பளிச்சென்று மின்னும் – மோடிஜி பிறந்த ஊர் (இது தேர்தல் காலம் -9 )



மெஹசேனா என்பது – குஜராத்தில் உள்ள
ஒரு பாராளுமன்ற தொகுதி…
இதில் உள்ள வட்நகர்
என்பது மோடிஜி பிறந்த ஊரின் பெயர்…..
பிள்ளைப்பிராயத்தில் அவர் டீ விற்ற கடை
இங்கு தான் இருக்கிறது.

ஸ்வச்ச பாரத் என்னும் தூய்மை இந்தியா திட்டத்தை –
நடைமுறைப்படுத்தியதன் மூலம் இந்தியா முழுவதும் எப்படி
பளிச்சென்று மாறி விட்டது என்பதை
அரசின் விளம்பரங்கள் காட்டுகின்றன.

ஆனால், உண்மை நிலை….?

மோடிஜி பிறந்த ஊரான -வட்நகர்,
ஸ்வச்ச பாரத்’தில் இன்று எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது
என்பதை இந்த காணொளி காட்டுகிறது….

ஒருவேளை இந்தக் காணொளி பொய் சொல்கிறதோ …?
அரசும், பாஜகவும் தான் – விளக்க வேண்டும்.

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to பளிச்சென்று மின்னும் – மோடிஜி பிறந்த ஊர் (இது தேர்தல் காலம் -9 )

  1. Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

    அமர்க்களம்.
    ஒரு பானை சோற்றுக்கு ஒரு ஸோரு உதாரணம்

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    உண்மைதான். இந்தியா ஸ்வட்ச் பாரத் ஆவதற்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளாகும். அதுவரை நாம், வெறும் வாயால், எங்கள் இந்தியா, மற்ற நாடுகளைவிட பெரியது என்று சொல்லிக்கவேண்டியதுதான். நம்மைவிட மிகச் சிறிய நாடுகளும் அழகாக இருக்கின்றன, மக்கள் நம்மைவிட சுத்தமாக இருக்கின்றார்கள். இந்தியர்கள்,, அவர்களுடைய மெண்டாலிட்டி, அவர்களைவிட மட்டம்தான்.

    வட இந்தியாவில் சுத்தம் என்பது மிக மிகக் குறைவு. எப்படிச் சுத்தமாக இருப்பது என்பதை அறிந்தவர்கள் 10% கூட இல்லை. தென்னிந்தியாவில் இது பரவாயில்லை என்றாலும், பொது இடங்கள் என்றால் அதை மோசமாக வைத்துக்கொள்ளவேண்டும், குப்பையை அடுத்தவன் காம்பவுண்டில் கொட்டணும், கண்ட இடத்தில் அசிங்கம் செய்யணும், போஸ்டர் ஒட்டி ஊரை நாறடிக்கணும் என்ற மனநிலை கொண்ட மக்கள்.

    இந்த மாதிரி நடந்துகொண்டால் உடனே தூக்குத் தண்டனை, அப்பீலே கிடையாது என்று சொன்னால், ஒரு வேளை நூறு ஆண்டுகளில் இந்தியா மாறலாம்.

    மக்கள் திருந்தாமல், அரசு எதையும் செய்துவிட முடியாது.

    • M SEKHAR's avatar M SEKHAR சொல்கிறார்:

      ஐயா, கொஞ்சம் கேளுங்க. போன வாரம் வைஷ்ணோ தேவி கோயில் சென்றேன். திரும்பி வரும் போது படிக்கட்டில் நடந்து திரும்பி வந்தோம். இரவு எட்டு மணி கிளம்பி பன்னிரண்டு மணி வந்து சேர்ந்தோம். வரும் வழியில் எவ்வளவு கழிப்பறைகள்,- எல்லாம் இலவசமே- மிகவும் சுத்தம். தமிழ் நாட்டில் நான் பயன் படுத்தி இருக்கும் சுமார் நூறு கட்டணக் கழிப்பறைகளில் கூட இல்லாத சுத்தம். அதே போல உஜ்ஜைனிலும், இந்தூரிலும் கண்டேன். பொத்தாம் பொதுவாக வட இந்தியாவில் என்று சொல்ல வேண்டாம். பல விஷயங்களில் தமிழகம் வட இந்தியாவிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! ” ஸ்வச்ச பாரத் ” …? பிரதமர் அவர்கள் கும்பமேளா நடந்த பகுதிகளை தூய்மையாக வைத்து இருந்ததை முன்னிட்டு அண்மையில் ஐந்த துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களைக் கழுவி, நன்றி கூறி அவர்களை கவுரவப்படுத்தினார்…. இந்த தருணத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் எனப் பின்னர் இது பற்றி டிவிட்டரில் செய்தி வெளியிட்டார்….. ! நல்ல செய்தி தான் ..!!

