தேஜஸ்விக்கு ஒன்றும் தெரியவில்லை… சின்னப்பையன்…!!! (இது தேர்தல் காலம்….!!!)


ஹிந்து ஆங்கில நாளேட்டிற்கு தேஜஸ்வி யாதவ் கொடுத்த
ஒரு பேட்டியை கீழே தந்திருக்கிறேன்…….

அந்த செய்திக்குள் செல்லுவதற்கு முன் என் நினைவிற்கு வரும்
ஒரு விஷயத்தையும் இங்கு சொல்லிவிட விரும்புகிறேன்…

————-

முதலில் – இந்திய ராணுவத்திற்கு –
நமது மெட்ராஸ் ரெஜிமெண்ட்-க்கு ஒரு வீர சல்யூட் ….!!!

1971, டிசம்பர் 16 – “டாக்காவின் வீழ்ச்சி” என்று இன்றும்
கொண்டாடப்படும் நாள் நினைவிற்கு வருகிறது…

1971 டிசம்பர் 3-ந்தேதி துவங்கி, டிசம்பர் 16-ல் முடிவுக்கு வந்த
இந்தியா-பாகிஸ்தான் போர் நினைவிற்கு வருகிறது.

அப்போது கிழக்கு பாகிஸ்தான் ( East Pakistan )
என்றழைக்கப்பட்ட பகுதிக்குள், இந்திய ராணுவத்தின்
மெட்ராஸ் ரெஜிமெண்ட் ( ஆம்… நமது வீரத்தமிழர்களைக் கொண்ட
ரெஜிமெண்ட் தான்..!!!) புகுந்து, வங்காள மக்களை
கொடுமைப்படுத்தி வந்த பாகிஸ்தான் ஆர்மியை வீழ்த்தி,

98,000 ( ஆம் – தொண்ணூற்று எட்டாயிரம் )
பாகிஸ்தான் சிப்பாய்களை
போர்க்கைதிகளாக ( Prisoners of War ) சிறைப்பிடித்து,
இந்தியாவிற்கு கொண்டு வந்து மத்திய பிரதேசத்தில்
முகாமில் வைத்த இந்திய ராணுவத்தின்
சிறப்பான, பெருமை மிகுந்த,
ஆற்றல் மிக்க செயல்பாடு நினைவிற்கு வருகிறது….

தேஜஸ்வி சின்னப்பையன்… அப்போது அவர் பிறந்திருக்கவே இல்லை …
அது தெரியாமல் பேசியதற்காக மன்னித்து விடுவோம்…

அது சரி – நமது ந.மோ.ஜி அப்போது எங்கே இருந்தார்…?
என்ன செய்து கொண்டிருந்தார்…?
எப்படி இருந்தாலும் – அவருக்கு நல்ல ஞாபக சக்தி உண்டு…
அவருக்கு இதெல்லாம் மறந்திருக்காதென்றே நம்புவோம் ….!!!

——————————————————————–

————————

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக
இந்திய ராணுவம் பயனற்று கிடந்ததா?
இவரால்தான் ராணுவத்துக்குப் பெருமையா? – தேஜஸ்வி விளாசல்
Published : 07 Apr 2019 12:53 IST

https://tamil.thehindu.com/india/article26760906.ece?
utm_source=india&utm_medium=sticky_footer
———–

ராணுவத்தை தங்களது பிரச்சார ஆயுதமாக பாஜக பயன்படுத்தி வருவதாக கடும்
விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில்
ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சித் தலைவரும்
லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ்
பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத் இந்திய ராணுவத்தை ‘மோடியின் சேனை’
என்று வர்ணித்தது பெரும் சர்ச்சையாகி
தேர்தல் ஆணையம் யோகிக்கு ‘ஜாக்கிரதையாகப் பேசவும்’
என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில் பாலகோட்
தாக்குதல் பற்றியும் அது குறித்த பாஜகவின் பிரச்சாரம் பற்றியும் கேள்வி எழுப்பிய போது,

“மோடி பிரதமராவதற்கு முன்பு நம் நாட்டு ராணுவம் என்ன பயனற்று கிடந்ததா, இவர் வந்த
பிறகுதான் ராணுவம் திறமையாகச் செயல்படுகிறதா? இவர் நாற்காலியில் உட்காராத போது
ராணுவம் என்ன கையாலாகாமல் இருந்ததா?

