


ராஜஸ்தான் மாநிலத்தில்,
உதய்பூர் நகரிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில்,
நாதத்வாரா என்கிற இடத்தில், உலகிலேயே
பெரிய 369 அடி உயர, சிவன் சிலை நேற்று,
நிறுவப்பட்டிருக்கிறது.
20 கி.மீ. தூரத்திலிருந்து பார்த்தால் கூட இந்தச் சிலை தெரிகிறதாம். இந்த இடம் “விஸ்வாஸ் ஸ்வரூபம்” என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.
இதைப்பற்றிய சில விவரங்கள் –
தத் படம் சன்ஸ்தான் என்கிற நிறுவனம் நிர்மாணித்துள்ள
இந்த சிலையையும், பீடத்தையும் உருவாக்க 10 வருடங்கள்
ஆகியிருக்கிறது. இதன் கட்டுமானம் 2012-ஆம் ஆண்டில்
துவங்கி இருக்கிறது.
சிவன் தவக்கோலத்தில் இருக்கும் இந்த சிலையும், அந்த
மலையும் சேர்ந்து மொத்தம் 51 பிகா விஸ்தீரணம்….
விசேஷ வண்ண விளக்குகளால் ஒளிறும் இந்த இடம்,
இரவு நேரங்களிலும் ஜொலிக்கிறதாம்.
இந்த சிலையின் உள்ளே, 4 லிஃப்டுகளும்,
3 மாடிப்படிக்கட்டுகளும், வருகை தருபவர்களுக்கான,
மிகப்பெரிய பிரார்த்தனை அரங்கமும் உள்ளன.
கிட்டத்தட்ட 3000 டன் இரும்பு இதை உருவாக்க
பயன்படுத்தப்பட்டிருக்கிறது… துருப்பிடிக்காமல் இருக்க,
மேல்பகுதி துத்தநாகத்தால் போர்த்தப்பட்டிருக்கிறது.
250 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றையும் இது
தாங்கவல்லது என்று பரிசோதித்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் அடுத்த 250 வருடங்களுக்காவது
இது அப்படியே இருக்கும் என்று தெரிகிறது.
இந்த இடத்தை ஒரு மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக
உருவாக்க ராஜஸ்தான் டூரிஸம் பெரும் முயற்சிகளை
மேற்கொண்டு வருகிறது.



[…] […]