    மேலும் தூய்மை இந்தியா கனவை நிறைவேற்றுவது என்று வரும்போது துப்புரவுப் பணியாளர்கள் முன்னே நிற்பதாக அவர் கூறினார். இதில் கொஞ்சமாவது உண்மை இருந்திருந்தால் புகைப்படங்களில் — காணொளிகளில் –ஊடகங்களில் அந்த பணியாளர்களை தானே முன்னிறுத்தி இருக்க வேண்டும் .. ஆனால் . இந்தத் திட்டம் சக்தி படைத்தவர்களுக்கான புகைப்பட — காணொளி வாய்ப்பாக இருந்தது — இருக்கிறது என்பது ஏனோ ..?.

    தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்களாக, நடிகர்கள்– விளையாட்டு வீரர்கள் — மற்றும் அதிகாரிகள்தான் இருந்துள்ளனரே தவிர, துப்புரவுப் பணியாளர்கள் அல்ல….சில நேரங்களில் — இடங்களில் மாநில கவர்னர்களும் கூட
    இவர்கள் எல்லாம் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்ய நேரம் கிடைக்காத பிரபலங்கள். பொது இடங்களையும், கழிவுகளையும் மறந்தவர்கள்…என்பது தானே உண்மை ..?

    பிறந்த கிராமம் ஒரு பக்கம் –அடுத்து அவர் தத்து எடுத்த கிராமத்தின் நிலைபற்றி — இந்த தளத்தில் ஒரு இடுகை இருக்கிறது அதை அறிய :– https://vimarisanam.wordpress.com/2018/10/14/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%86/

  4. true_indian's avatar true_indian சொல்கிறார்:

    கடைசியில், பிஜேபி க்கு எதிராக இந்த தெரு சுத்தமில்லாமல் இருப்பது தான் கிடைத்ததா?
    பெரிய ஊழலாக இருந்தால் மக்களை பிஜேபி க்கு எதிராக குழப்பலாம்.குப்பையிலே பிறந்து, குப்பையிலே வளரும் நமது இந்திய சமுதாயம், இந்த ஊழலை புரிந்து கொள்ளுமா என்பது சந்தேகமே?
    நமது தளத்தின் வெளிநாட்டு வாசகர்கள் மட்டுமே, இந்த சுத்தமின்மையை மிகவும், பிஜேபி க்கு, எதிராக சீரியஸாக எடுத்து கொள்வார்கள்.ஆனால், பாவம் அவர்கள் நிச்சயம் இங்கு வந்து ஓட்டு போடுவார்களா?

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      விகடனின் கட்டுரையையும் பார்த்தேன் (எப்போதும்போல் அவங்க மோடி, பாஜக எதிர்ப்பு.. அந்தக் கட்சியா தொலைக்காட்சில சீரியல் ஒளிபரப்ப ஸ்லாட் கொடுக்கப் போகுது). எனக்குத் தோன்றுவது,

      ஒரு நல்ல திட்டம் அல்லது முனைப்பை முன்வைத்தால், அதை நிறைவேற்றும் அதிகாரிகள் செயின் நம்ம இந்தியாவுல எவ்வளவு மோசமா இருக்கு என்பதைத்தான் குற்றம் சொல்லணும். தண்ணீர் இல்லா வீடுகளில் அவங்க டாய்லெட் கட்டி, அரசாங்கத்துக்கு நம்பரை (ஸ்டாடிஸ்டிக்ச்) கொடுத்துடறாங்க. மற்றபடி இது சரியான இடங்களில் நிறைவேற்றப்பட்டிருந்தால் (குறைந்தது 50% இடங்களில் அப்படி இருக்கும்னு நினைக்கிறேன்) உபயோகமான திட்டம்தான்.

      ‘வெளிநாட்டு வாசகர் மட்டுமே’ – அப்படீல்லாம் நீங்க நினைக்கவேண்டாம். நானும் வெளிநாட்டில் இருந்தவந்தான். அங்கும் நம் மக்கள் கண்ட கண்ட இடங்களில் போஸ்டர் ஒட்டுவது, துப்புவது, ஆள் இல்லைனா பைப் அடிப்பது , பான் சாப்பிட்டுவிட்டு கண்ட இடங்களில் துப்புவது என்றுதான் இருக்கிறார்கள். (தமிழர்கள் பான் உபயோகிப்பது அபூர்வம்)

      • true_indian's avatar true_indian சொல்கிறார்:

        அய்யா, இது நல்ல திட்டமோ, அல்லது கேட்ட திட்டமோ?
        மோடி இதை ஆரம்பித்ததால் நிச்சயம் இது குற்றமே.
        இதையே வேறு ஏதாவது மத சார்பற்ற கட்சி தலைவர் ஆரம்பித்து வைத்தால், நிச்சயம் நாம் இதை வரவேற்றிருக்கலாம். இதை போலத்தான் யோகா வையும் பரப்ப திட்டமிட்டார். இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு துரோகம் செய்ததை நாம் மறக்க இயலாது.

