திமுக எம்.எல்.ஏ. + சிக்கிய லஞ்சப்பணம் 75 லட்சம் + பொறியாளர் மாரிமுத்துவின் பாதுகாப்பு … ?

……………………………..

இப்படி ஒரு செய்தி –

தமிழகம் முழுதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ஒரே நேரத்தில், அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தினர். திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், 75 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.

அப்போது உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:

” பிடிப்பட்ட தொகை, திருவாரூர் உட்கோட்டத்தில் உள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெறப்பட்டது.

அது, திருவாரூர் தி.மு.க., மாவட்ட செயலர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.,வுக்கு கொடுக்க வைத்திருந்த 5 சதவீத தொகை. பணத்தை வாங்க, மா.செ.,வின் மகன் பூண்டி கலைஅமுதன் வந்திருந்தார். அதற்குள் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், பணத்தை கைப்பற்றி விட்டனர். “

  • இவ்வாறு மாரிமுத்து கூறியதை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கிற்கான ஆவணமாக ஆக்கிஉள்ளனர்.

இந்த விவகாரம் அறிந்ததும், ‘மாரிமுத்துவிடம் பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கிழித்தெறிந்து, மீண்டும் புதிய ஒப்புதல் வாக்குமூலம் வாங்குங்கள்’ என, மேலிடத்தில் இருந்து விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் சென்று உள்ளது. இதையடுத்து, வாக்குமூலத்தை மாற்றும் முயற்சியில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் களம் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

(தினமலர் -21/10/2022 )

வாக்குமூலம் கொடுத்த பொறியாளர் மாரிமுத்துவின் கதி, பாதுகாப்பு என்னவாகும் …?
அவர் பத்திரமாக இவர்களிடமிருந்து தப்புவாரா …?
……………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.