……………………………………………………………………………………..

………………………………………………………………………………………..

பாவம் – அமெரிக்காவிலிருந்து பதறுகிறார் … திருவாளர் ராமசுப்ரமணியனுக்கு யாராவது விளக்கம் தந்து நிம்மதி கொடுங்களேன்…
………………………………………………………………………………………..
.
…………………………………………………………………………………………………………………………………………….



இராமசுப்ரமணியனுக்கு வீட்டுல வேறு வேலை கிடையாது. பசங்க அவங்க குடும்பம்லாம் வேலைக்குப் போய்விடுவதால் இவர் மாத்திரம் வீட்டில் தனியாக தொலைக்காட்சி துணையோடு பொழுதைப் போக்குவதால், கரகாட்டகாரன் பலமுறை பார்த்திருக்கிறார் போலிருக்கிறது. அதனால்தான் ‘அந்த செங்கோல்தான்யா இது’ என்று யாராவது அவரிடம் வந்து சொல்வார்களா என்று எதிர்பார்க்கிறார். இந்த மாதிரி எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடிக்கறவங்களை, அதிலும் மோடி அரசைக் குறை சொல்கிறவர்களைப் பேட்டி எடுக்கவே திமுக சேனல்ல அலைவாங்க. அப்படி திமுக சேனல்ல இப்போ பேட்டி எடுத்து வெளியிட்டிருக்காங்க. இராமசுப்ரமணியனுக்கும் ஒரு ஆறுதல். அன்றைய பொழுது கழிந்ததே
அரசியல்வாதிகளுக்கு சால்வை போடறாங்களே. ஒருத்தனுக்கு ஒருவன் சால்வை போடலாம். போகிற எல்லாரும் சால்வை போடுகிறார்களே, அதெல்லாம் எங்கன்னுகூட கேட்பார் போலிருக்கிறது. அதுபோல மரியாதை நிமித்தமாக மற்ற இரண்டு செங்கோல்கள் இருந்திருக்கும். அது பிரதமருக்கு வந்த பரிசுகளில் ஒன்றாக அந்தக் காப்பகத்திற்குச் சென்றிருக்கும். திருவாவடுதுறை ஆதீனம் கொடுத்த செங்கோல் நாடாளுமன்றத்தில் இருக்கும். (அவர்கள்தாம் முதல் செங்கோலைக் கொடுத்தவர்கள் என்பதால்).
.
புதியவன்,
// அதுபோல மரியாதை நிமித்தமாக மற்ற
இரண்டு செங்கோல்கள்
இருந்திருக்கும்.
அது பிரதமருக்கு வந்த பரிசுகளில் ஒன்றாக
அந்தக் காப்பகத்திற்குச்
சென்றிருக்கும்.
திருவாவடுதுறை ஆதீனம் கொடுத்த செங்கோல் நாடாளுமன்றத்தில்
இருக்கும். //
நீங்கள் ஏன் க்கும்…. க்கும் என்று கனைக்கிறீர்கள்.
இவ்வளவு கதை விட்டவர்கள், மெனக்கெட்டு,
டூப்ளிகேட் மவுண்ட் பேட்டன், நேரு எல்லாம் போட்டு
வீடியோ தயாரித்தவர்கள் –
இதைப்பற்றி ஏன் சொல்லவில்லை….?
இவ்வளவு ஆர்வம் கொண்ட உங்களாலே கூட
உண்மையான நிலவரத்தை கண்டுபிடித்து
சொல்ல முடியவில்லையே…. ஏன்…???
ராமசுப்ரமணியத்தை குறை கூறத்தெரிந்த உங்களுக்கு,
அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஏன் பதில் அளிக்க முடியவில்லை….????
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இரண்டு செங்கோல்கள் அளிக்கப்பட்டதாக நான் எங்குமே படிக்கவில்லை. இராமசுப்பு கூறுவதுபோல் நடந்திருந்தால் காரணம் இதுவாக இருந்திருக்கக்கூடும் என்று எழுதினேன். ஒருவேளை திருவாவடுதுறை ஆதீனம் செங்கோலின் முக்கியத்துவம் கருதி மற்றவை செய்தியாக வராமலிருக்கலாம். விஷயம் தெரிந்த இராமசுப்பிரமணியன் உடனே வழக்குத் தொடுப்பார் என நம்புகிறேன்.
