…
…
எப்போதும் நக்கலும், நையாண்டியுமாகத் திரியும் ஒரு சீனியர் தலைவரின் நிலை
இப்படி ஆகி விட்டதே… எத்தனையாண்டுக்கால அனுபவம்,
அரசியலில் அவர் பார்க்காத விஷயம் உண்டா…?
அனுபவிக்காத விஷயம் உண்டா…? சந்திக்காத சிக்கல்கள் உண்டா …?
ஆனாலும், கடைசியில் – துரைமுருகன் அவர்களின் போதாத காலம்
திருமதி பிரேமலதா விஜய்காந்த் அவர்களின் வாயில் விழுந்து புறப்பட வேண்டியதாகி விட்டது
மிகவும் பரிதாபகரமான விஷயம் தான்…
திருமதி சொல்கிறார் –

துரைமுருகன் கொள்ளையடித்த பணம் மொத்தமாக வெளியே வந்துகொண்டிருக்கிறது …
“15 நாட்களுக்கு முன்பு துரைமுருகன் தேமுதிகவை எவ்வளவு அசிங்கப்படுத்தினார்
என்பது இந்த உலகத்திற்கே தெரியும்.
ஆனால், இன்றைக்கு என்ன நடந்தது?
இன்றைக்கு மூட்டை மூட்டையாக
கோடி கோடியாக கொள்ளையடித்து சம்பாதித்த பணம்,
பாதாளத்தில் இருந்து இன்னும் தோண்டி
எடுத்துக்கொண்டே இருக்கிறார்களாம்.
500 கோடி, 1,000 கோடி ரூபாய் என்கிறார்கள்.
கொள்ளையடித்த பணம் எல்லாம் இன்றைக்கு
மொத்தமாக வெளியே வந்துகொண்டிருக்கிறது.
துரைமுருகன் ‘யோக்கியர்’, உத்தமர் போன்று பேசிக் கொண்டிருந்தார்.
இன்றைக்கு என்ன ஆனது?”
….
…..
….
—————————————————————————————-
திருமதி பிரேமலதா அவர்கள் சொல்வதை சொல்லட்டும்.
அவர் வயிற்றெரிச்சல் அவருக்குத்தான் தெரியும்…
இருந்தாலும், பொதுவாக தர்ம நியாயம் என்று
ஒன்று இருக்க வேண்டும் அல்லவா….?
பாவம் செய்தவர்கள்
தண்டனை அனுபவிக்கத்தானே வேண்டும்…என்று கேட்கலாம்.
தண்டனை கிடைக்கட்டும் பரவாயில்லை…
ஆனால் இங்கே பிரச்சினை என்னவென்றால்,
எதற்கு அடிக்கிறோம் என்று சொல்லாமலே
ஒருவரை அடித்தால்…
வர் பாடு எவ்வளவு பரிதாபம்…?
இப்போது நீதிமன்றங்களில் வழக்குகள் நடக்குகின்றன…
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கிடைக்கிறது…
இன்ன குற்றம்… அதற்காக இன்ன தண்டனை என்று தெரிகிறது.
சரியென்று அனுபவித்து விட்டுப்போகலாம்.
ஆனால், இந்த மாதிரி தர்ம நியாய விஷயங்களில்
நீதிமன்றம் மாதிரி இல்லை…
அனுபவிக்கும்போது எச்சரிப்பதும் இல்லை.
தண்டனை கொடுக்கும்போதும்
இன்ன தவறுக்காக இந்த தண்டனை என்று
யாரும் சொல்வதும் இல்லை.
எந்த தவறுக்காக என்றும் தெரியாமல்,
எத்தனைக்காலம் என்றும் தெரியாமல்,
தண்டனை அனுபவிப்பது பாவம் தானே… பரிதாபமான விஷயம் தானே…?
செய்த பாவங்கள் ஒன்றா, இரண்டா…?
இந்த விவரங்கள் தெரிந்தால், அட்லீஸ்ட் – இன்னின்ன
பாவங்களுக்கான தண்டனைகள், அவமானங்கள்
முடிந்து விட்டன… என்று தெரிந்து கொண்டு,
மீதி என்னென்ன பாக்கி இருக்கிறது
என்றும் தெரிந்து வரவேற்க – அடுத்து
தன்னை தயார் படுத்திக் கொள்ளலாம் அல்லவா…?
அதற்கு கூட வாய்ப்பு கொடுக்கா விட்டால் எப்படி….?
