இஸ்லாமிய நாட்டில், 84 % இந்துக்களை கொண்ட, அற்புதமான பாலித்தீவின் கண்கொள்ளா காட்சிகள்….

அழகிய தமிழில் வர்ணனை….
தீவை, ஒரு ரவுண்டு சுற்றிப் பார்த்தது போலவும் ஆயிற்று . –

பட்ஜெட் சுற்றுலா பயண விவரங்களை
தெரிந்து கொண்டது போலவும் ஆயிற்று….

……………

……………

.
………………………………………………………………………………………………………………….…………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to இஸ்லாமிய நாட்டில், 84 % இந்துக்களை கொண்ட, அற்புதமான பாலித்தீவின் கண்கொள்ளா காட்சிகள்….

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    பாலித்தீவு, (officeல வேலை பார்த்தபோது, கான்ஃபரன்ஸுக்காக) நான் சென்றிருக்கிறேன். அங்கு பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பும், எங்களை அழைத்திருந்த கம்பெனியால் கிடைத்தது.

    மிக நல்ல இடம். நம் சிதைந்த கலாச்சாரங்களையுடைய கோவில்கள், பிள்ளையார் சிலைகள் என்று இந்து மதத்தின் சிதைந்த வடிவத்தை எங்கும் காணமுடியும். அங்க உள்ளவங்க நம்மிடம் பேச முயற்சிக்கும்போது ராமாயணத்தை மாத்திரமே பெருமையுடன் பேசுவார்கள். அவர்களின் நடனமும் அந்த நளினத்தைக் கொண்டிருக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது புகைப்படங்களைப் பகிர்கிறேன். (அங்க நான் பார்த்தது, ஆனால் சட்னு புகைப்படம் எடுப்பதற்குள் கார் அந்த இடத்தைக் கடந்துசென்றுவிட்டது. புத்த சன்யாசிகள் பெரிய பாத்திரத்தை நீட்டி வீடுகளில் பிக்ஷை வாங்குவது)

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      கொடுத்து வைத்தவர் நீங்கள். நிறைய
      இடங்களை உங்களால் பார்க்க முடிந்திருக்கிறது.
      வாய்ப்புகள் தொடர வாழ்த்துகள்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        //கொடுத்து வைத்தவர் நீங்கள்.// – உண்மைதான். எங்கேயோ பிறந்து, எப்படியோ வளர்ந்து,…… 2003லிருந்து பல இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அது இறையருள்தான். சென்னைக்கு 87ல் வந்தபோது, பெண்களுடன் பேசவே ரொம்பத் தயங்குபவனாகவும், நெர்வஸ் உடையவனாகவும் இருந்தேன். காலம் எல்லாவற்றையும் மாற்றிற்று.

        வட இந்தியாவையோ (ஆன்மீகத் தலங்கள் தவிர) பாரதத்தின் வட பகுதியையோ நான் கண்டதில்லை. இன்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, கனடாவில் -28ல் இருந்த அவரது அனுபவத்தைச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு அந்த மாதிரிச் சூழலில் சில வாரங்கள் இருக்கணும், பனிப்பொழிவை, பனிமணலில் நடக்கும் அனுபவத்தைப் பெறணும் என்று சொன்னபோது, எவரெஸ்ட் பகுதியில் ட்ரெக்கிங் போனாலே அந்த அனுபவம் கிடைக்கும், அதற்குரிய உடல் தகுதி இருந்தால் என்று சொன்னார். விரைவில் charசார்தாம் பயணம் செல்லவேண்டும் என்று நினைத்திருக்கிறேன் (பத்ரி மாத்திரம்தான் சென்றிருக்கிறோம்).

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.