பாலகோட் தாக்குதல் இந்திய ராணுவத்தின் சாதனை.
ராணுவத்தை அரசியலாக்கலாமா?
மோடியால்தான் இவையெல்லாம் சாத்தியம் என்று பிரச்சாரிக்கின்றனர், இது எவ்வளவு பெரிய
பிரச்சாரம்?

” எதிர்க்கட்சிகளை பாகிஸ்தானின் முகவர்கள் என்று
சாடுகிறார் மோடி, ஆனால் நாங்களொன்றும் சால்வை எடுத்துக் கொண்டு
பாகிஸ்தான் செல்லவில்லை,

அங்கு அழையா விருந்தாளியாகச் சென்று பிரியாணி சாப்பிடவில்லை.

வெட்கக்கேடான தாக்குதலுக்குப் பிறை ஐஎஸ்ஐ-யை பதான்கோட்
விமானப்படை தளத்துக்கு அழைக்கவில்லை” என்றார் தேஜஸ்வி யாதவ்.

—————————————————————-
பி.கு.

கிழக்கு பாகிஸ்தான் – பங்களா தேஷ் வெற்றியை மறந்து விட்டு
பேசும் தேஜஸ்வி யாதவை – நாம் மன்னித்து, மறந்து விடுவோம்…!!!

.
——————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to தேஜஸ்விக்கு ஒன்றும் தெரியவில்லை… சின்னப்பையன்…!!! (இது தேர்தல் காலம்….!!!)

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அரசியல் பேச்சுகளில் அர்த்தம் காண முடியாது. அது பாஜகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி. மோடி அவர்களது தலைமையில், எதிரி நாடுகள் இந்தியாவின் எல்லைக்கு ஊறுவிளைவித்தால் நிச்சயம் பார்த்துக்கொண்டு சும்மா, காங்கிரஸ்/திமுக அரசைப் போல் பம்மாது என்பதைக் காண்பித்திருக்கிறார். மற்றபடி இதனைக் குறித்து அதிகமாக பாஜக பேசுவது வெற்று விளம்பரம், அவ்வளவுதான். பொக்ரான் அணுகுண்டுச் சோதனை வாஜ்பாய் செய்ததல்ல, செய்தது நம் விஞ்ஞானிகள். ஆனால் அதற்குரிய உதவிகளையும் அரசியல்ரீதியான ஆதரவையும் தந்தது வாஜ்பாய். அந்த அளவில்தான் அவரது பெருமை மதிக்கவேண்டும். இந்திராவும் பாகிஸ்தானைத் துண்டாக்கியதற்கான அரசியல் ரீதியான பெருமைக்கு உரியவர்தாம். ஆனால் அவர் சிறு கத்தியைக்கூடத் தூக்கவில்லை.

    நம் இராணுவம் ஆற்றல் மிக்கது. ஆனால் அதனை ‘செயல்படு, செயல்படாதே’ , ‘தவறான முறைக்கு உங்களை உபயோகப்படுத்துவேன்” என்று சொல்பவர்கள் அரசின் தலைவர்கள். மும்பைத் தாக்குதல், நம் ஆயுதக் கிடங்கு தாக்குதல் ஆகிய இரண்டிலும் மத்திய காங்கிரஸ்/திமுக அரசு என்ன செய்தது, எப்படி அதனைக் கையாண்டது (அப்போ உளவுத் துறை இல்லையா? பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லையா என்றெல்லாம் நாம் கேட்கக்கூடாது.. ஏனென்றால் அது இந்துக்களின் எதிரியான காங்கிரஸ்/திமுக அரசல்லவா?) என்பதையும், சம்பந்தமில்லாத இலங்கைப் பிரச்சனையில் நம் வலிமைமிகு இராணுவத்தை உள்புகச் சொல்லி தேவையில்லாமல் இராணுவத்துக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியது காங்கிரஸ் தலமையிலான மத்திய அரசு. இன்றைக்கு பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்ததும், இராணுவம் தகுந்த முறையில் பதிலடி கொடுக்கலாம், அதன் கைகள் கட்டப்படாது என்று சொன்னது மோடி அவர்களின் பாஜக அரசு. இரண்டு அப்ரோச்சுக்கும் வேறுபாடு உண்டா இல்லையா?

