…
…

…
நேபாள சுற்றுப்பயணம் முடிந்து, நல்லபடியாக
குடும்பத்துடன் சென்னை திரும்பி வந்து சேர்ந்தோம்…
நேபாள அனுபவத்தைப் பற்றி இரண்டொரு
நாட்களில் தனியே விரிவாக எழுதுகிறேன்.
வழக்கமான எழுத்துப் பணிகளைத் துவக்கும் முன்னர்,
பயணம் பற்றிய ஒரு விஷயத்தை பற்றி மட்டும் இங்கே
சொல்வது அவசியமென்று நினைக்கிறேன்.
நேபாள அரசு, ( மக்கள் அல்ல… அரசு…! ) மற்ற
எல்லாவற்றையும் விட சீனாவிற்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கிறது என்பதை பயணத்தின்போதே பல இடங்களில்
உணர முடிந்தது.
ஆனால், என் உணர்வை இப்படித்தான் உறுதிப்படுத்த
வேண்டுமா என்று நினக்கத் தோன்றியது – திரும்பும்போது,
காட்மண்டு விமான நிலையத்தில் நடந்தவை.
திரும்பும்போது, காட்மண்டுவிலிருந்து, டெல்லி வழியாக
சென்னை திரும்ப விமானத்தில் பதிவு செய்திருந்தேன்.
ஒரு வேளை காட்மண்டுவில் எதாவது அரைமணி, ஒரு மணி
நேரம் தாமதம் நேர்ந்தால், டெல்லி-சென்னை விமானத்தை
பிடிப்பதில் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காகவே,
டெல்லியில் 4 மணி நேர அளவிற்கு இடைவெளி விட்டே
அடுத்த விமானத்தில் பதிவு செய்திருந்தேன்.
காட்மண்டுவில் பிற்பகல் 2.45 மணிக்கு கிளம்பி, மாலை
4.15 மணிக்கு டெல்லி வர வேண்டும். அடுத்து, டெல்லி-சென்னை
விமானம் இரவு 8.35 -க்குத் தான்.
ஆனால், 2.45-க்கு கிளம்ப வேண்டிய காட்மண்டு விமானம்
2.45 ஆகியும் காட்மண்டுவில் தரை இறங்கவே இல்லை.
அதுமட்டுமல்ல…வேறு எந்த விமானமும் தரை இறங்கவே
இல்லை. enquiry-யில் கேட்டால், உங்கள் விமானத்தைப்பற்றி
உரிய நேரத்தில் அறிவிப்பு வரும் என்பதைத்தவிர வேறு
எதையும் அவர்கள் சொல்லத்தயாராக இல்லை….
நேரம் ஆக ஆக ஒரே டென்ஷன். சென்னை விமானத்தை
பிடிக்க முடியாமல் போய் விடுமோ என்கிற பதட்டம்…
விமான நிலைய ஊழியர்கள் யாரும் வாய் திறக்கவே
மறுக்கிறார்கள். பின்னர், கூகுள் உதவியுடன் கண்டுபிடிக்க
முயன்றபோது, காட்மண்டு விமான நிலையம் ஒரு மணி
நேரத்திற்கு முற்றிலுமாக முடக்கப்பட்டு இருக்கிறது என்கிற
தகவல் கிடைத்தது. ( katmandu airport is closed for one hour
due to VVIP movement…)
விமான நிலையத்தில் காத்திருக்கும் இடங்களில் சில
கோணங்களிலிருந்து, விமானங்கள் தரை இறங்குவதை பார்க்க
முடியும். அங்கே சென்று அப்படி எந்த VVIP வரப்போகிறார்
என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மணி நேரத்திற்கும்
மேலாக எந்த விமானமும் கிளம்பவுமில்லை; தரை இறங்கவும்
இல்லை. கடைசியில், ஒரு பெரிய ராட்சஸ சைஸ் சீன கார்கோ
விமானம் வந்திறங்கியது. யார் வெளியே வருகிறார்கள் என்று
பார்த்தேன். யாருமே இறங்கவில்லை…!!!
