…
…
கீழேயுள்ள புகைப்படத்தை பாருங்கள்…
மெனக்கெட்டு புகைப்படமும், வீடியோவும் எடுத்து மீடியாவுக்கு
அனுப்பி வெளியிட்டிருக்கிறார்கள்.
அதாவது – செய்வதனைத்தும், முறைப்படி,
பொதுச்செயலாளரின் ஒப்புதல் பெற்றே செய்யப்படுகின்றதாம்.
பொதுச் செயலாளர் இருக்கும் நிலையை பாருங்கள்..
பட்டியலை படித்துப் பார்த்து ஒப்புதல் கொடுக்கும் நிலையிலா
இருக்கிறார் அவர்…
அவர் பார்வை எந்தப் பக்கம் இருக்கிறது –
இவர் பட்டியலை எந்த இடத்திலிருந்து காட்டுகிறார்…?
போட்டோ ஷூட் எடுத்தவர்கள் இதைக்கூட யோசிக்கவில்லையா…?
பொதுச்செயலாளர் உடல்நலக்குறைவு காரணமாக கூட்டத்திற்கு
வர இயலவில்லை. தலைவரும் செயலாளரும் கலந்து பேசிய பின்,
பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று ஒரு அறிக்கை
வெளியிட்டிருந்தால் போதாதா…?
மனசாட்சி இருப்பவர்கள் இப்படி போட்டோ-ஷூட் நடத்துவார்களா …?
இந்த சூழ்நிலையில் இவர்களுக்கெல்லாம் முகத்தில் சிரிப்பு எப்படி வருகிறது…?..
….

….
.
————————————————————————————————-



மனசாட்சியாவது மண்ணாங்கட்டியாவது. என்ன சார் இத்தனை அனுபவம் உள்ள நீங்கள் இதையெல்லாம் இவர்களிடம் எதிர்பார்க்கலாமா ?
போட்டோவில், ஸ்டாலினின் கைகளை பாருங்கள். ஒரு கையால் ஃபைலை பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் அதன் மறைவில், பேராசிரியரின் கையில் திணித்து, பேராசிரியர் தான் ஃபைலை பிடித்துக் கொண்டிருக்கிறாப்போல தோற்றத்தை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் பாவம் பேராசிரியரின் பார்வை எங்கோ இருக்கிறது. அதை இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
போட்டோவில் யார் யார் தெரிய வேண்டும் என்பதைக் கூட முன்னரே முடிவு செய்திருக்கிறார்கள். அந்தப்பக்கம், அடுத்த வாரிசு நிதி நின்று கொண்டிருக்கிறார் பாருங்கள்.
எத்தனை வெத்துப் பேப்பர்களில் ஏற்கெனவே கையெழுத்து வாங்கப்பட்டிருக்கிறதோ ?
//எத்தனை வெத்துப் பேப்பர்களில் ஏற்கெனவே கையெழுத்து வாங்கப்பட்டிருக்கிறதோ ?// – கோபாலபுரம் வீடு யாருக்குப் போகப்போகுது என்பதை வைத்து நாம் பிற்காலத்தில் இதைப்பற்றி ஒரு அனுமானத்துக்கு வரலாம்.
புதியவன்,
// கோபாலபுரம் வீடு யாருக்குப் போகப்போகுது என்பதை வைத்து நாம் பிற்காலத்தில் இதைப்பற்றி ஒரு அனுமானத்துக்கு வரலாம்.//
கோபாலபுரம் வீடு, திருமதி தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு ஆஸ்பத்திரிக்கு என்று எழுதி வைத்திருப்பதாகத்தான் என் நினைவு சொல்கிறது…
உங்களுக்கு வேறு எதாவது தெரியுமா…?
வாழ்த்துகளுடன்,
-காவிரிமைந்தன்
கருணாநிதி கடைசி இரண்டு வருடங்கள் தற்போது அன்பழகன் இருக்கும் நிலையில்தான் இருந்தார். ஸ்டாலினுக்கு கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டை விட்டுவிட மனம் வருமா? கருணாநிதியோ இல்லை தயாளு அம்மாளோ கடைசி நேரத்தில் வேறு மாதிரி எழுதி கையெழுத்து (?) போட்டிருப்பார்கள் என்ற செய்தி வரலாம். காத்திருப்போம்.