  5. Jksmraja's avatar Jksmraja சொல்கிறார்:

    நான் ,சமீபத்தில் ஒரு நாயர் என்பவர் யூ டியூபில் பதிவேற்றம் செய்திருந்த வீடியோவை பார்த்தேன். அதில் அவர் சீனாவில் எப்படி சுத்தமாக வைத்திருக்கிறார்கள் ,அப்படி சுத்தமாக வைத்திருப்பதற்கு எந்தமாதிரியான எந்திரங்கள் பயன்படுத்துகிறார்கள், எவ்வளவு பணியாளர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை விளக்கிவிட்டு, இந்தியாவின் ஸ்வாட்ச் பாரதத்திற்கு வருகிறார்.

    எந்திரங்கள் எதுவும் வாங்காமல், பணியாளர்கள் எண்ணிக்கையை கூட்டாமல், சும்மா நான்கு நடிகர்களை வைத்து பெருக்குமாரால் பெருக்கிவிட்டு, ஸ்வாட்ச் பாரத் என்றால் எப்படி சுத்தமாகும் என்று கேட்கிறார் . இது எல்லாம் புரியாமல் சும்மா மக்கள்தான் திருந்தவேண்டும் என்று இன்னும் எவ்வளவு காலம்தான் ஏமாற்றிக்கொண்டு இருப்பீர்கள்.

    இந்த விளம்பரங்களை தவிர மோடி உருப்படியாக செய்ததுதான் என்ன ? புதியவன் சார் கொஞ்சம் சொல்லுங்களேன்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      2009-2014வரை எவ்வளவு ஊழல்கள் கேள்விப்பட்டீர்கள். இப்போது என்ன ஊழல் கேள்விப்படுகிறீர்கள்?
      2009-2014வரை ஆட்சியில் இருந்தவர்கள் எத்தனை பல்லாயிரம் கோடி பணம் சேர்த்தார்கள், புதிது புதிதாக கம்பெனி தொடங்கினார்கள் (ஆ.ராசா, கனிமொழி, கார்த்தி சிதம்பரம், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன்..லிஸ்ட் நீண்டுகொண்டே போகும்). அப்படி இந்த ஆட்சியில் யார் சேர்த்திருக்கிறார்கள்? பொன்.ரா அவர்கள் அமைச்சராக இருந்தார். அதையும் நினைவில் வைத்துச் சொல்லுங்கள்.

      என்னுடைய கணிப்பு, பல்வேறு விஷயங்களில் என் எதிர்பார்ப்பை பாஜக பூர்த்தி செய்யவில்லை, அவர்களும் அரசியல் கட்சியாகவே இருந்துவிட்டார்கள். (இந்தக் குறைகளைத் தொடர்ந்து நான் எழுதுவேன். நான் கட்சி ஆள் கிடையாது). ஆனால் நிச்சயமாக காங்கிரஸ், திமுகபோல், நாட்டை சூறையாடவில்லை. தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியோட பசங்க/தாய்/மனைவி/சகோதர சகோதரிகள் ‘அரசியல்வாதி’யின் பினாமியாக இருந்து பணம் சுருட்டாம இருக்காங்களா என்று உங்கள்டயே கேட்டுக்கோங்க. மோடி எப்படி இருக்கார்னு பாருங்க.

      மத விஷயங்களுக்குள் நான் செல்லப்போவதில்லை. அதை கா.மை சாரும் விரும்பமாட்டார்.

      சீனாவில் சுத்தமாக இருப்பதற்கு பெரிய காரணம் உண்டு (நகரங்கள், முக்கிய இடங்கள் என்று). அவர்கள் வேறு லெவல். இந்தியர்கள் இந்த விஷயத்தில் ரொம்பக் கீழ்தான். நான் தாய்வான் மக்களிடம் (ஸ்டூடண்ட்ஸ், வியாபாரிகள், பொதுவாக அந்த நாட்டவர்) கண்ட ‘சொந்த ஒழுக்கத்தை, நாட்டின் மீதான ஒழுக்கத்தை, பொது இடங்களை நம் எல்லோருக்கும் சொந்தம் என்று எண்ணும் மனநிலையை’, இந்தியாவில் எங்கும் கண்டதில்லை. பல வெளிநாடுகளில் நிறைய நாட்கள்/வாரங்கள் இருந்திருக்கிறேன். நீங்க சைனா என்று சொன்னதால் அதைக் குறிப்பிட்டேன். நிறைய உதாரணம் சொல்லலாம். எல்லாம் நான் பார்த்து, அனுபவித்தது. ஒரு கான்சர்ட். ஃப்ரெஞ்ச் மியூசிஷியன் நடத்தும் ஓபெரா. 1000 மக்களுக்கான அரங்கம். அதிபர் சாதாரண மக்கள் போல உள்ளே நுழைகிறார். அவருக்கு இரு புறமும் ஒரு சீட் வேகண்ட். நான் அவரிடமிருந்து சில வரிசைகள் தள்ளி குறுக்குவாட்டில் உட்கார்ந்திருக்கிறேன். மெயின்லேண்ட் சீனாவைப் பற்றியும் நிறைய எழுதலாம். We can not simply compare India with another country. We dont have self discipline. We dont follow, we dont respect rules. We dont simply obey our office holders. இந்தியர்களைத் திருத்த, பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும்.