    இலங்கையில் நம் இராணுவம் அட்டூழியம் செய்தது என்று திமுக, அதன் அடிமை வைகோ, திருமா போன்றவர்கள் சொன்னபோது, தமிழகத்தில் இருந்த யாரும், ‘அது எப்படி… ப்ரூஃப் கொண்டுவா, அந்த அட்டூழியங்களின் வீடியோ எங்கே’ என்றெல்லாம் கேட்கவில்லை. ஆனால் இந்தத் தாக்குதலில் மட்டும், இம்ரான்கான் நல்லவர், பாகிஸ்தான் நல்ல நாடு, நீங்கள் ப்ரூஃப் கொண்டுவாருங்கள் என்று பாஜக அரசைக் கேட்கிறது. இதை எந்தப் பத்திரிகையாவது கேள்வி கேட்டதா?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      புல்வாமாவில் 41 ராணுவ வீரர்கள் பலியானது யாருடைய அஜாக்கிரதை காரணமாக… ?

      மோடிஜி வருவதற்கு முன்னால், இந்திய ராணுவம் செயல்பட்டதே இல்லை என்று
      சொல்லும் புத்திசாலிகளின் வரிசையில் நீங்களும் சேருகிறீர்களா…?

      ராணுவத்தின் செயல்பாட்டை, தன்னுடைய சாதனையாகக்கூறி தேர்தலில்
      வெற்றி தேடுவதை நீங்கள் ஏற்கிறீர்களா…?

      மோடிஜி வாரணாசியை தேர்ந்தெடுத்தது என்ன காரணத்திற்காக ?

      மதத்தின் அடிப்படையில் ஓட்டு கேட்பதை நீங்கள் ஏற்கிறீர்களா…?

      என்னுடைய பார்வையை மிகத்தெளிவாக நான் பலமுறை
      சொல்லி இருக்கிறேன்.. மீண்டும் சொல்கிறேன்.

      மதம் வேறு… அரசியல் வேறு.
      இரண்டையும் சேர்த்து குழப்புவது
      சில அரசியல்வாதிகளின் சுயநலம்.

      நானும் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவன் தான்.
      கோவிலுக்குப் போகிறவன் தான்..
      கடவுள் நம்பிக்கை உள்ளவன் தான்.

      ஆனால் எனக்கிருப்பது மதப்பற்று…
      மதவெறி அல்ல…
      நான் எந்த மதத்திற்கும் விரோதமானவன் அல்ல.
      அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்று ஏற்பவன்.
      கடவுள் ஒன்றே என்று நம்புபவன்..
      அவனை எப்படி அழைத்தாலும் அவன் ஏற்றுக் கொள்வான் என்று நம்புபவன்.

      மதப்பற்றுக்கும் – மதவெறி’க்கும்
      நிறைய வித்தியாசம் இருக்கிறது.
      இந்த வித்தியாசம் தெரிந்தும் நீங்கள் அதை விரும்பி
      வரவேற்கீறீர்களா….?

      மத வெறி மனிதரை எங்கு கொண்டுபோய் விடும் என்பதை
      நான் நடைமுறையில் பார்த்து அனுபவித்து இருக்கிறேன்.
      உங்களுக்கும் என்றாவது அந்த அனுபவம் ஏற்பட்டால் –
      அப்போது உணர்ந்து கொள்வீர்கள்.

      வெறுப்பும், குரோதமும், வெறியும் –
      மனித சமுதாயத்திற்கு என்றும் நிம்மதியை தராது.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        மதவெறி/மதப்பற்று – உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால் ‘மதம்’ என்பது வாக்கினைத் தீர்மானிக்கும் விஷயமாக இப்போது, குறிப்பாக தமிழகத்தில் இருக்கிறது என்பதைச் செய்திகள் படித்துத் தெரிந்துகொண்டிருப்பீர்கள்.

