“வறுத்தெடுப்பு”, “சொல்வதெல்லாம் பொய்”….!!!


” உண்மையா, பொய்யா, மிகைப்படுத்தலா – இந்த கருத்துகள் நமக்கு
ஏற்புடையவையா – இல்லையா – ”

– என்கிற விவரமான அலசல்களுக்கு உள்ளே போகாமல்,
தேர்தல் நேரத்தில் வெளிவரும் (சில…..) சுவாரஸ்யமான / முக்கியமான
செய்திகளை மட்டும் இங்கே தருகிறேன்….தங்கள் தங்கள் பணிகளில் -மிகவும் ‘பிசி’யாக இருக்கும் நமது வாசக நண்பர்கள், “சுவாரஸ்யமான விஷயங்களை தவற விட்டு விடப்போகிறார்களே” – என்கிற “உண்மையான அக்கறை”
மட்டுமே இதன் நோக்கமாகும்…!!!

இங்கே தரப்படுவது
செய்தித்தளங்களில் வெளிவரும் செய்திகள் மட்டுமே…
என்னுடைய விமரிசனம் அல்ல…

எனவே – அதன் தரத்துக்கும், உண்மைத்தன்மைக்கும்
நாம் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டோம் …எந்த செய்தித்தளத்தில் அந்த செய்தி வெளியாகி இருக்கிறது என்பதைப் பொறுத்து, மற்ற விஷயங்களை வாசக நண்பர்களே யூகித்துக் கொள்ள வேண்டியது தான். ( அசிங்கமான, ஆபாசமான செய்திகள் நிச்சயமாக இங்கே வெளியாகாது என்பதை மட்டும் நான் உறுதி செய்கிறேன்…! )

” இது தேர்தல் காலம்…!!” – என்கிற தலைப்புடன் இந்த செய்திகள் வெளிவரும்.

…….

இதன் துவக்கமாக –
இன்றைய தினமலர் நாளிதழின் முதல் பக்க
தலைப்புச் செய்தி கீழே –
———————————————————————————

பிரதமர், மோடியை, காங்., – ராகுல்,வறுத்தெடுப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தில் நேற்று, ‘விஷால் பரிவர்த்தன் யாத்திரா’ எனப்படும், மிகப் பெரிய மாறுதலுக்கான யாத்திரை என்ற பெயரில்,காங்கிரஸ் தலைவர், ராகுல், பிரசார பேரணி நடத்தினார்.

இந்த யாத்திரை மற்றும் தேர்தல் பிரசார கூட்டங்களில், பிரதமர் மோடியை பல்வேறுகேள்விகள் கேட்டு, அவர் வறுத்தெடுத்துள்ளார்.

”மோடி சொல்வதெல்லாம் பொய்,” என, ராகுல் விளாசியுள்ளதற்கு,
பதிலளிக்க வேண்டியகட்டாயத்தில், பா.ஜ., உள்ளது.

லோக்சபாவுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதில், ஐந்து
தொகுதிகள் உள்ள உத்தரண்ட், ஏப்., 11ல் தேர்தலை சந்திக்க உள்ளது.இந்த
மாநிலத்தில் நேற்று நடந்த பேரணி மற்றும் பிரசார கூட்டங்களில், காங்., தலைவர், ராகுல் பேசினார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 பேர் உயிரிழந்தனர்.

அதன் பின், பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள, பயங்கரவாத முகாம் மீது, நம் விமானப் படைகள் தாக்குதல் நடத்தின.இது போன்ற நடவடிக்கைகளால், உத்தரகண்ட் மாநிலத்தில், பா.ஜ.,வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இங்கு தேர்தல் பிரசாரம் செய்து வரும் ராகுல், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளில், உத்தரகண்ட் மக்களின் பங்களிப்பை பாராட்டினார்.

மாநிலத்தில் நடந்தகூட்டங்களில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த அவர், உத்தரகண்ட் மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பாக விரிவாக பேசினார்.

போஸ் கொடுத்தார்

”புல்வாமா தாக்குதல் நடந்தபோது, நாடே சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்தது. ஆனால், ‘நேஷனல் ஜியாக்ரபிக், ‘டிவி’ சேனல்’ நிகழ்ச்சிக்காக,
உத்தரகண்டின் நைனிடாலில் உள்ள புலிகள் சரணாலயத்தில், பிரதமர் மோடி, கேமராவுக்கு போஸ் கொடுத்தார்,” என, ராகுல் கூறினார்

.’ரபேல்’ ஒப்பந்தம்

பிரான்ஸ் நாட்டிடமிருந்து, விமானப் படைக்கு, ‘ரபேல்’ ரக போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து, இந்த கூட்டங்களில்,

மோடிக்கு எதிராக, ராகுல் மீண்டும் குற்றஞ்சாட்டினார்.தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் கிடைக்கவே, இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அவர் விளாசினார்.