      உங்களுக்குத் தெரியணும் என்பதற்காகச் சொல்கிறேன். சீனாவில் பாலம் வரணும், இந்த இடத்தில் அணை கட்டணும் என்றால், அதற்கு எதிர்ப்புக் குரல் வரவே முடியாது. மக்களை இடம் பெயர்த்து நாட்டுக்கு எது தேவையோ அதைச் செய்வார்கள். அதே சமயம் ஜப்பானில், மக்கள் கருத்துக்கு மதிப்பு உண்டு (உதாரணமா, ஒருவரின் இடத்தின்-கட்டிடத்தின் வழியாக ரயில் பாதை போடுவதற்கு, அந்த அரசாங்கம் என்ன செய்தது என்று படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள்). நம்ம ஊரில், ஒவ்வொரு சுப்பனும் குப்பனும்-for name sake I have written, நம் தலைவர்களைக் கேள்வி கேட்பார்கள், ஆதரவு எதிர்ப்பு என்று பிரிவார்கள். இது சைனாவில் கனவிலும் நடக்காது.

      (நான் உள்பட, ) டிக்கெட் குப்பையை, ரயிலில் சாப்பிட்டபின் குப்பையை அப்படியே வெளியே வீசியெறியத் தயங்காத கேவலமான குணம் கொண்டவர்கள் இந்தியர்கள். இந்தியாவும், சீனா மாதிரி வரவேண்டும் என்றால், நாம் சீனத் தலைவர்களைத்தான் ஆட்சிபுரியச் சொல்லவேண்டும். தேர்தல்கள் இருக்காது, பரவாயில்லை… நாடு முன்னேறும், மக்கள் மரியாதையாக ஒழுங்காக இருப்பார்கள். எனக்கு சைனாவின் ஆட்சி முறை மிகவும் பிடிக்கும். அடக்குமுறைதான்… ஆனால் அது பெட்டர்.

  6. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // நான் கழிப்பறைகளின் காவலாளி பிரதமர் மோடி பிரசாரத்தில் பேச்சு // https://www.dailythanthi.com/News/India/2019/04/01150848/I-m-chowkidar-of-toilets-PM-Modi-hits-campaign-trail.vpf ….. இனி யாரும் வாயை திறக்க முடியாது — மேட்டர் ஓவர் …?

  7. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    எல்லா கட்சிகளும் ஊழல் செய்யும் கட்சிகள். சரி, அது தெரிந்தது தான்.

    பாஜக… ம்…ம்…ம்…மூச்ச்…!

    2014 க்கு முன்பு பாருங்கள், எவ்வளவு ஊழல் கேள்வி பட்டோம். இப்போது…. அப்படி ஏதாவது இருக்கா….ம்..ம்…!

    இப்ப, இங்கு சொம்பு தூக்குபவர்கள் பதில் சொல்லட்டும்….

    “பாஜக அந்த கட்சியின் சொத்துக்கள் வருமானங்கள் மட்டும் 2014க்கு முன்பு எவ்ளோ இன்றைய தேதிக்கு எவ்ளோ என்று”.

    அமித்ஷா மகன், எடியூரப்பா, ஜனார்த்தன ரெட்டி, வியாபம் பற்றி எல்லாம் பிறகு பேசிக் கொள்வோம்.

  8. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    மோடிஜி மீதோ, பாஜக அரசு மீதோ –
    எதாவது குற்றம், குறை கண்டுபிடித்தால்,
    அதை ஆதாரபூர்வமாக கூறினால்,
    அதை அப்படியே திசை திருப்பி, அற்புதமாக
    மடை மாற்றுவதில், – experts – (திறமைசாலிகள்) –
    இருப்பதை இங்கு காண முடிகிறது.

    தங்கள் திறமை அனைத்தையும் பயன்படுத்தி,
    ஒரிஜினலாக இந்த இடுகை என்ன சொல்கிறது,
    வீடியோவில் காணும் பெண்கள் என்ன சொல்கிறார்கள் –
    என்பதை சுத்தமாக மறக்கடித்தாகி விட்டது.

    100 சதவீதம் டாய்லெட் திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது என்று
    குஜராத் அரசும், மத்திய அரசும் சர்டிபிகேட் கொடுத்து விட்ட
    ஒரு ஊரைத்தான் வீடியோவில் நாம் காண்கிறோம்.
    அதில் பேசும் பெண்கள், ஹிந்தியில் பேசினாலும், அதன் ஆங்கில
    மொழிபெயர்ப்பு – கூடவே சப்-டைட்டிலாக காட்டப்படுகிறது.

    வக்காலத்து வாங்குபவர்களுக்கு இந்த பெண்கள் கூறுவது
    சுலபமாகவே புரியும்… அத்தனை பெண்களும்,
    தாங்கள் டாய்லெட் இல்லாமல், திறந்த வெளியில் மலம்
    கழிக்கச் செல்வதால் படும் அவதிகளை கூறி வருந்துகிறார்கள்.