        நான், எங்கு, மோடி வருவதற்குமுன்னால் நம் ராணுவம் செயல்படலைனு சொல்லியிருக்கேன்? மத்திய அரசு தலைமை ஆண்மையுடையவர்களாக இருந்தால்தான் இராணுவம் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும். இந்திரா காலத்துக்கு அப்புறம் மோடி இதனைச் செய்திருக்கிறார்.

        ராணுவத்தின் செயல்பாட்டை வைத்து தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளக்கூடாது. இது நாட்டுக்கு நல்லதல்ல. உலக அளவில் நம் மதிப்பு கெடும். பாஜக அதனை மேற்கொள்வது சரியல்ல. நான் அந்தப் பதவியில் இருந்தால் இதனைச் செய்யமாட்டேன். நாட்டுக்குச் செய்யும் நன்மையை அமைதியாகச் செய்யணும். கவனிக்கும் மக்கள் கவனத்துக்கு அதுவாகவே போகும். இராணுவ நடவடிக்கை என்பது வெற்றி/தோல்வி இரண்டும் கலந்தது. ‘உடனே தீவிரவாதிகளை அழித்துவிட்டோம், முகாம்களை ஒழித்துவிட்டோம்’ என்று சொன்னதெல்லாம் நான் ரசிக்கலை. அது சரியானதும் கிடையாது. டவுன்ப்ளே பண்ணியிருக்கணும். அதுவும்தவிர மோடி அவர்கள் அவசர அவசரமாக நாடு ‘சாட்டலைட்களை அழிக்கும்’ திறமை பெற்றிருக்கிறது என்று மக்களுக்கு அறிவித்ததும் தவறுதான்.

        “அஜாக்கிரதை” – இதனை ஒரு குற்றமாக நாம் சொல்லக்கூடாது. அப்படிச் சொல்வது நம்முடைய பயாஸ்டு மைண்ட்செட்டைத்தான் காண்பிக்கும். விட்டால், திருட்டுகள் நடைபெறுவது, மக்களின் அஜாக்கிரதை காரணமாக, கற்பழிப்புகள் நடைபெறுவது பெண்களின் அஜாக்கிரதை காரணமாக, அதனால் யாரும் அரசைக் குறை சொல்லக்கூடாது என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே.

        //எனக்கிருப்பது மதப்பற்று…// – அனேகமாக எல்லோருக்கும் இருப்பது மதப்பற்றுதான். அது எப்போது மதவெறியாக மாறுகிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அஹிம்சைக்கு ஒரு லிமிட் உண்டு. அது தனி மனிதர்களுக்குச் சரியாக இருக்கும். தேசத்துக்குச் சரியாக இருக்காது.

        /வித்தியாசம் தெரிந்தும் நீங்கள் அதை விரும்பி வரவேற்கீறீர்களா…// நிச்சயம் இல்லை காமை சார். ஆனால் நாடு அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது. கிறித்துவ பிரச்சாரங்களையும், ஒவ்வொரு சர்ச் அதிகாரிகளுக்கு எப்படி நம் மக்களை வாக்களிக்கச் சொல்லவேண்டும் என்ற கட்டளைகளை நீங்களும் படித்திருப்பீர்கள். இஸ்லாமிய மதத்திலும் பாஜகவுக்கு எதிராக எப்படி வாக்களிக்கணும் என்று சொன்னதையும் படித்திருப்பீர்கள். காங்கிரஸ், திமுக இந்த மதத்து மக்களைக் கவர என்னவெல்லாம் செய்கிறது என்பதையும் பார்த்திருப்பீர்கள் (திமுக தேர்தல் அறிக்கை அதற்குச் சாட்சி). அப்படி இருக்கும்போது, பாஜகவை எப்படி குறை சொல்லமுடியும்? ஏன் குறை சொல்லணும்?

        • அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

          // “அஜாக்கிரதை” – இதனை ஒரு குற்றமாக நாம் சொல்லக்கூடாது. //

          ராணுவம் பெற்ற வெற்றிக்கு மட்டும் இவர் சொந்தம் கொண்டாடுகிறார்.
          இவரது அஜாக்கிரதையை சொல்லிக் காட்டக்கூடாதா ?

          வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் தோல்விக்கும் பொறுப்பேற்கத்தான் வேண்டும்..

          • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

            Aravindan – You have not understood the whole issue or my feedback on this. Modi is not responsible for the outcome of Army action. Even if he claims, he is NOT.

            What was his plus point and where he differs from Congress கும்பல் is that, he allowed Army to take swift action. The Army’s action was not very successful, as it would always be with mixed results. As PM and as citizens, we all must unite behind army.

        • அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

          // பாஜகவை எப்படி குறை சொல்லமுடியும்? ஏன் குறை சொல்லணும்? //

          அப்படிச் சொல்லுங்க. இது தான் உங்க பாலிசி என்று.

  2. பிரபு காளிதாஸ்'s avatar பிரபு காளிதாஸ் சொல்கிறார்:

    இப்போ காவிரி மைந்தன் சைலன்ட் மோட் இல் இருப்பார் என்று நினைக்கின்றேன்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      பிரபு காளிதாஸ்

      நீங்கள் இவ்வளவு நாட்களாக எந்த மோடி’ல் இருந்தீர்கள்….?
      உங்களைப்போல் யார் பின்னாலும் ஒளிந்துகொள்ளும் கோழை அல்ல நான்.
      என் கருத்துகளை, வெட்டவெளிச்சமாகப் பேசி வருபவன்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    இடுகையின் முக்கிய கதாநாயகன் தேஜஸ்வி யாதவ். .. மெட்ராஸ் ரெஜிமெண்ட் ( ஆம்… நமது வீரத்தமிழர்களைக் கொண்ட
    ரெஜிமெண்ட் தான்..! என்பதும் மற்றும் காங்கரசின் ராணுவ நநடவடிக்கைகள் எல்லாம் மழுங்கடிக்கப்பட்டு ..வேற திசை நாேக்கி கருத்துக்கள் செல்வதும் ..அதற்கு தளகர்த்தா மறு மாெழி கூறுவதும் வாடிக்கையாகி ..உண்மையான கருத்தாழமிக்க விவாதங்கள் வர ..வர நாேய்வாய் பட்டு நாேஞ்சானாகி வருவது காலத்தின் காேலமா …?

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! மும்பை தாக்குதலும் அன்றைய குஜராத் முதல்வர் திரு .மாேடி அவர்களின் சமயாேசித தன்மை பற்றியும் தெரிந்துக் காெள்வது நல்லது

    // நவம்பர் 28ஆம் தேதி, மும்பை தாக்குதலுக்கு எதிரான பொதுமக்கள் கோபத்தைச் சாதகமாக்கிக்கொள்ளும் வகையில் பாஜக…..
    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிரான பிரச்சாரத்தைத் துவக்கியது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, மும்பைக்குச் சென்று, தாக்குதலுக்கு உள்ளான இடங்களில் ஒன்றான ஓபராய் டிரைடன் ஓட்டலுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து, தாக்குதலைத் தடுக்க அரசு தவறியது தொடர்பாக விமர்சித்தார். நவம்பர் 29, டிசம்பர் 4 தேதிகளில் முறையே தில்லியிலும் ராஜஸ்தானிலும் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் மோடி இப்படிப் பேசினார். அன்றைய தினம், மும்பை தாக்குதல்களைத் தேர்தல் நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான விளம்பரங்களை நாளிதழ்களில் பாஜக வெளியிட்டது. மும்பையில் ரத்தம் சிந்தப்பட்டதைக் குறிக்கும் வகையில் கறுப்புப் பின்னணியில் சிவப்பு வண்ணம் தெறிக்க, அந்த விளம்பரம் இப்படி அமைந்தது:

    “நினைத்தபோது தாக்குதல் நடத்தும் கொடூர பயங்கரவாதம்.

    பலவீனமான அரசு.

    முனைப்பற்ற, திறமை அற்ற அரசு

    பயங்கரவாதத்தை எதிர்ப்போம்.

    பாஜகவுக்கு வாக்களிப்பீர்” // எப்படி சூப்பரா இருக்கு இல்ல … அந்த சிவப்பு கலர் பாேஸ்டர் இப்பாேதும் கிடைக்கும் இணையத்தில் ..தேவையானவர்கள் தேடி பயன்படுத்திக்கலாம் …!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.