நாடாளு மன்றம் திறப்பு விழா மிக விமரிசையாக நடந்தது. செங்கோல்கள் வழங்கப்பட்டன..
இது ஒரு சாதாரணமாக கடந்து செல்ல வேண்டிய நிகழ்ச்சி…
ஆனாலும், போயும் போயும், இதை வைத்து ஒரு மாதத்தை ஓட்டுவதற்கு, செய்தி channel கள் எப்படித்தான் மனம் வருகிறதோ …
ஒருவேளை,இதை வைத்தாவது , பிஜேபியை தோற்க்கடிக்கலாம் என்று கனவு காண்கிறார்களா ?
வீழ்த்துவதற்கு ,இவர்கள் கண்களில் ஊழல்களே தென்படவில்லையா ?
மோடி எவ்வளவு கோடி லஞ்சம் பெற்றார், எவ்வளவு கோடி, தனக்கும் , தனது மனைவிக்கும், சகோதரிக்கும், சகோதரரின் மனைவிக்கும் சேர்த்து வைத்து உள்ளார் என்று இன்னுமா கூற முடியவில்லை…
இந்த அழகில், இவர்கள் எவ்வாறுதான் 2024 தேர்தலை எதிர்கொள்ள போகிறார்கள் ?
பிஜேபியை ஏன் மாற்ற வேண்டும் என்று மக்களை எவ்வாறுதான் convince செய்ய போகிறார்கள் ?
2014 பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாகிவிடும்
2019 இல் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாகிவிடும்
2024 யிலும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாகிவிடும்
இந்த ஒரே பல்லவிதானா ?
இதில் ஒரு கிருத்துவ பாதிரியார், மோடி தோற்பதற்காக , கடந்த தேர்தலில் ,மிக பெரிய ஜெப கூட்டத்தை வேறு நடத்தினார் …
ஒருவேளை, இதெற்கெல்லாம் மக்கள் convince ஆகிவிடுவார்கள் , என்ற எதிர்பார்ப்பா ?
என்னே எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை ……
ஏன் தனி ஒரு மனிதனை எதிர்க்க இத்தனை எதிரிகள் …இத்தனை ஜெபங்கள் …
வீழ்த்தவே முடியாத வரலாற்று நாயகனாக இருப்பாரோ ?
சரித்திர பாடங்களில் மட்டுமே, படித்து , கேட்டிருக்கும் சரித்திர புருஷரோ ?
1995 ஆண்டுகளில் குமுதம் ஜோதிடம் என்று குமுதம் இதழ் சார்பாக ஒரு இதழ் வெளி வந்து கொண்டிருந்தது. அதன் ஆசிரியராக பொறுப்பேற்று , ஜோதிட கட்டுரைகளை எழுதி கொண்டிருந்தவர் ஜோதிட சிகாமணி திரு A.M ராஜகோபால் அய்யா அவர்கள் . அவர் தனது கட்டுரைகளில் ஜோதிட ரீதியாக, கூடிய சீக்கிரம் இந்தியாவை ஆள ஒரு வரலாற்று நாயகன் உதிப்பார் என்று அப்பொழுதே கணித்திருந்தார்.அதை தொடர்ந்து வற்புறுத்தியும் வந்தார். குமுதம் சேனல் பேட்டிகளிலும் அவர் அதை கூறியிருக்கிறார் .
என்னே கணிப்பு …
எதிரிகளின் சிம்ம சொப்பனம் என்பவன், இவன் தானோ …
இவன் நின்றாலும் செய்தி …என்ன நோக்கத்திற்காக நிற்கின்றான் ..
நடந்தாலும் செய்தி… என்ன செய்வதற்காக நடக்கின்றான் …
அமைதியாக இருந்தாலும் செய்தி.. என்ன செய்ய யோசித்து கொண்டிருக்கின்றான் ..
கண்டதில்லையே, இவன் போன்ற நாயகனை , சம காலத்தில்…
அற்புதம் நண்பரே இங்கு மோடி எதிர்ப்பு புராணம் தான் வாழ்க மோடி