…
…
சில சமயங்களில் வார்த்தைகளால் எளிதில் விளக்க இயலாததை,
ஒரு கருத்துச் சித்திரம் மிக எளிதாகவும், அழகாகவும் – சொல்லி விடுகிறது.
வித்தியாசமான புகைப்பட கருத்துச்சித்திரம் ஒன்றை பார்த்தேன்…
இதற்கான விளக்கத்தை நான் எழுதுவதற்கு பதிலாக,
இது எதனை குறிக்கிறது, யாரைக் குறிக்கிறது, என்ன சொல்ல வருகிறது – என்று
நண்பர்கள் யாராவது கருத்து சொல்ல விரும்பினால் – வரவேற்பேன்.
பின்னூட்டங்களின் மூலம் சொல்லலாம்….
…

…
.
————————————————————————————————————————-



மீடியா அடிமைகளின் பேராதரவில் மிதந்துகொண்டு, மிதப்பில் பேசிக்கொண்டிருப்பவர்கலின் கதி,, அந்த கூட்டத்தில் ஒரு சிறு பகுதி தடம் மாறினாலும், அதோகதி தான் என்பதை உணர்த்துகீறது.
கூடவே, அந்த ஆதரவு கூட்டத்தில் இருப்பவர்களுக்கே இந்த உண்மையோ,
தங்கள் சக்தியோ தெரியவில்லை. தங்களில் ஒருவர்/ஒரு சிறு கூட்டம் வெளியேறினால் கூட, அத்தனை பேருக்கும் அழிவு காத்திருக்கீறது என்பதை
அவர்கள் உணர வேண்டும்.
எதிர் கட்சியினரை ஒருங்கிணைக்க முயலும் காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலையை இந்த கார்ட்டூன் அருமையாக விளக்குகிறது. முதலில் காங்கிரஸ் தலைமையில் ஒற்றுமையான , பலம் வாய்ந்த கூட்டணி போல் காட்சியளித்தது.ஆனால் இப்பொழுது ஒவ்வொருவராக கழண்டு கொண்டு வருவது காங்கிரஸுக்கு பேராபத்து.
மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல்
நமோ கூட்டத்துக்கு எதைக்கண்டாலும் ராகுல் காந்தி நினைப்பு தான்
வருகிறது. கனவில் கூட ரா.காந்தியை நினைத்து மிரள்கிறார்கள்.
விரைவில் இந்த கொலைகார வெறி பிடித்த கூட்டத்திற்கு முடிவு வரும்.
இவர்கள் போட்ட ஆட்டமே போதும் இவர்களை விரட்டவேண்டுமென்று
மக்கள் தீர்மானிக்க. ரூபாய் நோட்டை செல்லாக்காசாக்கியபோது,
அம்பதாயிரம் ரூபாய் வங்கியில் இருந்தும் பிச்சைக்காரனைப் போல்
தெரிவில் அலந்த எத்தனையோ பேர்களின் சாபம் இவர்களை சும்மா விடாது.
ரூபாய் நோட்டு செல்லாதது
முட்டாள்தனமான ஜிஎஸ்டி
மத வெறி, ஜாதி வெறி, மொழி வெறி,
இந்தி திணிப்பு,
எங்கும் இந்தி, எதிலும் இந்தி,
எல்லா திட்டத்திற்கும் புரியாத இந்தியில் பெயர்,
மக்கள் பணத்தில் வெட்டி விளம்பரம்
எதைச் சொல்வது எதை விடுவது ?
விடாது கருப்பு; மூட்டையை கட்டிக்கொன்டு குஜராத்திற்கு
டிக்கெட் போட வேண்டியது தான் மே மாதத்திற்குப் பிறகு.
அய்யா,
என்னதான் நாம் ஒன்று நினைத்தாலும், நடப்பது தானே நடக்கும். ராகுல் காந்திக்கு வோட்டு போடா நாம் ஆசை பட்டாலும், அவரது கூட்டணி கட்சியினர் விட மாட்டார்கள் போலும். எப்படி தான் இந்த கூட்டணி மக்களை நம்ப வைக்க போகிறதோ?
ஜால்ராக்களின் நக்கல் ஒன்றும் நடக்காது இங்கே-
விடாது கருப்பு; மூட்டையை கட்டிக்கொன்டு குஜராத்திற்கு
டிக்கெட் போட வேண்டியது தான் மே மாதத்திற்குப் பிறகு.
தலைவன் என்பவன் தொண்டர்களின் கூட்டு பிரதிபலிப்பு. தொண்டர்கள் இல்லையேல் தலைவன் இல்லை.
நுணலும் தன் வாயால் கெடும்.
தலைமைப்பண்புகள் பற்றின இதுபோன்ற கருத்துப்படங்கள் Linkedin.com தலத்தில் நிறைய வரும். தலைவர் / லீடர் என்பவரின் பலமே அவரை பின்பற்றும் குழுவின் பலமாக இருக்கும் உண்மையை காட்டலாம்.
தன்னுடைய அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்கள் ஒரு பக்கம் — அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஏமாற்ற நினைக்கும் பேர்வழி அந்தப்பக்கம் — எஜமானர்கள் தீர்மானித்தால் { தீர்மானிக்கனும் } : கையொப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லாத கார்ட்டூன் . !
தன்னுடைய அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்கள் ஒரு பக்கம் — அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஏமாற்ற நினைக்கும் பேர்வழி அந்தப்பக்கம் — எஜமானர்கள் தீர்மானித்தால் { தீர்மானிக்கனும் } : கையொப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லாத கார்ட்டூன் . !
மக்களால் தான் தன் ஆட்சி அதிகாரம் என்பதை அந்த மமதை பிடித்த சர்வாதிகாரிக்கு உணர்த்துகிறது.
உணரனுமே…!
எனக்கு என்னவோ காலம் கடந்து விட்டதாகவே படுகிறது.
மே 23 வரை பொறுப்போம்.