………………………………………………………

………………………………………………………
மிக சுவாரஸ்யமாகப் பேசுகிறார் சங்கர்…. உண்மை தான் பேசுகிறார் என்பதை பார்ப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
கொஞ்சம் நீளமான வீடியோ – ஆனால் நிச்சயம் சுவாரஸ்யம், தெளிவு, உண்மை…. !!! நேரம் இல்லாதவர்கள் முதல் பாதியையாவது அவசியம் பாருங்கள்.
எந்த கட்சியிலும் சேராமல் இருப்பது தான் சவுக்கு சங்கருக்கு பலம்….!!!
……………………………………………………..



எனக்கு ஒரே ஒரு சந்தேகம் கா.மை. சார்.
சவுக்கு சங்கர், அண்ணாமலை மற்றும் ஒரு சில யூடியூபர், to some extent தினமலர் இல்லையென்றால், தமிழகத்தில் எந்த உண்மையையும் வெளியில் வந்திருக்காது. அரசைப்பற்றிய எந்தக் குறைகளும், ஊழல்களும் வெளியிலேயே வந்திருக்காது. யூடியூப், சமூக வலைத்தளம் இல்லையென்றால் எந்த உண்மையுமே மக்களுக்குத் தெரிந்திருக்காது இல்லையா? மற்ற ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் எல்லோருமே உண்மையை மறைப்பதில் அவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள்.
ஆளுநருக்கான கடிதத்தில், செ.பா. கைது செய்யப்பட்டுள்ளதால், இலாகா மாற்றம் என்று திமுக அரசு எழுத முடியாது. அப்படி எழுதினால், அவரை இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்ந்துவைத்துக்கொள்ள முடியாது. அதனால்தான் டுபாகூர் காரணம்
மற்றபடி, எதுக்காக சவுக்கு சங்கரை திமுக விட்டுவைத்திருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை (அதாவது விலைக்கு வாங்காமலோ இல்லை பொய்க்குற்றச்சாட்டில் உள்ளே தள்ளாமலோ. எத்தனை பாஜக அதிமுகவினரை மற்றும் அனுதாபிகளைப் பொய்க்குற்றச்சாட்டில் உள்ளே அனுப்பியிருக்கிறது திமுக). முன்னமே சவுக்கு சங்கர் சொல்லியிருந்தார், அரசு வேலையில் என்னை நீடிக்க வைத்தால், அரசியல் பேச்சுகள் எதற்கு என்று விட்டுச் சென்றுவிடுவேன் என்று. நேற்று சவுக்குக்கு 1 லட்சம் அபராதம் விதித்து ஏதோ ஒரு நீதிபதி தீர்ப்பு சொல்லியிருக்கிறார் . சவுக்கு சங்கரோ திமுகவின் ஊழல், தில்லுமுல்லு எல்லாவற்றையும் வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறார். அண்ணாமலை பேசமுடியாதவைகளையும் பேட்டியாக சவுக்கு சங்கர் ஓபனாகப் பேசிவிடுகிறார் (ஆதாரங்களையும் காண்பித்து).