    2001 முதல் 2014 வரை கிட்டத்தட்ட 13 ஆண்டுகள்
    குஜராத்தின் முதலமைச்சராக இருந்த சாதனையாளர் ஒருவர்,
    தான் பிறந்து வளர்ந்த ஊரில் பெண்கள்
    படும் அவஸ்தையை பற்றி எந்தவித அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை
    என்பதை இந்த காணொளி உறுதி செய்யவில்லையா…?

    13 வருட ஆட்சியில் என்ன கிழிக்கப்பட்டது…?
    எக்கச்சக்கமான விளம்பரங்களுடன், படாடோபமாக,
    ஆண்டுதோறும் முதலாளிகள் மகாநாடு நடத்தப்பட்டதை தவிர…?

    அதன் பின் மீண்டும் ஏறக்குறைய 5 ஆண்டுகள் பிரதமராக
    காலத்தை கழித்து விட்ட, தன்னைத்தானே செயல் வீரர் என்றும்
    சொல்லிக் கொள்ளும் ஒருவர் –
    ஸ்வச்ச பாரத் என்னும் திட்டத்தை இந்தியா முழுவதும் நிறைவேற்றுவதாக
    இந்த நாட்டின் சர்வ அதிகாரமும் உடைய
    பிரதமராக உறுதி ஏற்றுக்கொண்ட ஒருவர்,

    அதற்காக பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவழித்த பின்பு,
    90 சதவீதத்திற்கு மேல் ஸ்வச்ச பாரத் திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது
    என்று பறைசாற்றிக் கொள்ளும் ஒரு அரசின் தலைமை நிர்வாகி –

    தன் சொந்த ஊரில் கூட இந்த திட்டம் மிகக்கேவலமான கதியில் இருக்கிறது
    என்பதை அறியாமல் போனது எந்த வித நிர்வாகத்தில் சேர்த்தி…?

    -இந்த விஷயத்தை மிகவும் சிரமப்பட்டு, திசை மாற்றியவர்கள் –
    தங்கள் மனசாட்சியை தொட்டு கொஞ்சம் யோசிக்க வேண்டும்…

    பளிச்சென்று தெரியும் குறைகளைக்கூட இப்படி மூடி மறைப்பதை –
    தாங்கள் இப்படிச் செய்வதை –
    தங்கள் மனசாட்சி ஏற்கிறதா என்று அவர்களே
    யோசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

    “வாய்ச் சொல்லில் வீரரடி ” என்று பாரதி சொன்னது
    இங்கு பொருந்தவில்லை என்றால் வேறு எங்கு பொருந்தும்…?

    – மிகுந்த மனவேதனையுடன்,
    காவிரிமைந்தன்

    • Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

      அய்யா …! இன்றைய ” கழிப்பறைகளின் காவலாளி ” என்பதை விட்டுவிட்டிர்களே …!

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      மனசாட்சியா….? இவர்களுக்கா….!? அவர்களுக்கு பயிர்சியே அது தானே. பொய் சொல்லு, நியாயம் பார்க்காதே, மனசாட்சியை கொன்று விடு…உன் கொண்டை வெளிப்பட்டு விடுதா… அப்படியே எதிர் தரப்பில் போய் நின்று கொண்டு நடுநிலை வேடம் போடு.

      இங்கு கூவும் ‘அவர்களை’ கவனித்து பாருங்கள்…எல்லாம் புரிய வரும்.

      என்னை நம்புங்க… நான் பாஜக காரன் இல்ல…! ஆனால், அவர்களை ஆதரித்து எழுதினால் நான் பாஜக காரனா என்ன…?

      என்னை நம்புங்க… நான் மோடி பக்தன் இல்லை…! ஆனால், அவரை குறை சொல்லி எழுதினால் பாய்ந்தோடி வருவேன். அதற்காக நான் பக்தனா என்ன?

      என்னை நம்புங்கள்…நான் அப்போதைக்கு அப்போது பாஜகவை மோடியை குறை சொல்லி எழுதுறேனே. என்னை ஏன் யாரும் நம்பமாட்டேன் என்கிறீர்கள்…!

      சொல்லுவார்கள் பெரியவர்கள்….

      ‘நாய் பொலைக்கும் இந்த பொலப்பு’

  9. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    பா ஜ க ஆட்சியில் ஊழல் என்பது இல்லை .
    ஒரு ஊழலைக் காட்டுங்கள் என கேள்வி கேட்கிறார்கள் .

    சாம்பிள் கேள்வி :
    ஸ்வச்ச இந்தியா என்று எவ்வளவு பணம் செலவானது ?
    உண்மையில் எதுவும் மாறியிருக்கிறதா ,
    இல்லை வெறும் பேப்பரில்தானா ?

    அப்புறம் கங்கை சுத்தம் ஆயிற்றா ? அதற்கு எவ்வளவு செலவு ?