விமான நிலைத்தில் இருந்த ஒரு செக்யூரிடியை கொஞ்சம்
நட்புடன் அணுகி, விமானத்தில் யார் வருகிறார் என்று கேட்டேன்.
சற்றும் எதிர்பார்க்காத ஒரு பதிலைச் சொன்னார் அவர்….
அடுத்த வாரம் சீன ஜனாதிபதி நேபாளம் வரவிருக்கிறார்.
அதற்கான VVIP landing Rehearsal தான் இது என்று…!!!
அழுவதா… சிரிப்பதா..?
அல்லது நமது டெல்லி-சென்னை விமானத்தை நினைத்து
கவலைப்படுவதா…?
விமான நிலைத்தில் அடுத்து ஒருமணி நேரத்திற்கு
ஒரே குழப்பம். பல விமானங்கள் வரிசையாக தரை இறங்கின.
ஷெட்யூல் எல்லாம் மாறி, ராயல் நேபாள் ஏர்லைன்சுக்கு
மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு –
உள்ளே கிட்டத்தட்ட ஆயிரம் பயணிகள் வெயிட்டிங்…
கடைசியாக, இரண்டே முக்கால் மணி நேர தாமதத்திற்குப்
பிறகு, எங்கள் டெல்லி விமானம் கிளம்பியது.
ஏழரை மணிக்கு டெல்லி வந்தடைந்தது. சென்னை விமானம்
வேறு டெர்மினலில். ஒரே பதட்டம்… Immigration formalities
முடிந்து, லக்கேஜ் எடுத்துக் கொண்டு, ஓட்டம் ஓட்டமாக
அடுத்த டெர்மினலுக்கு ( லக்கேஜுடன் வெளியே போய்,
இரண்டு மெயின் ரோடுகளை கடந்து, 10 நிமிடம் நடந்து
சென்றடைய வேண்டும்…!!!) போய், கடைசி நிமிடத்தில்
சென்னை விமானத்தை பிடித்தபிறகு தான் ஒழுங்கான
மூச்சே வந்தது…
முட்டாள்கள்… இந்த ரிஹர்சலால் எத்தனை பயணிகள்
பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று யோசித்தார்களா…? காட்மண்டு
விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களில் 90 % பேர்
வெளிநாட்டினர்…பலர், தங்களது தொடர்பு விமானத்தை தவற
விட்டிருப்பார்கள். நாங்கள் 4 மணி நேரம் இடைவெளி
விட்டு புக் செய்திருந்ததால், தப்பித்தோம்.
இது, விளைவுகளைப்பற்றி சற்றும் கவலைப்படாமல்
நேபாள அரசு, எப்படி சீனாவின் influence -க்கு உட்பட்டு
செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
என் கதையை விடுங்கள்….
இன்றைய விசேஷமாக, நமது நகைச்சுவை பேச்சாளர்
மோகன சுந்தரம் அவர்களின் ஒரு அரட்டைக் கச்சேரி கீழே –
…
…
.
————————————————————————————————————
———————————————–



நாங்க 2008ல போயிருந்தபோது, ஒரு டிரிப்புக்கு பொகாராவிலிருந்து முக்திநாத் வந்த ஹெலிகாப்டர், அதுக்கு அப்புறம் எலெக்ஷன் டிரிப்புகளுக்குப் போய், நாங்க இன்னும் ஒரு நாள் தங்கி, மத்த இரண்டு பேட்ச்களும் ஹெலிகாப்டர்ல முக்திநாத் போனோம். ஹெலிகாப்டர் வரும் வரையில் எதுவும் நிச்சயமில்லை. நம்ம நாடும் இதுல வித்தியாசம் இல்லைனுதான் சொல்லணும்.
பயணம் வெற்றிகரமா இருந்ததற்கு வாழ்த்துகள்.