…
…

…
அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் மோசடிப்பேர்வழிகள்
என்பது இந்திய ஜனநாயகத்தில், ஒருவகையில் மக்களால்
ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட (?) உண்மை…!
மக்களுக்கு தெரியாமல் செய்யப்படும் மோசடிகள் ஒருவகை என்றால் – தெரிந்தே, சட்டபூர்வமாக ஏமாற்றுவது மற்றொரு வகை.
இந்திய வருமான வரிச்சட்ட விதிகளின்படி, தனி நபர்கள் விவசாயத்தின் மூலம் பெறும் வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு உச்சபட்ச வரையறை ஒன்றுமில்லை. ஆண்டிற்கு 10 கோடி சம்பாதித்தாலும், விவசாய வருமானம் என்று சொல்லி விட்டால் –
அதற்கு அஞ்சு காசு கூட வருமான வரி கட்டத்தேவை இல்லை….!!!
பெட்டிக்கடைக்காரர்கள் கூட, ஆண்டுதோறும் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விட்ட நிலையில் –
இந்த விதியை பயன்படுத்திக்கொண்டு, பல பணக்காரர்கள்
விவசாய வருமான என்கிற போர்வையில் வரிகட்டாமல் ஏய்க்கிறார்கள்…
தனிநபர் செலுத்தும் வருமானவரி விவரங்கள் பொதுவெளியில்
வைக்கப்படுவதில்லை என்பதால், எவ்வளவு “திருட்டுப்பயல்”கள்
இருக்கிறார்கள் என்றோ,
நமக்குத் தெரிந்த – பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள “பெரிய” மனிதர்களில் எவ்வளவு பேர் ஏமாற்றுப்பேர்வழிகள் என்பதோ வெளியில் தெரிவதில்லை.
..

..
ஆனால், அத்தகையோர், அரசியல்வாதிகளாக இருந்து,
அவர்கள் தேர்தலிலும் போட்டியிடக்கூடிய சூழ்நிலை ஏற்படும்போது –
தேர்தல் கமிஷன் முன்பாக, தங்கள் சொத்து, வருமானம் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு அஃபிடவிட் ( சட்டபூர்வமான அறிக்கை )
சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய அபூர்வ நிகழ்வுகளில் தான், சில “திருட்டுப்பயல்”களின் வேஷம் நமக்குத் தெரிய வருகிறது.
தெலங்கானா முதல்வர் திருவாளர் சந்திரசேகர் ராவ்,
தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு,
தேர்தல் கமிஷனின் முன்பாக, ஒரு அஃபிடவிட் சமர்ப்பித்திருக்கிறார்….
அதில் 2017-18 நிதியாண்டில் தனது விவசாய வருமானமாக 91.52 லட்சம்
ரூபாய் வரவுக்கணக்கு காட்டி இருக்கிறார்…
அதாவது மாதம் ரூபாய் 7.62 லட்சம் … இவருக்கு விவசாயம் மூலம்
வருமானம்(லாபம்) வந்ததாம்…!!!
அப்படி என்ன விவசாயம் செய்தால், நம்ம ஊரில் மாதம் ஏழு லட்சத்தி
அறுபத்திரெண்டாயிரம் ரூபாய் –
சம்பாதிக்க முடியும் என்பது திருவாளர் சந்திரசேகர் ராவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கிறது.
அவர், நமது ஏழை விவசாயிகளின் நன்மையைக் கருதி,
எத்தகைய விவசாயம் செய்தால்,
அதை எப்படிச் செய்தால்,
இந்த அளவிற்கு லாபம்-வருமானம் பெற முடியும்
என்பதை வெளியிட வேண்டும் என்பதாய் மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்வோமாக ….!!!
இந்த இடுகையின் “தலைப்பு” இவருக்காக போடப்பட்டது
என்று யாரும் தவறாக எடுத்துக் கொண்டுவிட வேண்டாம்…
இவர் உத்தமமான அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும்…!!! இல்லையென்றால்………… தெலங்கானா மக்கள் இவரை
தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பார்களா என்ன…?
——————————————-
பின் குறிப்பு –
இது தொடர்பாக “விவசாய வருமானம்” என்கிற பெயரில் நடக்கும் fraud குறித்து, அவசியம் பார்க்க வேண்டிய ஒரு இடுகை முன்னரே
இந்த தளத்தில் வெளிவந்திருக்கிறது…
விவரங்கள் அறிய நண்பர்கள் அதனை ஒருமுறை பார்க்கலாம்…
வருமான வரி கட்டாமல் ஏய்க்க வேண்டுமா….? சட்டபூர்வமாக ஒரு வழி …..!!!
.
——————————————————————————-



Sir,
Some of your articles are beautifully crafted to bring out the corrupt people before the public eyes without getting into legal issues. These corrupt people should be exposed before the larger public.
Please take steps to see that your articles reach a wider audience by publishing in largely circulated media. Wish you all success in your efforts.
ராகவேந்திரா,
உங்கள் பின்னூட்டத்திற்கான பதில் மூலமாக –
Face book, மற்றும் twitter accounts வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இது போன்ற, ஊழல்களை வெளிப்படுத்தும் இடுகைகள், அதிக அளவு நண்பர்களுக்கு சென்று சேர உங்கள்
உதவியை நான் நாடுகிறேன். இது போன்ற இடுகைகளை அதிக அளவு நண்பர்களுடன் share செய்யுங்கள்.
ஊழல் ஒழிப்பில் உங்களுக்கான பங்காக அது இருக்கும்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
சார், இங்கே ஏகப்பட்ட ‘திருட்டுப்பயல்’கள் இருக்கிறர்கள்.
“திட்டம் போட்டு திருடற கூட்டம்” திருடிக்கொண்டே இருக்குது;
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் – தடுக்கற மாதிரி நடிக்குது.
மக்களாய் பார்த்து சாட்டையை எடுக்காவிட்டால், இந்த திருட்டுக்கூட்டங்களை ஒழிக்க முடியாது.
ராவ் அவர்கள் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மோடி அரசு முக்கியத் திட்டங்களில் ஒன்றாக பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தை அறிவித்தது. …. இந்த பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்திருப்பாரா …?