    மேக் இன் இந்தியா – என்ன நடந்தது ?

    இப்ப இந்தியர்கள் திருந்த மாட்டார்கள் , திருத்தவும் முடியாது .
    ஏனேனில் ஊழல் காங்கிரஸ் நாட்டை குட்டி சுவர் ஆக்கி விட்டது .
    அதனால் மோதி இன்னும் ஐந்து வருடம் ஆட்சி புரியணும்
    என்ற பதில் வரலாம் .

  10. Jksmraja's avatar Jksmraja சொல்கிறார்:

    முகமது பின் துக்ளக் திரை படத்தில் சோ அவர்கள் ஒரு வசனம் வைத்திருப்பார். அதாவது எது எல்லாம் சட்ட விரோதம் என்று கருதுகிறோமோ அதை எல்லாம் சட்ட பூர்வமாக மாற்றிவிட்டால் நாம் எல்லாரும் யோக்கியமானவர்களாகிவிடுஓம் என்பார்.

    அதே மாதிரி சட்ட விரோதமானவற்றை சட்ட பூர்வமாக மாற்றியபின் எப்படி அது ஊழல் கணக்கில் வரும். எனக்கு தெரிந்து பரபரப்பாக பேசப்பட்ட ஊழல் வழக்குகள் நான்கு.

    1 போபோர்ஸ் ஊழல்
    2 2g ஊழல்
    3 நிலக்கரி சுரங்க ஊழல்
    4 ஆசியாட் ஊழல்

    இதில் போபோர்ஸ் ஊழல் குற்றசாட்டு என்ன ?பாதுகாப்பு துரையின் விதிகளை மீறி புரோக்கர் வைத்து 3 சதவிகிதம் கமிசன் வாங்கியது.

    பி ஜே பி இந்த விதியை சட்ட பூர்வமாக பாதுகாப்பு துறையில் ஆயுதம் கொள்முதல் செய்யும்போது ஒரே ஒரு புரோக்கரை வைத்துக்கொண்டு அவருக்கு 3 சதவிகிதம்வரை கமிஷன் கொடுக்கலாம் என்று மாற்றிவிட்டது.

    2g ஊழல் குற்றசாட்டு என்ன?
    முதலில் வந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டு அவர்கள் அதிக விலைக்கு விற்க வழிவகை செய்தது. பி ஜே பி என்ன செய்தது ?அதே மாதிரி முதலில் வந்தவர்களுக்கே ஒதுக்கி விட்டு அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் விற்று கொள்ளலாம் என்று விதியை மாற்றியது.

    நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் அதே மாதிரி முதலில் ஏலம் எடுத்தவர் யாருக்கு வேண்டுமாலாலும் விற்று கொள்ளலாம் என்று விதியை மாற்றியது.

    அடுத்து ஆசியாட் . அதே மாதிரி ஒரு ஈவென்ட் நடக்கவில்லை . நடந்திருந்தால் கண்டிப்பாக அதிலும் விதியை மாற்றி கமிஷனை சட்ட பூர்வமாக மாற்றியிருப்பார்கள்.

  11. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    டாய்லெட் வசதி இன்மை, குடிநீர் வசதி இன்மை போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்ற துப்பில்லாத எந்த அரசும் பதவியில் இருக்க லாயக்கில்லாதவை. நம் மக்களிடம் பொது சொத்தை பேணிக்காக்கும் பண்பு இல்லை என்பது உண்மைதான். அது எப்போது வரும் என்றால் உணர்வு பூர்வமாக இது என் நாடு. என் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நாடு. இதை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டியது என் கடமை. என்ற உணர்வு வரும்போது. அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், வெறும் விளம்பர வாசகங்களை வைத்து நாட்டுப்பற்றை வரவழைக்க முடியாது. அப்படி வராதபோது அவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்று குற்றம் சாட்டுவது இன்னும் கொடுமை!

    நாம் போகவேண்டிய தூரம் நிறைய! விளம்பரங்களை வைத்து வித்தை காட்ட நினைக்கும் பிஜேபியை தண்டிக்க வேண்டும்.

    ஆனாலும், இதற்கு மாற்று என்று யாரும் உருப்படியாக இல்லை. ஒரு பக்கம் விளம்பரத்துக்காவது நல்ல அரசு என்று காட்ட முனையும் கட்சி. இன்னொரு பக்கம், நாம் ஆட்சி செய்வதே மக்களுக்கு நாம் செய்யும் உதவி. அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்னும் கோமாளி போட்டுக் கொள்வது போல பல வண்ணக் கலவையான கூட்டணி. அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவைகள். எல்லா தேவையையும் பூர்த்தி செய்தால் தான் ஆட்சி நடத்த முடியும். (கனிமொழி – நீரா ராடியா பேரங்கள்) அதற்கப்புறம் மக்களுக்கு என்ன பண்ணமுடியும்?

