இது யார் பணம் …? PTR மிக நன்றாக பேசி இருக்கிறார்…!!!

mtr

நீண்ட நாட்களுக்குப்பிறகு
டெல்லி தொலைக்காட்சியில் ஒரு தமிழர் குரல்….
உரத்து ஒலிக்கிறது….!!!

டெல்லி தொலைக்காட்சிகளில் (நேஷனல் மீடியா…)
இடம்பெற்று, பெயரும் பெற வேண்டுமானால்,
ஹிந்தி அல்லது ஆங்கிலம் இரண்டிலொன்றில்
நன்றாகப் பேசும் திறனோடு, நிறைய தன்னம்பிக்கையும்
தேவை…. ஒற்றை வார்த்தையை உதிர்க்கக்கூட
தலைமையின் ஒப்புதல் வேண்டும் என்கிறவர்கள்
எல்லாம் இங்கே நுழைவதில் அர்த்தமே இல்லை.

‘இந்தியா டுடே’ தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில்
தமிழக நிதியமைச்சர் பி.டி.ராஜன் அவர்கள் கலந்துகொண்டு
பேசி, அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப்பிறகு, தமிழகத்தின் நிலை, மிகத்தெளிவாக
எடுத்து வைக்கப்படுகிறது.. இந்த கருத்துகள், தமிழகத்திற்கு
மட்டுமல்ல – இந்த நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும்
பொருந்தும். அனைத்துமாநில மக்களையும், அரசுகளையும்
இந்த கருத்துகள் சென்று சேர இந்த விவாதம் உதவும்.

நாம் ஏற்கெனவே இந்த தளத்தில் விவாதித்த பல கருத்துகள்,
தேசிய அளவில் ஆணித்தரமாக ஒலிக்கப்பட –
தமிழகத்தின் நிதியமைச்சர் திரு.பி.டி.தியாகராஜன் அவர்களின்
உரை உதவும்.

தமிழக அரசியலில் திரு.பி.டி.ராஜன் அவர்களின்
கருத்துகள் சிலவற்றில் நமக்கு ஒப்புதல் இல்லை யென்றாலும்,

  • இங்கே அவர் முன்வைக்கும் விவாதம் தமிழகத்தின்
    பெருமையை உயர்த்துவதாகவே இருக்கிறது.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ராஜன் அவர்களுக்கு
நமது மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்….!!!

சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி விவாதம் கீழே –


About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

4 Responses to இது யார் பணம் …? PTR மிக நன்றாக பேசி இருக்கிறார்…!!!

  1. Kannan சொல்கிறார்:

    Enna Ji,

    Suddenly so much support for DMK?
    If I remember, you and puthiyavan were canvassing everyday not to vote for DMK.
    You were even supporting BJP but was dead against DMK. Changed your stand?

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    kannan,

    அவசரப்பட்டு உளரல் கேள்விகளை கேட்பதற்கு
    பதிலாக, மூளையை பயன்படுத்தி,
    இடுகையை முழுவதாக படித்து புரிந்துகொள்ள
    முயற்சி செய்யவும்….

    கீழ்க்கண்ட வாசகங்களை மீண்டும் ஒருமுறை
    படித்து முடிந்தால் – தெளிவு பெறவும்…..
    ———————————————————–

    ” நாம் ஏற்கெனவே இந்த தளத்தில் விவாதித்த
    பல கருத்துகள், தேசிய அளவில் ஆணித்தரமாக
    ஒலிக்கப்பட –
    தமிழகத்தின் நிதியமைச்சர் திரு.பி.டி.தியாகராஜன்
    அவர்களின் உரை உதவும்.

    தமிழக அரசியலில் திரு.பி.டி.ராஜன் அவர்களின்
    கருத்துகள் சிலவற்றில் நமக்கு ஒப்புதல் இல்லை …”
    ——————————————————————

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  3. புதியவன் சொல்கிறார்:

    சரியான கேள்வியான, ஒரு சில மாதங்களுக்கு முன்பு, இந்தத் தடுப்பூசி பற்றிக் கேள்வி எழுப்பினாரே ஸ்டாலின் மற்றும் திமுக, 15 சதவிகித தடுப்பூசி வீணானது இதனால்தானே என்ற கேள்விக்கு பழனிவேல்ராஜனிடம் பதில் இல்லை. அப்போது அவர் இந்தியாவிலேயே இல்லை என்று நினைக்கிறேன். அமைச்சரான பிறகுதான் அவருக்கு தமிழகத்தைப் பற்றியும் தடுப்பூசி பற்றியும் தெரியவந்திருக்கிறது போலிருக்கிறது.

    தடுப்பூசி இலவசமாக எதற்காக வழங்கப்படவேண்டும்? ரேஷனில் அரிசி இலவசமாக வாங்கும் ஏழைகளுக்கு (அதாவது கேட்டகரியில் கடைசியில் உள்ள மக்களுக்கு) தடுப்பூசி இலவசமாக வழங்கப்படவேண்டும். மற்றவர்களுக்கு எதற்கு இலவசம்?

    இப்போது மக்கள் பணம் என்று வியாக்கியானம் பேசும் அமைச்சருக்கு, அந்த மக்கள் பணத்தை வேண்டும் என்றே அரசியல் ரீதியாக வீணாக்கியது திமுக என்பதும், கொரோனா பரவவேண்டும் என்ற ஒரே உள்நோக்கத்தோடு, ஊரடங்கு அறிவிக்கக்கூடாது என்று திமுக போராடியது என்பதும் தெரியவில்லையா? மத்திய அரசு திரையரங்குகள் செயல்படக்கூடாது என்று சொல்லியபோது முழு திரையரங்கையும் திறந்துவிட்டபோது மாநிலம், மத்திய அரசை மீறி தன்னிஷ்டப்படி செயல்படுகிறது என்பது தெரியவில்லையா?

    மத்திய அரசு should procure on behalf of states, and based on the MLA strength, it has to divide and share the available vaccines. If a state doesn’t implement the guidelines by the center, there is no obligation for the central govt to follow the ‘share’ in logical way. Let the minister learn from Kerala counterparts as to how to run a party and in which areas one can’t do politics. Subsequently let him educate his leaders.

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    குறைந்த பட்சம் – நீங்களே சொல்லி இருக்கும் விஷயம் –

    //மத்திய அரசு should procure on behalf of states,
    and based on the MLA strength, it has to divide and share
    the available vaccines.//

    அதைச் செய்யாதது அவர்களின் தவறு தான்
    என்பதையாவது – மழுப்பாமல், சுற்றி வளைக்காமல்,
    திசை திருப்பாமல் – ஒப்புக்கொள்ளுங்கள் பார்ப்போம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.