..

……………………………………..
விகடன் தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி கீழே –
` சாதிகள் உள்ளதடி பாப்பா…
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் வேணும்! ‘ –
தலையங்கம் – ஆசிரியர்
`நான் உயர்ந்தவன்’ என்று கூறி, இன்னொருவனைத் தாழ்த்திப் பேச –
உழைப்பால் உயர்ந்து காட்டத் தேவையில்லை;
திறமையால் உயர்ந்து காட்டத் தேவையில்லை;
குணத்தால் உயர்ந்து காட்டத் தேவையில்லை;
சாதியின் அசைக்க முடியாத இருப்பு, சமூகத்தில் அவ்வப்போது
பலவிதங்களில் வெளிப்பட்டு திடுக்கிடச் செய்யும். அந்த வகையில்
சமீபத்திய அதிர்ச்சி, கரூரிலிருந்து…
அரவக்குறிச்சி ஒன்றியம், வேலன் செட்டியூர் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியில் ‘பட்டியலின பெண் சமைத்த சாப்பாட்டை
எங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள்’ என்று பிறசாதியைச்
சேர்ந்த பெற்றோர் பிரச்னை செய்ய, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்
நேரில் சென்று விசாரித்தார். முடியவே முடியாது. பிள்ளைகளுக்கு டி.சி-யை வேண்டுமென்றால் வாங்கிக்கொள்கிறோம்’ என்று பெற்றோர் ஒருவர் அழுத்தமாகக் கூற,வன்கொடுமை வழக்கு
பதியப்படும்’ என்று எச்சரித்த பின்னர், பிரச்னை அப்போதைக்கு
முடிவுக்கு வந்துள்ளது.
`எனக்கு மேல் யாரும் இருக்கட்டும்.
ஆனால், நான் அடக்குமுறை செலுத்த எனக்குக் கீழ் ஒருவன் வேண்டும்’
- என்கிற விசித்திரமான கொடூர மனம்தான்,
முற்பட்ட, பிற்பட்ட, பட்டியலின என
அனைத்துத் தரப்பிலும் `மேலிருந்து கீழிறங்கும்’ உட்பிரிவுகளை
உருவாக்கி வைத்திருக்கிறது.
சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடச் சம்பவத்தில், `எங்கள் குழந்தைக்கு
அப்படிப்பட்ட படிப்பே வேண்டாம்… டி.சி வாங்கிக்கொள்கிறோம்’ என்று
சொல்லும் அளவுக்கு அந்த சாதிப் பெருமையால் அப்பெற்றோருக்கு
அப்படி என்னதான் கிடைக்கிறது?
`நான் உயர்ந்தவன்’ என்று கூறி, இன்னொருவனைத் தாழ்த்திப் பேச
உழைப்பால் உயர்ந்து காட்டத் தேவையில்லை; திறமையால் உயர்ந்து
காட்டத் தேவையில்லை; குணத்தால் உயர்ந்து காட்டத் தேவையில்லை;
‘இன்ன சாதியில் பிறந்திருக்கிறேன், அதனாலேயே நான் மேலானவன்,
நீ எனக்குக் கீழானவன்’ என மிகச் சுலபமாகக் கிடைத்துவிடும்
ஆதிக்க உரிமை கிடைக்கிறதே…?!
இது… அரசியலையே நிர்ணயிக்கும் அளவுக்கு இங்கே `சக்தி’ பெற்று
விளங்குகிறது. முன்பைவிட இப்போது அதிக உரம்போட்டு
வளர்தெடுக்கப்படுகிறது. இந்த வாக்கரசியலில் எந்தக் கட்சிக்கும்
வித்தியாசம் அதிகமில்லை. சதவிகிதத்தில்தான் மாறுபாடு.
பல நூற்றாண்டு முயற்சிக்குப் பிறகும், பற்பல தலைவர்கள்
வாழ்க்கையையே அர்ப்பணித்த பின்னரும் அழிக்க முடியவில்லை
என்றால்…
`சாதிகள் உள்ளதடி பாப்பா… குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் வேணும்!’
என்றுதான் பாடத் தோன்றுகிறது….!
(நன்றி – விகடன் தலையங்கம் ….)
………………………….
சனாதன தர்மத்தை ஒழிக்கவே நான்
” அவதாரம் ” எடுத்திருக்கிறேன் என்று கொசுவர்த்திச் சுருள்
கொண்டு மிரட்டும் ” வாரிசுகள்” முதலில்,
தங்கள் ஆட்சியில் –
தங்களின் நேரடிப் பார்வையில்-
நிகழும் மேற்படி ஜாதி உயர்வு சொல்லலை
தமிழ் நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிப்பார்களா…..???
50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த
இவர்கள் இதுவரை ஜாதிகளை ஒழிக்க முற்படாதது ஏன் ….?
ஓட்டு அரசியலா …? அல்லது இவர்களாலேயே
ஜாதி பெருமையை விட முடியவில்லையா ….?