கண்ணில்லாத கல்நெஞ்சுக்காரர்; மனசாட்சியே இல்லாதவர் அந்தக் கடவுள்… !!!
———————————————————————-
links –
https://tamil.oneindia.com/news/thiruvannamalai/dmk-duraimurugan-
paid-for-what-he-did-says-dmdk-premalatha/articlecontent-pf364346-
345634.html
https://tamil.thehindu.com/tamilnadu/article26710691.ece
.
———————————————————————————————————————



கா.மை. சார்…. துரைமுருகனிடம் பிடிபட்ட துளியளவு பணத்தைப் பற்றிப் பிரச்சனையல்ல (துளியளவு-அவர் கொள்ளையடித்துவைத்துள்ள ஊழல் பணத்தில் என்று புரிந்துகொள்ளணும்). ஆனானப்பட்ட ஜெகத்திடம் 26 ஆயிரம் கோடி இன்வெஸ் பண்ண எக்செஸ் பணம் இருக்கும்போது துரையிடம் இருக்காதா?
எப்படி 50 கோடி ரூபாய் செலவழித்து, 10 கோடி ரூபாய் மட்டும் சம்பளமாக வருமானம் வரக்கூடிய எம்.பி. பதவிக்கு மெனெக்கிடறாங்க? கேடி பிரதர்ஸ் போன்ற சீசண்ட் கேடி (நான் அவங்க முதல் எழுத்தைச் சொன்னேன்) போன்றவர்கள் 20 மடங்கு சம்பாதிப்பாங்க. ஆனா இதுல வேற ஏதாவது பெனிஃபிட் இருக்கா? (பொதுவா எம்.பிக்கள் பார்லிமெண்டில் கேள்வி கேட்பாங்க. நம்ம ஊர் ஜால்ரா பத்திரிகைகள்-விகடன் உள்பட, இவர் 300 கேள்வி கேட்டார், 500 கேள்வி கேட்டார் என்று பெருமையாக எழுதுவாங்க. ஆனா கேள்வி கேட்கும் ஃபார்மை பெரிய கம்பெனிகள்தான் கொடுப்பதாகவும், ஒரு கேள்விக்கு இத்தனை ரூபாய் என்று தருவதனால்தான் இவங்க கேள்வி கேட்கிறாங்கன்னும் படித்திருக்கிறேன். உதாரணமா நம்ம ஊர் எம்.பி என்ன என்ன கேள்விகள் கேட்டிருக்காங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா, அதுல 95% தமிழ்நாட்டுக்குச் சம்பந்தமில்லாத, கம்பெனிகளுக்குச் சாதகமான கேள்விகளையே கேட்டிருப்பாங்க. அப்புறம் அவங்களுக்குக் கொடுக்கிற பங்களாவில், கார் பார்க் இடம் முதல்கொண்டு வாடகைக்கு விடுவாங்க. வேற எப்படி சம்பாதித்து பணம் பண்ணுவாங்க? உங்களுக்குத் தெரியுமா?)
முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும்.
இது எல்லாருக்கும் பொருந்தும், தற்போதைய ஆட்சியாளர்கள் உட்பட.
அய்யா …! ” இதோ காட்பாடி கொள்ளை விவரம் – ”
// வேலூர் -காட்பாடி, காந்தி நகர், நகரமைப்பு
சங்கத்திற்கு சொந்தமான, சுமார் 66 ஆயிரம்
சதுர அடி காலி நிலத்தை (து.மு. கல்லூரிக்கு
அருகே உள்ளது ) – பொது மக்கள் (?)
ஆக்கிரமிப்பு செய்து விடாமல் இருப்பதற்காக
ஏலத்தில் விற்க திடீரென்று முடிவு செய்கிறார்கள்.
ஏலம் நடந்த அன்று பொது-மக்கள் யாரும்
கலந்து கொள்ளவில்லை ( !)
கீழ்க்கண்ட மக்கள் மட்டும் கலந்து கொண்டு
ஏலம் எடுத்தார்கள் –
முன்னாள் திமுக சட்ட அமைச்சர்
துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் –
5400 சதுர அடி – ரூ.27 லட்சம் 27 ஆயிரம்.
துரைமுருகனின் மனைவி சாந்தகுமாரி –
480 சதுர அடி – ரூ.23 லட்சம்,85,300.
கதிர் ஆனந்த் மனைவி சங்கீதா –
5400 சதுர அடி – ரூ.27 லட்சம், 27 ஆயிரம்.
