அமெரிக்கா மட்டுமென்ன இப்படியேவா பிறந்துவிட்டது….??? …!!!!

1880-90 களில் – ஜஸ்ட் 120-130 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா
இருந்த நிலைமை, அமெரிக்க மக்களின் பொருளாதார நிலை – நம்மைவிட மகா மகா மோசமாக இருந்திருக்கிறது ….!!!


NGC வெளிச்சம் போட்டு காட்டி இருப்பதை கீழே காணலாம்….

இந்த இடுகையின் நோக்கம், அமெரிக்காவை மட்டம் தட்டுவதல்ல…..

முயன்றால், இன்றைய அமெரிக்காவை போலும், அதைவிட சிறப்பாகவும் கூட இந்தியாவாலும் முன்னேற முடியும் – என்பதை சுட்டிக்காட்டுவது தான்.

நமது மிகப்பெரிய சாபக்கேடு – நாம் உரிய வளர்ச்சி பெறாததன் முக்கிய காரணம் நமது சுயநலவாத, கொள்ளைக்கார, சுரண்டல் அரசியல்வாதிகள் தான்…

முன்னேற வேண்டுமானால் இந்தியா ஒரு சிறந்த அரசியல் தலைமையைப்பெற வேண்டும்…

சிங்கப்பூரின் லீ குவான் யூ – போன்ற ஒரு தலைவர் இங்கும் உருவானால் – உலகின் மிகச்சிறந்த நாடுகளில் ஒன்றாக இந்தியாவால் மாற முடியும்…

நடக்குமா…..? கிடைப்பாரா….?

பீப்பாய்களின் மீது படுக்கை …!!!
நியூயார்க் நிலையே இப்படி …!!!
தெருக்குழந்தைகள்….!!!
1888-ல் குழந்தைத் தொழிலாளர் ….

……………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to அமெரிக்கா மட்டுமென்ன இப்படியேவா பிறந்துவிட்டது….??? …!!!!

  1. கந்தவேல்'s avatar கந்தவேல் சொல்கிறார்:

    மேலைநாடுகளையும் , இந்தியாவையும் compare செய்வது என்பது சரியானது அல்ல.
    இந்தியாவின் மிகப்பெரிய பலமும், பலவீனமும் அதன் பல்முனை கொண்ட கலாச்சாரம்.
    பல்லாயிரக்கணக்கான ஜாதிகளும்,மதங்களும், மொழிகளும் , அவர்களின் தனித்தன்மை கொண்ட கலாச்சாரமும் எப்பொழுதும் நவீன சட்ட திட்டங்களை ஏற்பதில்லை. இவ்வாறு இருக்க நமது அரசாங்கத்தினால் எந்த சட்டத்தையும் உருவாக்கி, மக்களிடையே நாகரீகத்தையும் , மாற்றத்தையும் உருவாக்கிவிட இயலாது. இங்கு HELMET போடுவதை கூட நம்மால் சட்டமாக்க இயலவில்லை.அதற்க்கு பலதரப்பட்ட விமரிசனங்களை, நியாங்களையும் அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
    எனவே இங்கு யாராலயும், மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது என்பதே நிதர்சனமாகும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      கந்தவேல்,

      // இவ்வாறு இருக்க நமது அரசாங்கத்தினால்
      எந்த சட்டத்தையும் உருவாக்கி, மக்களிடையே
      நாகரீகத்தையும் , மாற்றத்தையும் உருவாக்கிவிட
      இயலாது. //

      நான் இங்கு கூறுவது நாகரிகம் பற்றி அல்ல…
      வளர்ச்சி பற்றி தான் பேசுகிறேன்.
      அநேகமாக அனைத்து அரசுகளுக்கும்
      ஊழல் அரசியல்வாதிகளே தலைமை வகிப்பதால்,
      மக்களுக்கு/ சமூகத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய வளர்ச்சி,
      அந்த தலைவர்களுக்கும், அவர்களது
      குடும்பத்தினருக்கும் போய் விட்டது.

      சிங்கப்பூர் மாதிரி மக்களுக்கு தேவையான
      வளர்ச்சித் திட்டங்கள் வரவில்லை; வளர்ந்திருக்க வேண்டிய
      அளவுக்கு நாட்டில் வளர்ச்சி இல்லை –

      என்பதைத் தான் சொல்கிறேன்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. Peace's avatar Peace சொல்கிறார்:

    கடுங்குளிர் காலத்தில் எப்படி கால் கழுவ முடியும். காய்ந்த சோள மட்டைகளை
    உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.
    Went to a place called ‘Old World Wisconsin’ outside of Milwaukee.
    Life was very difficult for the early settlers.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப Peace,

      ஆமாம்… நான் அந்த கோணங்களில் எல்லாம்
      யோசித்தே பார்க்கவில்லை;
      பாவம் டிஷ்ஷூ பேப்பரெல்லாம் கண்டுபிடிக்காத
      அந்தக் காலங்களில், தண்ணீரையும் பயன்படுத்த
      முடியாத நிலையில், அந்த மக்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள்….?

      நம் மக்கள் இந்த மாதிரி விஷயங்களில்,
      எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள்.
      நம்மால், தண்ணீரை எந்தக் காலத்திலும் பயன்படுத்த
      முடிகிறதே…!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. Peace's avatar Peace சொல்கிறார்:

    கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி, நடைமுறையில்
    சாத்தியமே இல்லை. எப்படி கடந்து வந்தார்கள் என்பது ஆச்சரியம்!

  4. Peace's avatar Peace சொல்கிறார்:

    நீங்கள் நீண்ட காலம் எழுத வாழ்த்துக்கள்!!
    உங்கள் பதிவுகளை தொடர்கிறேன்.
    மணலில் பிறந்த கடல் ஆமைகள் யாருமே
    சொல்லாமல் கடலை நோக்கி நகரத் தொடங்கி விடும் என்று முத்து லிங்கம்
    எழுதியிருப்பார். நமக்காக் எழுதுபவர்கள்
    உலகத்தில் உள்ளார்கள் என்று நினைக்கிறேன்!!

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப Peace,

    நன்றி நண்பரே…. உண்மை தான்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  6. Tamil's avatar Tamil சொல்கிறார்:

    முன்னேற வேண்டுமானால் இந்தியா ஒரு சிறந்த அரசியல் தலைமையைப்பெற வேண்டும்…

    — முற்றிலும் உண்மை

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.