முதலில் தமிழ்நாட்டிலிருந்து ஜாதிவேறுபாடுகளை அகற்றி விட்டு,
நெஞ்சைத் தூக்கி நிமிர்ந்து சொல்லட்டும் –
” ஜாதிகளை ஒழித்து விட்டோம் ” என்று ….
- பிறகு இங்கே – ஒன்றுமே இருக்காது ஒழிக்க ….
செய்வார்களா ….???
துணிவு உண்டா…..???
ஜாதி ஓட்டுகள், தேர்தல் பயமுருத்துகிறதா….?
பின் ஏன் வெட்டிப்பேச்சு …..
.
https://www.vikatan.com/crime/caste/editorial-page-vikatan-plus-september-17
…………………………………………………..



..
https://www.newindianexpress.com/nation
NEW DELHI: AAP leader Raghav Chadha on Tuesday condemned DMK leader Udayanidhi Stalin’s remark on the Sanatana Dharma, and said
………………………..
statements made by some
“small” leader
from any party
………………………..
cannot be considered the official stand of the INDIA bloc.
..
என்ன கொடுமை சரவண!
பேசாமல் அனைத்து பள்ளிகளிலும் இவர்கள் தான் சமைப்பார்கள்…இப்போ என்ன செய்வீர்கள் என்று கேட்டால் என்ன.
அதற்கு ஜெ மறுபிறவி எடுத்து வந்தால்தான் உண்டு. இங்கேயே எழுதியிருக்கிறேன். தனபால், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் ஆர்கனைஸ் செய்த மதிய/மாலை உணவுக்கு யாருமே வராததால் அனைத்தும் வீணாயின. ஜெ. அவரிடம், வாக்கு சேகரிப்பவர்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு நீங்கள் உணவு கொடுப்பதில்லை என்று கம்ப்ளெயிண்ட் வருகிறதே என்று கேட்டபோது, தனபால் அவர்கள் உண்மையைச் சொல்ல, அவரை உணவுத்துறைக்கு அமைச்சர் ஆக்கினார், பிறகு சபாநாயகராகவும் ஆக்கினார். அந்த moral toughness இப்போ உள்ள அரசியல்வாதிகள் யாருக்குமே கிடையாது (அண்ணாமலை exception என்று எனக்குத் தோன்றுகிறது. உதயநிதி தலைக்கு 10 கோடி வைத்தபோது, அண்ணாமலை அப்படி சொன்னது மிகப் பெரும் தவறு என்று சொன்னார். இன்றுகூட, ஏ.ஆர் ரகுமான் நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி மற்றும் scamக்கு, ஏ.ஆ.ரகுமானைக் குறை சொல்லக்கூடாது, அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்தான் பொறுப்பு என்று சொல்லியிருக்கிறார்)
சாதி என்பது பெரும்பாலான அரசியல்வாதிகளால் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகளால் சாதியை ஒழிக்க முடியாது.
மதமாற்றும் கும்பல்கள், ஒவ்வொரு ஜாதியிலும் கிறித்துவப் பிரிவுகளை உண்டாக்கிவிட்டிருக்கின்றன. நாடார் கிறிஸ்டியன், கொங்கு வேளாள கிறிஸ்டியன், தேவர் கிறிஸ்டியன் என்று. மணமகள்/மணமகன் தேவை விளம்பரங்களில்கூட, இந்து/கிறிஸ்டியன் ஓகே ஆனால் பிறகு ‘தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும்’ என்று விளம்பரம் வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத் தலைவரும், ‘தன் ஜாதி’ மக்கள் தன் பின்னால் இருக்கின்றனர் என்று பேசியே போட்டியிட சீட்டுகள் வாங்குகின்றனர். எந்த ஜாதியும் தனக்குக் கீழே உள்ள ஜாதியை அழுத்துகின்றனர். அரசியல்வாதிகள் பிராமணர்களை மாத்திரம் குறிவைத்துப் பேசுவதால், மற்ற ஜாதிகள் அதனைப் பற்றிக் கவலைகொள்வதில்லை.
//பிள்ளைகளுக்கு டி.சி-யை வேண்டுமென்றால் வாங்கிக்கொள்கிறோம்’ // – ஆஹா… உடனே டி.சியைக் கொடுத்தனுப்பி விட வேண்டியதுதானே.
ஒருவன் படிப்பால் உயர்கிறான். அவனுடைய குணத்தால் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் படுகிறான். நான் ஒரு EB in-charge (எனக்கு அவருடைய பதவி நினைவில் இல்லை, ஆனால் அவர்தான் ஒரு பகுதிக்கு responsible) ஐ சந்தித்திருக்கிறேன். அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். லஞ்சம் வாங்குபவர். அதற்கு அவர் சொல்லும் காரணம், என் முன்னோர்களை இந்த மக்கள் எவ்வளவு அதிகாரத் திமிரில் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர்? அவர்கள் சார்பில் நான் லஞ்சம் வாங்குகிறேன் என்றார். (அட இது என்ன புது லாஜிக் என்று யோசித்தேன். இவர்கள் கிறித்துவராக மாறிக்கொண்டு தங்களுக்குப் பின்னால் வலு சேர்த்துக்கொள்கிறார்கள்)