக்கியம் சொல்லும். இதுவுமே practical approach என்றும் நான் நினைப்பேன். (I am writing this only for debate or discussion and am not biased). கணவன், சாஸ்திரங்கள் கற்றுத் தேர்ந்து அதனால் சமூகத்திற்குப் பங்களிக்கும்போது, அவன் நிம்மதியாக அதனைச் செய்வதன் காரணம், வீட்டில் மனைவி இருப்பதுதான், அவள் அவனைப் போஷிப்பதுதான், மற்ற வீட்டுக் காரியங்களை அவள் செய்வதுதான்.

      இன்னொன்று…. பலரும் கல்வி கற்று பெரும் வேலைக்குச் சென்றுவிடும்போது, அதிலும் தங்கள் நிலத்தைவிட்டுச் சென்றுவிடும்போது, அங்கு மிஞ்சிப்போகும் மக்கள்தாம் நிலத்திற்குரிய வேலைகளைச் செய்யவேண்டியிருக்கிறது (விவசாயம், சுத்தம்/சுகாதாரம், கட்டுமானம், வளர்ச்சி, வசதி என்று அனைத்தையும்) அதற்கான ஆட்கள் பற்றாக்குறையோ இல்லை அவர்களுக்கான சம்பளத்தைக் கொடுக்க முடியாத நிலை வரும்போது, குறைந்த வேலைக்கு பிற நிலங்களிலிருந்து வருபவர்களைச் சார்ந்திருக்கவேண்டியிருக்கிறது. கால மாற்றத்தால் எது சிறப்பானது, எதில் குறைந்த அளவு பிரச்சனை இருந்தது/இருக்கிறது என்பதை நாமே analyze செய்துகொள்ள வேண்டியதுதான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.