துரைமுருகன் தம்பி துரை சிங்காரம் –
6000 சதுர அடி – ரூ.28 லட்சம், 26 ஆயிரம்.
துரை சிங்காரம் மனைவி முல்லைக்கொடி –
16,500 சதுர அடி – ரூ.85 லட்சம், 80 ஆயிரம்.
ஏலத்தில் கலந்து கொள்ள வந்த வெளி ஆட்களை
அடித்துத் துரத்தி விட்டு ஏலம் நடந்திருக்கிறது. // —– இதை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள https://vimarisanam.wordpress.com/2011/09/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/ —-
மேடையில் அழுத திருவாளர் துரை முருகன் வைத்திருக்கும் கார் – அப்துல் காதருடையதாமே ….? Posted on மே 10, 2016 by vimarisanam – kavirimainthan — சென்ற சட்டசபை தேர்தலின் போது நடந்தது இது — இதில் என்னும் கூடுதல் தகவல்கள் இருக்கிறது —
// கண்ணில்லாத கல்நெஞ்சுக்காரர்; மனசாட்சியே இல்லாதவர் அந்தக் கடவுள்… !!! // …. பாவம் கடவுள் …. ஏதோ ஒரே ஒரு தப்பு என்றால் அவரும் ஏதாவது தண்டனை அளித்து மற்ற வேலைகளை பார்ப்பார் — இங்கே தொடர் தப்பு செய்கிறவர்களுக்கு என்ன பிரிவில் — எப்படி கொடுப்பது என்பதில் கடவுளே திணறும் நிலையில் இருப்பதால் உங்களுக்கு அவர் ” கல்நெஞ்சுக்காரராக ” தெரிகிறாரா …?
இல்லை செல்வா…!
இறைவன் கருணையாளன்.
அதுதான் விட்டு பிடிக்கிறான்.
நேரம் கொடுத்து, வழி முறை காண்பித்து, பொறுமை காட்டி, இவ்வளவுக்கு பிறகும் அநியாயங்கள் அட்டூழியங்கள் செய்தார்கள் என்றால் அதன் பின் இருக்கு கச்சேரி.
யாரும் தப்ப முடியாது.
கச்சேரி இந்த உலகத்தில் இருக்கலாம். மறுமையில் நிச்சயம் உண்டு.
செல்வராஜன்,
பரவாயில்லையே…..
நாம் துரை’யைப் பற்றி இவ்வளவு எழுதி இருக்கிறோமா.. 🙂 🙂
இவையெல்லாம் – எனக்கே நினவில் இல்லை…
நினைவுபடுத்தியதற்கு நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Indirectly you are support modi & eps
Praba,
நல்ல கண்டுபிடிப்பு….
கடந்த ஒரு வருடத்தில் எழுதப்பட்ட
விமரிசனம் இடுகைகள் அனைத்தையும்
உங்களுக்கு இதற்கான பரிசாக அளிக்கிறோம்.
அடுத்த கமெண்ட் போடும் முன்பாக படித்து,
உங்கள் “ஞானத்தை” வளர்த்துக் கொள்வீர்களாக…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
What is caught by Income Tax dept is only a tip of an iceberg.If you combine the wealth amassed
by DMK and its politicians it may turn into lakhs of crores, They are safely hidden in foreign countries. In india it has been invested in mega malls, theatres, wine breweries, iron and steel
factories in variois parts of the states in benami names, high rise buildings in IT corridors, engineering and medical colleges, farm houses in tamilnadu and karnataka, and latest but not the least rs 26000 crores in a petroleum refinery in Srilanka., which does not have even one car manufacturing unit. So all the looted amount from 2004 to 2014 has been safely invested..
தமிழ்மணி,
நீங்கள் சொல்வதனைத்தும் உண்மையே….
ஆனால், எதற்கும் ஆதாரம் கிடைக்காது…
விஞ்ஞானபூர்வமான ஊழல்களை இந்த நாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்த கட்சி…!!!
எதையும் நிரூபிக்க முடியாது…
அப்பீலில் போவதற்குள் மத்தியில் ஆட்சி மாறி விடும்…
புதிய ஆட்சியில் இவர்கள் பங்குதாரர்களாக இருப்பார்கள்…
(அந்த “புதிய ஆட்சி” – பாஜக கூட்டணி அரசாகவே இருந்தாலும் கூட…. 🙂 🙂 )
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்