அண்ணாமலைக்கு – இவர்கள் போதும் என்கிறார் எடப்பாடியார்…!!!

……………………………………………….
ஜூன் 27-ந்தேதி, பொன்னையன் பேசியது இது –

………………………………………………..

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற
பெயரில் நடைப்பயணத்தை வரும் 28-ம் தேதி ராமநாதபுரத்தில் தொடங்கவிருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இந்தப் பயணத்தைத் தொடங்கிவைக்கிறார்.. இந்தப் பயணத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஆனால் – எடப்பாடியார், அண்ணாமலை தனது சுயலாபத்துக்காக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில்
அ.தி.மு.க-வுக்கென தனி மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. ஆனால்,
தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு அ.தி.மு.க-வின் பலம் இன்னும் புரியவில்லை….

எனவே -தான், நடைப்பயண தொடக்க விழாவில்
பங்கேற்க தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

மாறாக, அ.தி.மு.க சார்பில் தமிழ்மகன் உசேன்,
கே.பி.முனுசாமி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் போன்ற யாராவது பங்கேற்கக்கூடும். இதில் மாற்றம் இருந்தால் – வேலுமணி, தங்கமணி ஆகியோர் பங்கேற்க வாய்ப்பிருக்கிறது

அண்ணாமலை-க்கு இது போதும் என்று எடப்பாடியார் அண்மையில்
சேலம் நெடுஞ்சாலை நகரில் சமீபத்தில் கட்சி சீனியர்களுடன்
நடந்த ஆலோசனையில் கூறினாராம் எடப்பாடியார்….!!!!

நல்லவேளை …. பொன்னையனை அனுப்பலாம் என்று தீர்மானிகாமல்
இருந்தார்களே….!!!

பாஜக தலைமை, எடப்பாடியாரை,
தங்களுடன் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதற்கான
பாவத்தை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை …………

  • மே, 24 வரை அனுபவித்து தான் தீர்க்க வேண்டும் – வேறு வழி இல்லை …!!!

.

…………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அண்ணாமலைக்கு – இவர்கள் போதும் என்கிறார் எடப்பாடியார்…!!!

  1. ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

    மீடியாக்களில் இப்பொழுதெல்லாம் admk என்று ஒரு கட்சி இருக்கிறது என்பதற்கு அடையாளமே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள்.அதை அந்த கட்சியை சேர்ந்த யாரும் சிறிதளவும் கண்டு கொள்வாதாகவேயில்லை..
    எங்கெங்கு காணினும் அண்ணாமலை தான் …உட்கார்ந்தால் செய்தி, நடந்தால் செய்தி…
    பிஜேபி சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருப்பதை , சிறிதும் உணராமலே, இன்னும் dmk க்கு பயந்து கொண்டே எதிராக ஏதும் பேசும் திராணியில்லாமல் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் …
    ஏதோ mgr ,ஜெயலலிதா என்ற பெயர்கள் இரண்டு தேர்தல்கள் வரை கைகொடுக்கலாம்…பிறகு…
    நல்லவேளை அண்ணாமலை போன்ற ஒரு மனிதர் மட்டும் இங்கு தகுந்த சமயத்தில் அவதரிக்காமல் இருந்திருந்தால், எதிர்ப்பார் யாருமின்றி ஒரு காட்டாட்சி இங்கு நடந்து கொண்டிருக்கும்…
    ஹிந்து வழிபாட்டு தளங்கள் எங்கும் பெரியார் சிலைகளும், தலைவர் குடும்பத்து பெயருக்கு எல்லா கோவில் தெருக்களும் மாற்றபட்டிருக்கும். மதமாற்றம் தெருவெங்கும் அமோகமாக நடந்துகொண்டிருக்கும்..
    எங்கெங்கு காணினும் கமிசன் , லஞ்சம், லஞ்சம்….டாஸ்மாக், குடி…

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அதிமுகவின் உண்மையான பலம் (எடப்பாடி தலைமையில்) தெரிந்தாலொழிய இந்தப் பிரச்சனை தீராது.

    பாஜக சார்பு உள்ளவர்களுக்கு, அண்ணாமலை பாஜகவை வளர்த்ததன் பயனை அதிமுக அனுபவிக்கும் என்று நினைப்பார்கள். அனுபவித்துவிட்டு, பாஜகவுடன் சேர்ந்ததால்தான் குறைந்த வாக்கு சதவிகிதம் என்றும் சொல்வார்கள். அதிமுக சார்பு உள்ளவர்களுக்கு, பாஜக, காங்கிரஸைப்போன்று பலமற்றது என்று நினைப்பாங்க.

    2024க்குப் பிறகு நிச்சயமாக பாஜக, அதிமுக கூட்டணியில் இருக்க வாய்ப்பே இல்லை. எடப்பாடிக்காக அண்ணாமலை பிரச்சாரம் செய்யமாட்டார், பாஜகவும் செய்யாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.