    அதனால் தான் நல்லது பண்ண வாய்ப்புள்ள கட்சியாக பி ஜெ பி யை பார்க்கிறேன். விளம்பரங்களில் எவ்வளவு நாட்கள் ஓட்ட முடியும் ? நடு நடுவில் கொஞ்சமாவது நல்லது பண்ணித்தான் ஆகவேண்டியிருக்கும்!

  12. Mani's avatar Mani சொல்கிறார்:

    // நான் கழிப்பறைகளின் காவலனாக (சவுகிதார்) இருப்பதில் பெருமைப்படுகிறேன், இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்களின் கவுரவத்தை நான் பாதுகாக்கிறேன் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்.//

    இடுகையில் உள்ள மேற்கண்ட வீடியோவை மேற்படியார் பார்த்திருக்க மாட்டாரா ?
    அதற்கப்புறமும் கூடவா இந்த “பெருமிதம்” ?

  13. Mercy Sharron's avatar Mercy Sharron சொல்கிறார்:

    KM Sir please read this and tell us who is behind this scam.One is exposed and the other one is hidden. Why?
    https://minnambalam.com/k/2019/04/02/23

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Mercy Sharron,

      வருமான வரித்துறை விதிகளின்படி, நடத்தப்படும் ரெய்டுகளின் ரிசல்ட் பற்றி அவர்கள் அதிகாரபூர்வமாக எந்த செய்தியையும் வெளியிடக்கூடாது.
      யாருக்கும் பேட்டியளிக்கவும் கூடாது… இருந்தாலும், ஆளும் கட்சியின் நலனைக்கருத்தில் கொண்டு அதிகாரபூர்வமாக அல்லாமல் சில விவரங்கள் மட்டும் “லீக்” செய்யப்படும்….
      அதாவது கசிய விடப்படும்…!!!

      இந்த பின்னணியை பயன்படுத்திக் கொண்டு, சில செய்தி நிறுவனங்களும், தங்களுக்கு ஏற்றாற்போல், அவற்றை திரித்து வெளியிடும். இதில் உண்மை கலந்த பொய்யும் உண்டு.
      பொய் கலந்த உண்மையும் உண்டு. கலப்படமில்லாத உண்மை என்பதே கிடையாது என்பதே உண்மை…!!!

      எனவே, இந்த செய்திகளை எல்லாம் வைத்துக்கொண்டு, நாம் ஏதோ தோராயமாக யூகித்துக் கொள்ளலாமே தவிர, சரியான உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்ள
      வாய்ப்பே இல்லை. இந்த ரெய்டில் கிடைக்கும் ஆவணங்களை எல்லாம் ஆராய்ந்து இறுதியாக எதாவது வரி, பெனால்டி என்று எதாவது விதித்தார்கள் என்றால் –
      அப்போது மட்டும் அதிகாரபூர்வமாக செய்தி வெளியிடப்படும்.

      இந்த செய்திகள் எல்லாமே பெரும்பாலும் – “அவ்வப்போது ஆளும்” கட்சிகளுக்கு சாதகமாகவே இருக்கும்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        இதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் கா.மை. சார்… எத்தனை ரெய்டுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் படித்திருக்கிறேன். எல்லாம் அன்றைய செய்தியோடு ஓவர். அது 2000 ரூபாய் நோட்டுக்கள் பிடிபட்டதாகட்டும், ஜெகத்ரட்சகன் மற்றும் பல அரசியல்வாதிகளின் வீடுகளில் நடந்த ரெய்டுகளாகட்டும்…தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது கண்டுபிடிக்கப்பட்ட பண்டல்களாகட்டும். நிச்சயமாக நான் ஒரு ரிசல்டும் பார்க்கவில்லை, கேள்விப்படவில்லை.

        ரெய்டு நடத்தும்போது செய்தி கொடுக்கிறவர்கள், முடிவில் என்ன நடந்தது என்று வெளிப்படையாகத் தெரிவிக்காததன் மர்மம் என்ன? இதில் பாஜக எனக்கு மிகவும் ஏமாற்றம் தந்திருக்கிறது.

        • true_indian's avatar true_indian சொல்கிறார்:

          அய்யா,
          ஒரு வேலை பிஜேபி யின் ஆட்சியில் யாரவது தண்டிக்க பட்டார்கள் என்றால், நாம் உடனடியாக பிஜேபி அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செயகிறது என்று அலறுவோமே? உதாரணமாக கல்கத்தாவில் காவல் துறை உயரதிகாரி விசாரணைக்கு அழைக்க பட்டதற்க்கே, நாம் பிஜேபியின் அதிகார துஷ்ப்ரயோகம் என்று கூவ வில்லையா? இந்த லட்சணத்தில் அவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றப்பத்திரிக்கை வேறு வெட்கமில்லாமல் வாசிக்கிறோம்.

          • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

            நான் இதை ஏத்துக்கலை டுரூ-இண்டியன். டி மானிடைசேஷன்போது, நமக்கு பணமே இல்லை. ஒரு நாளைக்கு 2000 ரூ நோட்டு ஒன்றுதான் வந்தது. அதை சில்லறையா மாத்தறதுக்கு நானும் மிக சிரமப்பட்டேன். இங்க சுற்றுலாவுக்கு வந்தவன், ஒரு நாளைக்கு 2000க்கு மேல செலவழிக்க காசு இல்லை, மயிலாப்பூர் ஹோட்டல்ல நாங்க சாப்பிட்டுட்டு 1/2 மணி நேரம் 2000 ரூபாயை மாற்றக் காத்துக்கொண்டிருந்தோம். (இந்த அனுபவத்துல அடுத்த மாதத்தில் திரும்பவும் சென்னை வந்தபோது எங்க ஊர்லேர்ந்தே தேவையான இந்தியன் கரன்சி எடுத்துக்கிட்டு வந்தேன்). டிமானிடைசேஷனை ஒரு முயற்சியாத்தான் பார்க்கிறேன். நல்ல எண்ணம் என்றுதான் நான் எடுத்துக்கறேன் (Done out of good intention). ie சந்தேகத்தின் பலன் மத்திய அரசுக்கு.

            அந்தச் சமயத்துல, திருச்சி/சேலத்துல பாஜக பிரமுகர் ஒரு சில கோடிகளுக்கு 2000 ரூ நோட்டோட பிடிபட்டார். பெங்களூர் அமைச்சர் ஒருவர் ஏதோ ஒரு பண்டிகைக்கு 2000 நோட்டு (10 கோடிக்கும் இருக்கலாம்) அடுக்கி வழிபட்ட படம் கிடைத்தது. சாமானியனுக்கு காசே கிடைக்கலை. ஆனா இவங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு நோட்டு.

            மத்த கட்சிக்காரனைப் பிடித்தால் எல்லோரும் லபோ திபோன்னு கத்துவாங்க, சரி…ஒத்துக்கறேன். இந்த இரண்டு பேர்மேல என்ன வழக்கு போட்டாங்க, என்ன தண்டனை கொடுத்தாங்க? 2000 நோட்டு மாடலை வெளியிட்ட நாசிக் அலுவலக ஊழியரை பிடிச்சாங்களா, தண்டிச்சாங்களா?

            நான் இன்னும் அதிக உதாரணங்கள் கொடுக்கலாம். (எனக்குப் பிடித்த கட்சி செய்த தவறுகளுக்கும் இந்த விஷயத்துல பாஜக உடந்தையா இருந்தாங்க. அதை இப்போ சொல்ல விரும்பலை. தவறு தவறுதான்).

          • அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

            //இந்த லட்சணத்தில் அவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றப்பத்திரிக்கை வேறு வெட்கமில்லாமல் வாசிக்கிறோம்.//

            உளறல். மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது
            முட்டாள்தனம். எதை எதனுடன் ஒப்பிடுவது?

          • true_indian's avatar true_indian சொல்கிறார்:

            அய்யா,
            அரசியலை பொறுத்த வரை, ஒரு கட்சியை சேர்ந்த ஊழல் வாதி நிச்சயம் இன்னொரு கட்சியை சேர்ந்த ஊழல் வாதியால் தான் தண்டிக்கப்படுவான்.நாம் இதில் சட்டத்தை நம்பி பயனில்லை.ஏதோ ஒரு ஊழல் வாதி தண்டிக்க படுகின்றன என்று மட்டுமே பார்க்க வேண்டும். ஏன் அவர்கள் ஆளும் கட்சியை சார்ந்த ஊழல் வாதிகளை தண்டிக்க படுவதில்லை என்று கேள்வி கேட்ப்பது எதிர் கட்சி ஊழல்வாதிகளுக்கு சாதகமாக மட்டுமே முடியும்.
            ஒருவேளை நீங்கள் பிஜேபியை சார்ந்த ஊழல் வாதிகள் தண்டிக்க படவேண்டும் என்று விரும்பினால், அது காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் பொழுது நிச்சயம் நடக்கும். ஆனால் அப்பொழுது மறுபடியும் நாம் நீதி மான் களாக மாறி, ஏன் காங்கிரஸ் தனது கட்சியை சார்ந்த ஊழல்வாதிகளை விட்டு விட்டு எதிர் கட்சியினர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கிறது என்று கேட்காமல் இருந்தால் சரி .இந்த தப்பை தான் நாம், மம்தா பானர்ஜி மீதான ஊழல் நடவடிக்கை களிலும் , வதோ தாரா ப்ரியங்கா காந்தி ஊழல் நடவடிக்கை களிலும் , கார்த்திக் சிதம்பரம் மீதான ஊழல் நடவடிக்கை களிலும் தொடந்து நாம் செய்து கொண்டு வருகிறோம். பிஜேபி இவர்கள் மீதான நடவடிக்கைகள் ஒரு தலை பட்சமானது என்று நாம் கூவி கொண்டு, அந்த ஊழல்வாதிகளுக்கு சாதகமாக உதவி செய்து கொண்டு இருக்கிறோம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.