…

…

……..
பிரிக்கப்படாத இந்தியாவில், பஞ்சாப் ரஹொனில், 1927-ல்
பிறந்தவர் Mohammed Zahur Khayyam Hashmi என்கிற
(முழுப்பெயரில் என்றும் அழைக்கப்படாமல் -)
“கய்யாம் சாப்” என்றே ஹிந்தி திரையுலகில் அன்போடு
அழைக்கப்பட்டு வந்த மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான
கய்யாம் அவர்களின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை
இன்று என் விருப்பத்தில் பதிவு செய்கிறேன்.
கய்யாம், சென்ற வாரம், ஆகஸ்ட் 19-ந்தேதியன்று,
தனது 92-வது வயதில் காலமானார்.
சுதந்திர இந்தியாவில், திரைப்படத்துறையில் நடந்த
முதல் கலப்புத் திருமணம் இவருடையது.
இஸ்லாமியரான இவர் – பஞ்சாபிய ஹிந்துப் பெண்ணான,
ஜக்ஜீத் கௌர் என்பவரை 1954-லிலேயே திருமணம்
செய்து கொண்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
கய்யாம் – தனது 89-வது பிறந்த நாளில், தனது சொத்துக்கள்
அனைத்தையும் (சுமார் 10 கோடி பெறுமானம் உள்ளவை )
Khayyam Jagjeet Kaur KPG Charitable Trust என்கிற பெயரில்
ஒரு அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம்,
இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள், மற்றும்
தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு ( to support budding artists and
technicians of India ) ஆதரவும், ஊக்கமும் தர முனைந்தார்.
அவர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள்
ஹிந்துஸ்தானி-க்ளாசிகல் மற்றும் கஜல் வகையைச் சேர்ந்தது
என்று கூறலாம்.
3 முறை ஃபிலிம் ஃபேர் விருதுகள், சங்கீத நாடக அகாடமியின்
விருது, பத்மபூஷன் விருது என பல விருதுகளைக் குவித்தவர்
கய்யாம்.
கய்யாம் இசையமைத்த பழைய ஹிந்தி பாடல்கள்
எக்கச்சக்கமாக இருந்தாலும், வாசக நண்பர்களுக்காக –
எனக்குப் பிடித்த சில பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து கீழே
தந்திருக்கிறேன்… அனைத்தையும் ஒரே சமயத்தில் கேட்க
நேரமில்லையென்றால், தினம் கொஞ்சமாக கேளுங்கள்…
——————————————————-
Chin O Arab Hamara Hindustan Hamara –
Mukesh – PHIR SUBAH HOGI – Raj Kapoor, Mala Sinha.
…
Aankhon Ki Masti Ke. (Umrao Jaan 1981)
…
Dil Cheez Hai Kya Aap Meri Jaan Lijiye –
Asha Bhosle – Umrao Jaan (1981) –
…
SHAAM- E- GHAM KI QASAM -TALAT –
KHAYYAM (FOOTPATH 1953)
…
Ye Kya Jageh Hai Dosto – Asha Bhosle – Umrao Jaan (1981) –
…
Ae Dil E Nadaan-Lata Mangeshkar
…
Main Pal Do Pal Ka Shayar Hoon Kabhie Kabhie-
…
Zindagi Jab Bhi Teri Bazm Mein –
Talat Aziz – Umrao Jaan (1981) –
…
Mohabbat Bade Kaam Ki Cheez Hai-
Lata Mangeshkar,Kishore Kumar,Yesudas-
…
இறுதியாக – கய்யாமுக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல்…
Mausam Hai Aashiqana – Pakeezah- 1972
(-இதன் இசையமைப்பாளர்கள் – Ghulam Mohammed மற்றும் Naushad )
…
…
.
———————————————————————————————————



நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…