KM Sir please read this
அய்யா … ! இந்த பாழாய்ப்போன மனது — ” ஜெயகாந்தனையும் – வைரமுத்துவையும் ” இந்த நேரத்தில் நினைவுக்கு கொண்டு வந்து பாடாய் படுத்துது — அதில் வைரமுத்து மட்டுமே — ஆனால் இங்கே பழம் பெருச்சாளிகள் மற்றும் வாரிசு ..! அதிலும் திணிக்கப்பட்டது — இதிலும் திணிக்க படுகிறது — திருந்தாத ஜென்மங்கள் …?
செல்வராஜன் சார்… எனக்கு உடனே நினைவுக்கு வந்தது உங்களுக்கும் வந்திருக்கிறதே…
That man anbalagan is not at all conscious and he seems to be ill seriously but stalin thrusts
the file before him as if he endorses his selections of candidates. Most of the candidates
he has picked are multi billioners ,and wards of senior leaders like ponmudi ,duraimurugan, arcot veerasamy and tainted and corrupt persons like A raja, kanimozhi T R balu and dayanithimaran.
I doubt whether Cong and DMK will give good governance with same old bandicoots still at the helm of affairs, God save Tamilnadu and India.
பிராண வாயு குழாய் ஸ்டாலின் பக்கமாக போகிறதே? ஏறி மிதித்துக்கொண்டு நிற்கிறாரோ, கையெழுத்து வாங்கியதும் விட்டுவிடுகிறேன் என்பது போல
அய்யா ..! ஒரு செய்தி …. வெறும் 16 வயதான அந்த சிறுமி, உலக அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா?// உலகை உலுக்கும் சிறுமியின் குரல்! // https://minnambalam.com/k/2019/03/18/38
// ஒரு சிறிய குழு தொடர்ந்து கணக்கிலடங்காத பணம் ஈட்டுவதற்காக நமது ஒட்டுமொத்த நாகரிகமும் தியாகம் செய்யப்படுகிறது. என் நாட்டில் இருக்கும் பணக்காரர்களைப் போன்றவர்கள் சொகுசாக வாழ்வதற்காக நமது உயிர்கோளாம் தியாகம் செய்யப்படுகிறது. இந்தச் சிறிய குழுவின் சொகுசிற்காக ஒட்டுமொத்த சமூகமும் துன்பப்படுகிறது. இந்நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்காதவரை, எதிர்காலத்திற்கான நம்பிக்கை நம்மிடம் இல்லை…..
நீங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எது நம்மைப் படுகுழியில் தள்ளியதோ அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உடனடியாக இந்த ‘வளர்ச்சி’ வேலைகளை நிறுத்துவதே அறிவார்ந்த செயல் என்று தெரிந்தும் நீங்கள் அதைச் செய்யவில்லை. இந்தக் கட்டமைப்பிற்குள் தீர்வைக் காண்பது இயலாத காரியமென்றால், நாம் இந்தக் கட்டமைப்பையே மாற்ற வேண்டும். ….
‘வளர்ச்சியும் வேண்டாம், முன்னேற்றமும் வேண்டாம். வாழ்வதற்கு இந்த பூமியை விட்டுவைத்தால்போதும்’ என்கின்றனர் வருங்காலத் தலைமுறையினர்.//
இந்த செய்தியில் அந்த சிறுமி கேட்கின்ற — சொல்கின்ற வார்த்தைகள் — சாட்டையடி — ! இதை பார்த்தாவது திருந்துவார்களா .. ? இதில் அணைத்து நாடுகளும் அடக்கம் தானே …?
செல்வராஜன்,
இதில் முதல் எதிரி அமெரிக்கா தான் …
எந்த வழிக்கும் வராமல், பிரபஞ்சத்தையே நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறது.
இந்த விஷயத்தில் – முதலில் அமெரிக்கர்களின் மனசாட்சி தான் பேச வேண்டும்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்