அதிக தொகை

”ரபேல் போர் விமானங்களுக்கு, முந்தைய,காங்., தலைமையிலான, ஐ.மு.,
கூட்டணி அரசு, 500 கோடி ரூபாய் விலை நிர்ணயித்தது. ஆனால், மோடி அரசு, 1,600 கோடி ரூபாய்க்கு அந்த விலையை உயர்த்தியது,” என, ராகுல்
குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தின்போது, பா.ஜ.,வைச் சேர்ந்த, உத்தரகண்ட்
முன்னாள் முதல்வர், பி.சி.கந்துாரியின் மகன், மனிஷ் கந்துாரி, ராகுல்
முன்னிலையில், காங்கிரசில் இணைந்தார்.

எல்லாம் பொய்

”கந்துாரியின் மகன், காங்.,கில் சேர்ந்தது ஏன் என, பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு குறித்துகேள்வி எழுப்பியதால், பார்லிமென்ட் நிலைக்குழுவில் இருந்து, கந்துாரி நீக்கப்பட்டார்.

”பா.ஜ.,வில், உண்மைக்கு எப்போதும் இடம் இல்லை. மோடி சொல்வ
தெல்லாம் பொய்,” என, ராகுல் கடுமையாக சாடினார். ”ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புகளை அமல்படுத்தி, மக்களை வாட்டி எடுத்ததற்காக, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்,” என, அவர் வலியுறுத்தினார்.

15 லட்சம் ரூபாய் எங்கே?

கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, இளைஞர்களுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள், அனைவருடைய வங்கிக் கணக்கில், 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் போன்ற வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை என்றும், ராகுல் கூறினார்.

ராகுலின் இத்தகைய பேச்சுகள்,
உத்தரகண்ட் மாநில மக்களை
வெகுவாகக் கவர்ந்தன.

ஏற்கனவே, நம் மாநிலத்தில், ஒரு கல்லுாரி விழாவில், ராகுல் பேசிய
பேச்சுக்கு, பலத்த வரவேற்பு கிடைத்தது.

நேற்று, உத்தரகண்ட் மாநில மக்களும், ராகுலின் பேச்சை ரசித்தனர்.இந்த
இரு மாநிலங்களிலுமே, ராகுல், பா.ஜ.,வை, மிகக் கடுமையாக சாடினார்.
அவருடைய பேச்சு, இதே போல் தொடர்ந்தால், லோக்சபா தேர்தலில்,
பா.ஜ., பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். எனவே, ராகுல்
பேச்சுக்கு, தக்க பதிலடி கொடுக்கும் நிர்ப்பந்தத்துக்கு, பா.ஜ., தள்ளப்பட்டுள்ளது.
– நமது சிறப்பு நிருபர் –

நன்றி – https://www.dinamalar.com/news_detail.asp?id=2234755

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to “வறுத்தெடுப்பு”, “சொல்வதெல்லாம் பொய்”….!!!

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    // தங்கள் தங்கள் பணிகளில் -மிகவும் ‘பிசி’யாக இருக்கும் நமது வாசக நண்பர்கள், “சுவாரஸ்யமான விஷயங்களை தவற விட்டு விடப்போகிறார்களே” – என்கிற “உண்மையான அக்கறை”
    மட்டுமே இதன் நோக்கமாகும்…!!! //

    உங்கள் நோக்கம் போற்றுதற்குரியது 🙂 🙂

    இன்னுமொரு புதிய முயற்சி – வாழ்த்தி வரவேற்கிறோம்.

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    பாஜக பதில் என்கின்ற பெயரில் எதையாவது உளரித்தான் வைக்கும். இல்லை பொய்யை அவிழ்த்து விடும்.

    ஆமாம்… கொஞ்ச நாள் முன்னாடி ரஃபேல் சம்பந்தமாக ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என்று ராகுல் விட்ட சவால் ஞாபகம் இருக்கா…?

    எதிர் கொள்ள முடியுமால் 56″ மார்பு சுருங்கி கிடப்பதை பார்க்க நமக்கே பொறுக்கல… பாஜக காரர்கள் எப்படி தான் தாங்கிக் கொண்டு இருக்கிறார்களோ…!

    இன்னும், ராகுல் காந்தி நன்கு திட்டமிட்டு தனக்கு, காங்கிரசுக்கு நல்ல ஆதரவு உள்ள மாநிலங்களா பார்த்து இந்த மாதிரி மக்களிடம் பெறும் வரவேற்பை அடையும் விதத்தில் பிரச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும்.

    இந்த வரவேற்பை பரவலாக தனக்கு ஆதரவு இல்லாத மாநிலங்களில் கூட மக்கள் அறியும் போது அவர்களும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

    போட்டி கடுமையாக இருக்கும் போல் தான் தெரிகிறது இப்போதைக்கு. நாள் ஆக ஆக காங்கிரஸின் ‘கை’ ஓங்க வாய்ப்பு இருக்கிறது.

    வெகு பிரமாதமாக திட்டமிட்டு களத்தில் இறங்கி வேலை செய்யுங்கள் அய்யன்மாரே….!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.